முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

Описание к видео முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நம்மை மிகவும் நேசித்தார்கள்

இந்த உலகில் சமூகங்களை கட்டமைத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கண்டிப்பும் கடுமையுமாகவே தங்களது சமூகத்தை கட்டமைத்தார்கள்.

சிங்கப்பூர் சமூகத்தை லீகுவான்யூ என்ற கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த அரசியல் அறிஞர் உருவாக்கினார்.. ஆனால் அதற்காக அவர் திட்டமிட்ட மிக கடுமையான விதிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். கம்யூனிச ரஷ்யாவை உருவாக்கிய லெனினும் அப்படித்தான், மிக கடுமையான கண்டிப்பையும் கடுமையையும் அடிப்படையாக கொண்டே அவர் சார்ந்த சமூகங்களை கட்டமைத்தார்கள்.

காமராஜர் நம்முடைய தமிழ் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றியிருக்கிறார். இன்றைய தமிழகத்தின் அறிவியல் வளர்ச்சி என்பது காமராஜரின் கொடைதான் என்றால் மிகையில்லை. நாட்டிலுள்ள அணைக்கட்டுகளில் பெரும்பாலானவை காமராஜர் கட்டியதுதான். இத்தனைக்கும் மேல் மிக நல்ல மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார்.

காமராஜருடைய வீட்டுக்கு ஒரு நாள் ஆர் வெங்கட்ராமன் வந்தார். காமராஜருடைய அம்மா சிவகாசி பனை ஓலை விசிறி வீசிக்கொண்டிருந்தார். இதைக் கண்ட வெங்கட்ராமன் அவருடைய தாயாருக்கு ஒரு ஃபேன் வாங்கிக் கொடுத்தார். ஒரு நாள் தன் வீட்டுக்கு வந்த காமராஜர் அந்த ஃபேனை பார்த்தார். அதை கழற்றி கட்சி அலுவலகத்தில் மாட்டச் சொல்லிவிட்டார்.

நல்லவராகவே இருந்தாலும் இந்தக் கடுமை தேவையற்றது. ஒரு முதலமைச்சரை பெற்றெடுத்ததற்காக அந்த தாய் இப்படி சிரமப்பட வேண்டுமா என்ன ?

பல தலைவர்களுடைய வாழ்விலும் தேவையற்ற சில கடுமைகளை பார்க்க முடிகிறது.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) வாழ்வில் அத்தகைய தேவையற்ற கடுமை எங்கும் இருந்ததில்லை

பெருமானார் (ஸல்) அவர்கள்அன்பையும் கருணையையும் அடிப்படையாக கொண்டு முஸ்லிம் சமூகத்தை கட்டமைத்தார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке