#கருவூரார் #Karuvurar #Siddhasecrets
காரியத்தடைகளை நீக்கும் கருவூரார் சித்தரின் மந்திரம்: "சங் சங் யவசிநமா "
சிறந்த சிவ பக்தனாக இருந்த சோழ மன்னனுக்கு அப்போது ஒரு சங்கடம் ஏற்ப்படிருந்தது . அந்தச் சோழ மன்னன் கனவில் ஒருநாள் நடராஜ தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு சிலையைப் பொன்னால் செய்து தர வேண்டும் என்று சிற்பிகைளை வரவழைத்து ஒரு தூலம் பொன்னை நிறுத்திக் கொடுத்தான். ஏனோ தெரியவில்லை சிலை செய்யும் பணியில் சிக்கல் ஒன்று முளைத்துக் கொண்டே இருந்தது.பொன் வார்ப்பு நிலைத்து நிற்காது இருந்தது. அதனை கண்ட சிற்பி மனம் நொந்து போய் இறைவனை வேண்டி நின்றனர். ”நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது நான் சொன்ன கெடு தேதிக்குள் நடராஜர் சிலை தயாரித்திருக்க வேண்டும். இல்லை யெனில் எல்லோரையும் கழுவில் ஏற்றிவிடுவேன்’’ என்று மன்னன் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தான். அதன் காரண்மாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே கருவூர் சித்தர் வந்து சேர்ந்தார். ”ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீகள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன். நீங்கள் எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.” என்று கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர். கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு அதனை அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக் கண்டு எல்லோரும் வியப்பெய்தினர். சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர் தரிசனத்தை அந்தச் சிலையின் ஒளியிலும் வார்ப்பிலும் கண்டு திகைத்துப் போனவன் முகம் கருத்துப் போனது. ”நான் பத்தைரை மாற்றுத் தங்கம் அல்லவா கொடுத்திருந்தேன். நீங்கள் அதனை திருடி எடுத்துக் கொண்டு செம்பால் சிலை செய்து விட்டிருக்கிறீகள்...., அப்படிதானே?” என்று சிற்பிகளை சினம் கொண்டு பார்த்த போது அவர்கள் பயந்து நடுநடுங்கிப் போனார்கள். ”அரசே! இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்த கருவூரார்தான் செய்தார்” என்று அவரை சுட்டிக்காட்டினர். ‘அப்படியானால் அந்தக் கருவூராரை சிறையில் தள்ளுங்கள்’என்று சோழ மன்னன் ஆணையிட்டு சிறையில் தள்ளினான். திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்ட செயலினை கேள்வியுற்று அங்கு வந்து சேர்ந்தார். ” கருவூரார் பெருஞ்சித்தர். உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது வீண்பழி சுமத்தி விட்டாய். நீ கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக் கொண்டு வந்து உருக்கு’ என்று திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து தங்கமாக மாறியது. அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து தங்கமாக மாறியது. ‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து கொள்வாய்.செல்வம் யோகியை வசப்படுத்த முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறது” என்று திருமூலர் உபசேதம் செய்தார்.
இதனால் கருவூரார் புகழ் பரவ பவர அவர் மீது பொறாமையும், பகைமையும் கொண்டோரின் எண்ணிகையும் ஏராளம் முளைத்தது. வேதியர்கள் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் மன்னனிடம் தொடர்ந்து உரைத்தனர். மன்னன் அறிவான் மகான் அவரென்று. எனவே புகார் பலன் தரவில்லை. மன்னன் அவரைத் தண்டிக்க எண்ணாததைப் புரிந்து கொண்ட வேதியர்கள் ஒருநாள் கருவூராரை கொல்வதற்கு ஆயுதங்களுடன் துரத்த, அவரோ ஓடிச்சென்று சிவலிங்கத்தைத் தழுவிக்கொள்ள சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தார். இவரின் கதையை அபிதான சிந்தாமணி நூலில் காணப்படுகிறது. இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தி வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக் கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும் விளையாட்டு வம்பியாகவும் சித்தரித்துக் காட்டி பூஜை செய்யும் விதியை பாடலாக பாடியுள்ளார். இவர் போகரிஷியின் மாணவர் என்றும் சொல்வர். பல வைத்திய நூல்களும் எழுதியுள்ளார்.
நூல்:
கருவூரார் செய்த 11 நூல்கள்
கருவூரார் வாதகாவியம் 700
கருவூரார் வைத்தியம் 500
கருவூரார் யோக ஞானம் 500
கருவூரார் பலதிட்டு 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் 105
கருவூரார் பூரண ஞானம் 100
கருவூரார் மெய் சுருக்கம் 52
கருவூரார் சிவஞானபோதம் 42
கருவூரார் கட்ப விதி 39
கருவூரார் முப்பு சூத்திரம் 32
காலம்: கருவூரார் முனிவர் சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.
கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் ஒரு தனி சன்னதி உள்ளது.
தஞ்சை பெரியகோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூரார் சித்தர் அருள்பாலிக்கிறார்.
காரியத்தடைகளை நீக்கும் வாராஹி பூஜை,காரியத்தடைகளை நீக்கும் வாராஹி பூஜை ப,காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்,காரியத்தடைகளை நீக்கிட,காரியத்தடைகள் நீங்க,காரியத்தடைகள்,தடங்கல்களை நீக்கும் பரிகாரம்,காரியதடை நீங்க,
கருவூரார்,கருவூரார் சித்தர் மந்திரம்,கருவூரார் மந்திரம்,கருவூரார் சித்தர் மூல மந்திரம்,சித்தர்கள் மந்திரம்,கருவூரார் சித்தர்,கருவூரார் சித்தர் அருளிய சக்தி வாய்ந்த மந்திரம்,கன்னி ராசி மந்திரம்,உத்திரம் மந்திரம்,மந்திரம்,பணம் தரும் சித்தர் மந்திரம்,கருவூரார் சித்தர் ஜீவசமாதி,உத்திரம் நட்சத்திரம் மந்திரம்,கருவூரார் சித்தர் பாடல்கள்,வராஹி மூல மந்திர யந்திரம்,கருவூரார் சித்தர் வாழ்க்கை வரலாறு,சித்தர் கருவூரார்,கருவூரார் ஜீவ சமாதி,கருவூர் சித்தர்
Connect with Us:
To buy Saha Nathan Books: https://www.amazon.com/s?k=saha+natha...
Информация по комментариям в разработке