#Partnership சென்னையில் முதல்வர் மகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை-திடுக் ரிப்போர்ட் | Veena Vijayan case | SFIO case | CMRL
கேரளாவில் சசிதரன் கர்த்தா என்பவர் சிஎம்ஆர்எல் எனப்படும், 'கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிடெட்' என்ற கனிமங்களை வெட்டி எடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவரது நிறுவனத்தில் 2019 ஜனவரி 25ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அதில், 'மாதப்படி' என குறிப்பிட்டு, போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு மாமூல் கொடுத்த விவரம் எழுதப்பட்டு இருந்தது.
அந்த மாதப்படி பிரிவில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வந்த, 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு 1.72 கோடி ரூபாய் வழங்கியதாகவும் தகவல் இருந்தது.
இந்த பணப் பரிவர்த்தனை மீது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரிவித்தனர்.
அவர்கள் அந்த ரகசிய டைரியை வாங்கி, அதன் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, சசிதரன் கர்த்தா நிறுவனத்துக்கு மென்பொருள் மேம்படுத்தித் தர, வீணா விஜயன் நிறுவனத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன.
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, தொழில் ரீதியாக வீணா விஜயன் நிறுவனமும், சசிதரன் கர்த்தா நிறுவனமும் எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. அந்த நிறுவனத்திடம் இருந்து மென்பொருள் வாங்கப்படவும் இல்லை.
கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருக்க, வீணா விஜயன் நிறுவனத்திற்கு, 1.72 கோடி ரூபாய் மாமூலாக தரப்பட்டு இருப்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, வீணா விஜயன் மீது, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தனர்.
அத்துடன், இந்த மாமூல் விவகாரத்தை, மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எஸ்எப்ஐஓ எனப்படும், தீவிர மோசடிகள் விசாரணை அலுவலகமும் கையில் எடுத்தது. அதற்கு, வீணா விஜயன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என பினராயி விஜயனும் குற்றம் சாட்டினார். தன் மனைவியின் ஓய்வூதிய நிதியில் இருந்து, மகள் தனியாக நிறுவனம் துவக்கி நடத்தி வந்ததாகவும் கூறினார்.
இப்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை. எஸ்எப்ஐஓ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீணா விஜயன், கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்; இந்த வழக்கு தள்ளுபடியானது.
இதையடுத்து, எஸ்எப்ஐஓ அதிகாரிகள், வீணா விஜயன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, 'சம்மன்' அனுப்பினர்.
அதை ஏற்று, சில தினங்களுக்கு முன், சென்னை ராஜாஜி சாலையில் செயல்படும், எஸ்எப்ஐஓ அலுவலகத்தில், வீணா விஜயன் ஆஜராகி உள்ளார்.
அவரிடம், சசிதரன் கர்த்தா நிறுவனத்திலிருந்து, வீணா விஜயன் நிறுவனத்திற்கு, 2017 - 2018ம் ஆண்டில், வங்கி வாயிலாக, 1.72 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களை காட்டி விசாரித்துள்ளனர். இதனால், வீணா விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.#VeenaVijayancase #SFIOcase #CMRL
Информация по комментариям в разработке