UPS PENSION SCHEME IN TAMIL|அரசு பணியாளர்களுக்கு ஜாக்பாட்| Details in the Description 👇

Описание к видео UPS PENSION SCHEME IN TAMIL|அரசு பணியாளர்களுக்கு ஜாக்பாட்| Details in the Description 👇

மத்திய அரசு முக்கிய முடிவு! ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு ஒப்புதல்!

யுபிஎஸ்-UPS -ஓய்வூதிய திட்டம்: இந்த யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப பென்ஷன் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியம்(FAMILY PENSION) என்பது, அரசு ஊழியர் இறந்ததற்கு பின் அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்பத்திற்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டம் 2004 முதல் ஓய்வு பெற்ற, புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்(MINIMUM PENSION): குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்கிறது. தற்போது இருக்கும் ஓய்வூதிய திட்டத்தின்படி, ஊழியர்கள் 10 சதவிகிதம் பங்களிக்க வேண்டும். அரசின் பங்களிப்பு 14 சதவிகிதம் ஆகும். தற்போதைய யூபிஎஸ் - ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18.5% அதிகரிக்கப்பட்டுள்ளது.


UPS திட்டமும் ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இதுவே பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும், புதிய UPS திட்டத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் ஆகும். இருப்பினும் உத்திரவாதமான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உண்டு.

NPS திட்டத்தில் ஊழியர் பங்களிப்பு 10% அரசின் பங்களிப்பு 14% என உள்ளது. ஆனால் UPS திட்டத்தில் ஊழியர் பங்களிப்பு 10% மற்றும் அரசின் பங்களிப்பு 18.5% என இருக்கும்.

ஊழியர்களின் பங்களிப்பு தங்கள் சம்பளத்தில் 10% என்பது நிலையானதாகவும், அரசின் பங்களிப்பு 18.5% என்பது குறிப்பிட்ட கால மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மாறுபடும் என இது குறித்து நியமிக்கப்பட குழுத்தலைவர் முன்னாள் மத்திய நிதிச் செயலாளரும், தற்போதைய மத்திய கேபினட் செயலாளருமான திரு. டி.வி. சோமநாதன் தெரிவித்துள்ளார்.

இதுவெல்லாம் PFRDA இல் இணைந்து NPS திட்டத்தை பின்பற்றுவோருக்கானது.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை PFRDA விலும் முழுமையாக சேராமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்தாமல் நிச்சயமற்ற ஓய்வூதியம் என்ற நிலையில் உள்ளது. என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்..?


https://drive.google.com/file/d/164w4...

Комментарии

Информация по комментариям в разработке