தமிழ் மொழியின் வரலாறு - The history of Tamil Language I Part 1 Origin & Development of Tamil

Описание к видео தமிழ் மொழியின் வரலாறு - The history of Tamil Language I Part 1 Origin & Development of Tamil

தமிழ் தொன்மையான அதீத சிறப்புகளை கொண்ட மொழி .சிறந்த இலக்கண ,இலக்கிய வளங்களை கொண்ட ஓர் மொழி .தமிழோடு ஒத்த பிற மொழிகள் வளம் குன்றி வழக்கொழிந்து போன பின்னரும், தமிழ் காலத்தை வென்று வளம் குன்றாமல் இன்றளவும் தனது வரி ஒளி வடிவங்களை இழக்காமல் உள்ள தனி பெரும் மொழி தமிழ் மொழி. சங்க காலத்திற்கு முன்பே தமிழ் ஒப்பற்ற கட்டமைப்போடு இருந்தது .

தமிழ் என்பது உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும், மேலும் எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கருதப்படுகிறது.

திராவிட மொழி குடும்பத்தில் முதன்மையான மொழி ,தமிழ் மொழி .மேலும் இலங்கை,மலேசியா ,சிங்கப்பூர்,மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது . இலக்கண இலக்கிய மரபுகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக தமிழ் உள்ளது

தொல்காப்பியம் ,திருக்குறள் ,அகநானூறு,புறநானூறு ,சீவக சிந்தாமணி ,சிலப்பதிகாரம் ,பத்துப்பாட்டு,பதிற்றுப்பத்து ,பரிபாடல் என இலக்கண ,இலக்கிய வளங்களை கொண்ட மொழியாகவும் தமிழ் விளங்குகிறது

தமிழ் என்ற சொல்லில் த என்பது தமது என்று பொருள் படும்படியும் மிழ் என்பது மொழி.சொல் என்ற பொருளிலும் ,முழுமையாக நம் சொந்த மொழி என்ற பொருள் படும்படியாகவுள்ளதாக தமிழ் அறிஞர்களின் கூற்று .

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டு இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் ,சீன திபெத்திய மொழி குடும்பம்,ஆஸ்ட்ரிக் மொழி குடும்பம் மற்றும் திராவிட மொழி குடும்பம் என பிரிக்கப்பட்டது .இதில் தமிழ் திராவிட மொழி குடும்பத்தை சார்ந்த தொன்மையான மொழியாக திராவிட மொழி இயலின் தந்தை என்றழைக்கப்பட்ட திரு ராபர்ட் கால்டு வெல் நிறுவினார் .இது சமஸ்கிருதத்திலிருந்து தூண்டியது அல்ல என்றும் நிறுவினார் .இது தமிழ் மொழிந்த மீதான பொதுவான கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது .

பழங்கால தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்து வகையை சார்ந்ததாக இருந்தது,பின்னர் அது வட்டெழுத்தாக உருமாறி பின்னர் முழு வட்டெழுத்தாக மாறியது .சோழர்களின் காலத்தில் இன்றைய தமிழை ஒத்த வடிவம் உருப்பெற்றது

தமிழ் மொழியில் மட்டுமே இந்தியளவில் நிறைய கல்வெட்டுக்கள் கிடைக்க பெற்றன .இவற்றை வகை படுத்ததி ஆராய்ந்து அரிதான விளக்கங்களை காண உதவியவர் .திரு, ஐராவதம் மகாதேவன் ஆவார்

தமிழ் என்ற சொல் தொல்காப்பியம் ,சிலப்பதிகாரம் மற்றும் பழைய சங்க இலக்கண ,இலக்கிய நூல்களில் நிறைய இடங்களில் கையாளப்பட்டுள்ளது இது தமிழின் வளர்ச்சியை அதன் தொல் தன்மையை நமக்கு காட்டுகிறது .
இந்த பதிவு தமிழை விரும்பும் அனைவர்க்கும் மேலும் மொழி குறித்து அறிந்து கொள்வதற்கும் , மாணவர்கள் போட்டி தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்ய உதவியாகவும் இருக்கும்

Tamil is a language of ancient antiquity. It is a language with excellent grammatical and literary resources. Before the Sangam period, Tamil had an unparalleled structure.

Tamil is one of the oldest surviving language in the world and considered to be mother of all languages.

Tamil is the primary language in the Dravidian language family and is widely spoken in Sri Lanka, Malaysia, Singapore and Mauritius. Grammatical literary traditions are still preserved and Tamil is a language that can be easily understood by the people

Tamil is also a language with grammatical and literary resources such as Tholkappiyam, Thirukkural, Agananuru, Purananuru, Sivaka Chintamani, Silappathikaram, PathupattuPatiruppattu and Paripadal

Ancient Tamil scripts belonged to the Brahmi script, which was later transformed into a disk and then into a full disk.

A lot of inscriptions were found only in Tamil language in India .Mr. Iravatham Mahadevan helped to classify them and find rare explanations .

According to Tamil scholars, the word 'Tamil' means 'their' and Tamil means language. The word literally means 'our own language'.

You may visit for the recent details

https://www.tnarch.gov.in/epigraphy/i...

http://tamilvalarchithurai.com/

We do our best to educate and share through our videos to create content that is engaging, informative, and entertaining.

https://www.youtube.com/channel/UClFf...

Комментарии

Информация по комментариям в разработке