ஓசூரில் பெண்கள் மட்டுமே பங்கேற்று நடத்திய ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கல்யாண வைபவம்

Описание к видео ஓசூரில் பெண்கள் மட்டுமே பங்கேற்று நடத்திய ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கல்யாண வைபவம்

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூரில், பெண்கள் மட்டுமே பங்கேற்று நடத்திய ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்ரீ முக்தாபாய் மகிளா பஜனை மண்டலி டிரஸ்ட், என்ற தனியார் அறக்கட்டளையின் சார்பில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

முனீஸ்வர் நகர், ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோவிலில், காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில், அஷ்டபதி, நவபத்தி, அபங்கம், டோலோற்சவம், கோலாட்டம், கும்மியாட்டம், ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, ஏராளமான பெண்கள் ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவை பாராயணம் நடைபெற்றது.

பின்னர் சம்பிரதாய நாம சங்கீர்த்தனம், மற்றும் சீர் வரிசைகள் கொண்டுவரப்பட்டு ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் வைணவ சம்பிரதாயப்படி முத்துக்குத்தல், மாலை மாற்றுதல், திருமஞ்சன ஸ்னானம் ஆகியன நடைபெற்றது. பின்னர் திருமாங்கல்ய சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் பிரத்தியேகமாக பெண்கள் மட்டுமே பங்கேற்று நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனைகள் செய்து வேத மந்திரங்களை ஓதி மாங்கல்ய தாரணம் எனப்படும் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதன் பின்னர் ஆண்டாள் ரங்க மன்னார் தம்பதியராக எழுந்தருளி காட்சி அளிக்க வந்திருந்தோர் சுவாமியை வழிபட்டனர் பின்னர் மகா மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டு அன்னதான வைபவம் நடைபெற்றன.

இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரங்க மன்னாரை தரிசித்து வழிபட்டு சென்றனர்.

Комментарии

Информация по комментариям в разработке