ஓசூரில் அரசு பள்ளிக்கு 1.86 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்கள்.அமைச்சர் திறந்து வைப்பு.

Описание к видео ஓசூரில் அரசு பள்ளிக்கு 1.86 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்கள்.அமைச்சர் திறந்து வைப்பு.

ஓசூரில் தனியார் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ், அரசு பள்ளிக்கு 1.86 கோடி ரூபாய் மதிப்பிலானபுதிய வகுப்பறை மற்றும் கட்டிடங்கள். அமைச்சர் சக்கரபாணி திறந்து வைப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அரசு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக ஓசூரில் இயங்கி வரும் தனியார் பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பு நிதியின் கீழ்,

எம் எஸ் தோனி தனியார் பள்ளி சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள்,

ஜி ஆர் பி டைரி ஃபுட் ப்ராடக்ட்ஸ் சார்பில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு வகுப்பறைகள்,

மைக்ரோடெக் சி என் சி நிறுவனம் சார்பில் 16.5 லட்சம் ரூபாய் பங்களிப்பில் நமக்கு நாமே திட்டம் வாயிலாக, 46.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிப்பறை கட்டிடங்கள் மற்றும்

எம் பி லேட்ஸ் நிதி 2023-24 திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்

என மொத்தம், ஒரு கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன.

இவற்றை இன்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி கே எம் சரயு, கிருஷ்ணகிரி எம்பி, கே. கோபிநாத், ஓசூர் எம்எல்ஏ, ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சமூக பங்களிப்பின் கீழ், அரசு பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி, நிதி உதவி வழங்கிய தனியார் பெரு நிறுவன நிர்வாகிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Комментарии

Информация по комментариям в разработке