Brahmam Ekam-Sengottai Sri.Avudai Akkal-Sriram Parthasarathy

Описание к видео Brahmam Ekam-Sengottai Sri.Avudai Akkal-Sriram Parthasarathy

"Brahmam Ekam" a vedanthic exposition revealed by Sengottai Sri.Avudai akkal,the one who has seen it all.

Sengottai Sri.Avudai akkal-her story,her first meeting with her enlightened master Sri.Sridhara ayyaval is a well known episode for all tamiizhians as Akkal is a household name in Tirunelveli-Tamilnadu.

In all her songs ,she mentions her Guru Sri Sridhara ayyaval as Guru Venkateshwara not only as her krithi mudhra but also she expresses her eternal gratitude towards him through her songs.

My spiritual master Guruji Viswanath presented me a beautiful compilation of Avudai Akkal's vedanthic composition in 2004,as he not only belonged to Tirunelveli but also a desendant of her parampara.

I have sung this song "Brahmam Ekam" in Virutham format-Raga malika.
Flow of Ragas as follows...
1.Bhouli
2.Anandha bhairavi
3.Hamsanandhi
4.Bhagya sri
5.Sindhu bhairavi.
I feel overwhelmed and blessed to sing and release this for all of you today on a Rama Navami(Lord Rama's Birthday)

Full Song below.

ஸ்ருஷ்டிக்குமுன் ஸச்சிதானந்தம்
ஆகிய பிரம்மம் ஏகம்
கோடி திருஷ்யப்ரபஞ்சம்
நசிக்கும் ப்ரளயத்தில் பிரம்மம் ஏகம்.
வ்யஷ்டி ஸமஷ்டி விதமாய்
இருந்தாலும் பிரம்மம் ஏகம்.
கோடி வேதாந்த ஸாஸ்திரம்
விசாரித்துப்பார்த்தாலும் பிரம்மம் ஏகம்.

மூலப்ரக்ருதிக்கு முன்னேயும்
பின்னேயும் பிரம்மம் ஏகம்.
மாயை முக்குணமாகியே நிற்குணமானாலும் பிரம்மம் ஏகம்.
கால த்ரயத்திற்கப்பாலும்
இப்பாலும் பிரம்மம் ஏகம்.
மாயை காரண காரியம்போலே இருந்தாலும் பிரம்மம் ஏகம்.

கர்மவிதத்தில் வெகுவிதமானாலும் பிரம்மம் ஏகம்.
ஸத்துமஸத்தும் ஸதஸத்துமானாலும் பிரம்மம் ஏகம்.
வேத சாஸ்திரங்களாலே
அறியக்கூடாது காண் பிரம்மம் ஏகம்.

அந்தப்பரப்பிரம்மத்தின்
இடத்தில் உதித்த மாயை துச்சம்
ஆனாலும் வஸ்துவைப்போல்
மயக்கும் காண் அந்த மாயை
சுத்தஸ்படிக நிறம்போல் இருக்கும்
காண் அந்த மாயை
தோன்றித்தோன்றாதிருந்து
அந்தகாரம் போல் மூடும்
காண் அந்த மாயை
எந்தப்படி வேணுமோ-அந்தப்படி
செய்யும் அந்த மாயை.
ஜெகதீஸ்வரராலே அறியக்
கூடாதுகாண் அந்த மாயை.

சுத்த குணம்போலே கோலம்
கொள்ளச்சொல்லும் அந்த மாயை
பல கோலமும் ஸ்தூலமும்
காலவசமாக்கும் அந்த மாயை
மெத்தசுகம்போலே தோற்றிய
துக்கம் காண் அந்த மாயை
வெகுமேதையாய் போதமாய்
பேதமாய்க்காட்டும் காண்
அந்த மாயை.

அந்த மாயாகுணம்
சொல்லித்துலையாது ராமா ராமா
இந்த ஆச்சரியத்தை
யாருடன் சொல்வேன் ராமா ராமா
த்வந்தவலையில் சுழலாத
பெயருண்டோ ராமா ராமா
கள்ளச்சூதும் கபடும்
வினைகளும் இதற்குண்டு
ராமா ராமா
எந்த தேகாதியும் இந்த
விதமாச்சே ராமா ராமா

காசினியில் உள்ளோரும்
பாசம்மேலாச்சே ராமா ராமா
மாயாகுணத்தாலே ஜனனம்
எடுத்ததும் போரும் போரும்
இந்த மண்ணில் பிறந்தது
எண்ணித்துலையாது ராமராமா
ஓயாத ஜென்மம் ஒழிந்து
துலைந்தது ராம ராமா
உற்பத்தி நாசத்தினால்
பயம் தீர்ந்தது ராமா ராமா

வாருங்கள் ஜீவாளே ஜனனம்
எடுத்ததும் போரும் போரும்
நீங்கள் மாண்டு பிறந்து வளர்ந்து திரிந்ததைப்பாரும் பாரும்
பேரும் பெருவாழ்வும் மெய்யென்றிருந்ததும்
போரும் போரும்
ஆதி பிரம்மாவும் செத்து
பிணமாய் கிடந்ததை பாரும் பாரும்.

தேவபூஜை யாகங்கள் ஜெபங்கள் தவங்கள் போரும் போரும்
நல்ல சித்த புருஷாளை
தேடி விசாரித்து பாரும் பாரும்
மூக்கை பிடித்து முழுமோசம்
போனதும் போரும் போரும்
நமக்குள் ஈசன் நடுவாய்
இருப்பதைப் பாரும் பாரும்.

காவேரி ஆடி கலங்கித்
திரிந்ததும் போரும் போரும்
கர்ம காயத்துக்குள் ஈசன் காட்சி கொடுப்பதை பாரும் பாரும்
சேதுவும் காசியும் தீர்த்தமும்
சேர்வையும் போரும் போரும்
ஞானதேசிகர் யார் என்று
தீரவிசாரித்துப்பாரும் பாரும்

ஜடையோடு தாவடம் ஸ்திரமாய் அணிந்ததும் போரும் போரும்
ஆதி ஸச்சிதானந்தம் ததும்பியிருப்பதைப்பாரும் பாரும்
ஆலயம்தோறும் அலைந்து
திரிந்ததும் போரும் போரும்
மனதாலயம் தன்னில் அரனார் இருப்பதைப்பாரும் பாரும்.

உன் தெய்வம் என் தெய்வம்
என்று உழன்றதும் போதும் போதும்
தன்னுள் தெய்வம்என்று எண்ணித் தானாய் இருப்பதைப்பாரும் பாரும்
ஓதிப்படித்ததோர் மந்திர
கர்மங்களும் போரும் போரும்
புத்தியுதி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப்பாரும் பாரும்

நந்தவனம் தோறும் நன்மலர்
கொய்ததும் போரும் போரும்
உன் சிந்தை வனத்தில் சிவனார்
இருப்பதை பாரும் பாரும்
தேக-அபிமானங்கள் விட்டுவிடும்
இது போரும் போரும்
நல்ல ஜீவனை யார் என்று
தீரவிசாரித்துப்பாரும் பாரும்

காரணம் இல்லாத காரியம்
ஏதென்றார் எங்கள் தேசிகர்
ஜகத்தை கானல் ஜலம்போலே கண்டுகொள்ளச்சொன்னார்
எங்கள் தேசிகர்
வேறொன்றினாலேயும்
அறியப்படாது என்றார்
எங்கள் தேசிகர்
பிரம்மவிசாரத்தினாலே
அறிந்து கொள்ளச்சொன்னார்
எங்கள் தேசிகர்

சராசரத்தை பிரித்தறியச்
சொன்னார் எங்கள் தேசிகர்
ஸச்சிதானந்த சொரூபம் தானே விளங்கும்என்றார் எங்கள் தேசிகர்
கூர்ம புத்தியினால் தத்துவம்
காட்டினார் எங்கள் தேசிகர்
பஞ்ச கோசச்சுவர்போனால்
வெட்டவெளி என்றார்
எங்கள் தேசிகர்

மூடத்தனமான புத்திக்கு
இருட்டென்றார் எங்கள் தேசிகர்
ஞானம் ஏகமாம்புத்திக்கு
சந்திரோதயம் என்றார்
எங்கள் தேசிகர்
கூட்டஸ்தரான பரப்பிரம்ம
வஸ்து காண் எங்கள் தேசிகர்
குரு அகண்ட வேங்கடேஸ்வர
மூர்த்தி காண் எங்கள் தேசிகர்
#avudaiakkal #sriramparthasarathy

Комментарии

Информация по комментариям в разработке