பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா வாரிசுதாரர்கள் பால் அபிஷேகம் செய்து மரியாதை

Описание к видео பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா வாரிசுதாரர்கள் பால் அபிஷேகம் செய்து மரியாதை

ங்கரன்கோவில் அருகே சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாள் விழா.வாரிசுதாரர்கள் பால்குடத்துடன் மேளதாள ஊர்வலம் வந்து அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்... சென்னையில் பூலித்தவருக்கு சிலை நிறுவ வேண்டுமென கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 309வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வரிசுதாரர்களான கோமதி முத்து ராணி துரைச்சி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேளதாளங்களுடன் பால்குடம் ஊர்வலம் வந்து பூலித்தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்கள்...

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர்

Комментарии

Информация по комментариям в разработке