எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is the Correct Ayanamsa? Part 2

Описание к видео எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is the Correct Ayanamsa? Part 2

வாக்கியம் பஞ்சாங்கம் சரியா அல்லது திருக் கணித பஞ்சாங்கம் சரியா என்று வாய்க்கு வந்ததை மொக்கை போடாமல், உண்மையிலேயே அந்த முறைகளின் பின்னே உள்ள வானியல் தரவுகள் எந்த அளவு சமகால வானியல் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன, மேலும் திருக் கணிதம் என்பதிலேயே எத்தனை விதமான வகைகள் உள்ளன என்பது பற்றி எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து, நம்மிடம் உள்ளதில் எது சரியான #அயனாம்சம் என்பதன் ஆழ்ந்த புரிதலை மற்றும் எனது இடைக்கால தீர்ப்பை உங்களுக்கு இந்த உரை ஊடாக வழங்குகிறேன். ஒரு 4 PhD செய்வதற்கு சமமான உழைப்பு, நேர்மை மற்றும் நேர்த்தி இந்த உரையின் பின்னே சென்றுள்ளது.

வாக்கியம் முறையின் பஞ்சாங்க கணனம் சொல்லும் அயனாம்சம், திருக் கணித முறையில் அமைந்த உண்மையான சித்திரபட்ச அயனாம்சம், பாரம்பரிய லஹரி, பி வி ராமன், கே எஸ் கிருஷ்ணமூர்த்தி, பூச/ புஷ்ய பட்சம், சூரிய சித்தாந்தம், சந்திரஹரி, சி ஜி ராஜன் அயனாம்சம் போன்ற அனைத்துவித முறைகளையும் அவற்றின் ஆணி வேர் வரை சென்று பார்த்து இருப்பதில் எது சிறந்தது என்பதை தரவு, காட்சிப்படுத்தல் மற்றும் தர்க்க ரீதியாக விளக்கும் முயற்சி இது.

உலகத்திலேயே இதுபோன்ற விரிவான அயனாம்சம் சார்ந்த உரை முதலில் தமிழில் வெளியாகிறது என்ற பெருமையோடு ஒரு மாபெரும் தெளிவை நோக்கி நகருங்கள். இது இந்திய மற்றும் தமிழ் சோதிடத்துக்கு என் வாழ்நாள் பங்களிப்பு. புதிதாக அயனாம்சம் கண்டுபிடிக்கிறேன் அல்லது நான் சொல்லும் அயனாம்சம் தான் சரி என்று பேச வரும் எவரும் இனிமேல் நான் தொட்ட உயரங்களை தாண்டி பேசவேண்டியது கட்டாயமாகும். இதனை முழுதாக கண்டு அறியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்! இந்தப் பயணத்தில் என்னோடு இணையுங்கள்!

இந்திய / தமிழ் ஜோதிடப் பரப்பில் இருக்கும் ஒரு பெரிய அறிவுசார் வெற்றிடத்தை இந்த உரை நிரப்பும். இந்திய ஜோதிட வரலாற்றின் மிக முக்கியமான தவறவே விடக்கூடாத அறிவியல் சார்ந்த பார்வை உங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில் முழுதாக கண்டு அறியவும்.

முனைவர் ரமேஷ் தங்கவேல்

பஞ்சாங்க அடிப்படைகள் - 6 | அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கான சோதிடம் | 17
Panchamgam Basics - Part 6

எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is the Correct Ayanamsa? Part 2

இந்த காணொலியின் உள்ளடக்கம்:

00:00:00 - தொடக்கம் | Entry
00:00:11 - முன்னோட்டம் | Highlights
00:01:41 - உள்ளடக்கம் அறிமுகம் | Content Intro
00:06:10 - வாக்கியம் தொடர்ச்சி | Vakkiyam discussion Continued
00:08:29 - பஞ்சாங்க கணனம் | Panchanga Kananam
00:10:00 - பராசரரின் அயனாம்சம் | Parasara's Ayanamsa
00:11:04 - வாக்கியம் அயனாம்சம் | Vakkiyam continued
00:13:26 - தற்போதைய முறைகளின் நிறைகள் குறைகள் | Current system merits and flaws
00:17:21 - உண்மையான சித்திரை பட்ச அயனாம்சம் | True Chitrapaksha
00:26:21 - லஹரி அயனாம்சம் / ராஷ்ட்டிரிய பஞ்சாங்கம் | Lahiri Ayanamsa - Rashtriya Panchang
00:30:26 - சூர்ய சித்தாந்த அயனாம்சம் | Sri Surya Siddhantha Ayanamsa
00:37:15 - பூச பட்ச / புஷ்ய பக்ஷ அயனாம்சம் | Pushyapaksha Ayanamsa
00:49:12 - ரோகிணி பட்ச அயனாம்சம் / பகன் & பிராட்லி | Revathi Paksham - Fagan & Bradley
00:57:29 - ரேவதி பட்சம் / பிவி ராமன் அயனாம்சம் | Revathi Paksha / BV Raman Ayanamsa
01:04:28 - KP அயனாம்சம் / KS கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் | KP / KSK Ayanamsa
01:10:28 - மூல பட்ச அயனாம்சம் / சந்திரஹரி அயனாம்சம் | Moolapaksha Ayanamsa / Chandrahari
01:17:38 - குணம் நாடி குற்றமும் நாடி | How to judge
01:19:35 - பலவித அயனாம்சங்களின் தொகுத்த பார்வை | Ayanamsa consolidated view
01:26:09 - இடைக்கால தீர்ப்பு - இருப்பதில் சிறந்த அயனாம்சம் எது? | Interim judgement on Ayanamsa
01:30:57 - அடுத்து வருவது? | Coming up next

இணைந்து பயணிக்க | To subscribe:    / @aimlastrology  

நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - https://aimlastrology.in/katturaigal
இலாப நோக்கமற்ற நடுநிலையான, நம்பகமான கட்டண சோதிட ஆலோசனைகளுக்கு நாடலாம் - https://aimlastrology.in/services

இந்தக் காணொலியில் குறிப்பிட்ட கட்டுரைகள்:
https://aimlastrology.in/2020/12/t025/

#learnastrology #rasipalan #tamilastrology
‪@aimlastrology‬

Комментарии

Информация по комментариям в разработке