செந்தூர் முருகன் கோவிலிலே பாடல் HD | S.S.ராஜேந்திரன், C.R.விஜயகுமாரி இனிமையான காதல் பாடல் .

Описание к видео செந்தூர் முருகன் கோவிலிலே பாடல் HD | S.S.ராஜேந்திரன், C.R.விஜயகுமாரி இனிமையான காதல் பாடல் .

#theanisai #msv #lovesongs #sivajilovesongs #susheelahits #oldsongs
செந்தூர் முருகன் கோவிலிலே பாடல் HD | S.S.ராஜேந்திரன், C.R.விஜயகுமாரி இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in description .
Movie : Santhi (1965 film)
Music : Viswanathan–Ramamoorthy
Song : Senthur Murugan
Singers : P. Susheela, P. B. Srinivas
Lyrics : Kannadasan
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

பெண் : கண்கள் இரண்டை வேலென எடுத்து
கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென எடுத்து
கையோடு கொண்டானடி
கன்னியென் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

பெண் : ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் நின்றானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

ஆண் : நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கெனச் சொன்னானடி
வாழ்கெனச் சொன்னானடி

ஆண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

Комментарии

Информация по комментариям в разработке