Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami

Описание к видео Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami

நம் மரபில் இருக்கும் அனைத்து வழிபாடுகளும் பொருள் பொதிந்தன. குறிப்பாகக் காலபைரவர் வழிபாடு நம் தேசமெங்கும் பரவி விளங்கும் வழிபாடு. கஷ்டத்திலிருப்பவர்களுக்கு விரைவில் நிவாரணம் தரும் இந்த வழிபாடு குறித்து விளக்குகிறார் ரேவதி சங்கரன்.

ரேவதி சங்கரன் மொழிபெயர்த்த கால பைரவாஷ்டகம்

கால பைரவாஷ்டகம்
தமிழாக்கம் - ரேவதி சங்கரன்.

1. தேவராஜன் பணிந்து வணங்கும் புனித கமலப்பாதனே!
நாகம் புரிநூலாக இளம் பிறையணி தயாளனே!
நாரதர் முனி யோகியர் பணி திகம்பரேசனே!
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்.

2. கோடிசூர்யன் ஒளிவிடும் முக்கண்ணன் நீலகண்டனே
காலகாலனே த்ரிசூலம் ஏந்தும் கமலக்கண்ணனேen
என்றும் விளங்கும் ஈசனே எமக்கருள் செய் நாதனே
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்.

3. சூலம் கோடரி பாசம் தண்டம் ஏந்தும் கரிய வண்ணனே
தோற்றம் மாற்றம் ஏதுமில்லா ஆதியே முதல்காரணா
அற்புதமாய்ச் சுழன்று ஆடும் கலையில் வல்ல நாயகா
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்.

4. வரங்கள் அருளி முக்தி தரும் எழில் நிறைந்த உருவனே
அரனின் வடிவே அடியர் அன்பில் குழைந்திடும் முதல்வனே
மணிகள் ஒலிக்கும் இடையணிதிகழ் அகிலபுவன நாதனே
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்

5. தர்மம் நிலைக்கும் பாலமாய் முன் கர்மம் போக்கும் சீலனே
தீமை நீக்கி நல்லவழியில் நடத்தும் தர்மபாலனே
மேனியில் பொன் நாகங்கள் அணிசெய்யும் பிரகாசனே!
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்

6. ரத்னப் பாதுகைகள் திருப்பாதங்களில் விளங்கிட
நாதனாய் என்றென்றும் நிலைக்கும் இணையில்லாத தேவனே
முக்தியளிக்கும் கோரைப்பற்கள் மரணபயம் போக்குமே
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்

7 அட்டகாச சிரிப்பொலி படைப்பனைத்தும் அழிக்குமே
அனல் எழ விழிக்கும் பார்வை எங்கள் பாபம் போக்குமே
கபாலமாலை அணிந்தவா அஷ்ட சித்தி அருளுவாய்
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்

8. பூதகணங்கள் நாதனே நிறைந்த புகழைத்தருவனே
காசி வாழ்வோர் நன்மைதீமை கணித்து அருள் புரிவனே!
நீதி நெறியில் எம்மை நடத்தும் பழைமை உலகநாதனே
காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்


கால பைரவாஷ்டகம் கேட்க :
   • ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்!  

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Комментарии

Информация по комментариям в разработке