நோய் தீர்க்கும் திருப்புகழ் | இருமலும் ரோக | IRUMALUM ROGA | TO GET CURED OF DISEASES | WITH MEANING

Описание к видео நோய் தீர்க்கும் திருப்புகழ் | இருமலும் ரோக | IRUMALUM ROGA | TO GET CURED OF DISEASES | WITH MEANING

இருமலு(ம்) ரோக(ம்) முயலகன் வாதம் எரிகுணநாசி விடமே

இருமல்(Cough),
ரோகம் ( சாத்தியரோகம் - தீர்க்ககூடிய , அசாத்தியரோகம் -தீர்க்கமுடியாத , யாப்பியரோகம் - நாள்பட்ட வியாதி), முயலகன் என்னும் வலிப்பு நோய் (Epilepsy), வாதம் ( Rheumatoid arthritis & Paralysis),
எரிக்கும் தன்மையுடைய நாசி (Burning Nose), பலவகைப்பட்ட நச்சுக்களால் உடம்பில் உண்டாக்குகின்ற நோய்கள்.

நீரிழிவு விடாத தலைவலி சோகை எழுகளமாலை இவையோடே

நீரிழிவு (Diabetes), விடாத தலைவலி (Acute Headache/Migraine), இரத்த சோகை (Anemia), எழுகளமாலை என்னும் கழுத்தைச் சுற்றி உண்டாகும் புண்கள் (Blisters around the neck), ஆகிய நோய்களோடு

பெருவயி றீளை எரிகுலை சூலை பெருவலி வேறும் உள நோய்கள்

வயிற்றில் நீர் கோத்து வீங்கும் பெருவயிறு என்னும் நோய் (Edema in stomach), நுரையீரல்களில் கட்டிக் கொள்ளும் கோழை (Congestion in Lungs), நெஞ்சு எரிச்சல் (Heartburn), சூலை நோய் என்னும் கொடிய வயிற்றுவலி (Acute pain in stomach due to various reasons), பலவிதக் காரணங்களால் உடம்பில் உண்டாகும் வலிகள் (Extremely painful diseases), மற்றும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் வேறுபல நோய்கள்.

பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே!

மேலே சொன்ன நோய்களும், சொல்லாமல் விடப்பட்ட நோய்களும், எந்த பிறவியிலும் என்னை வந்து துன்பறுத்தாமல் இருக்க உன்னுடைய திருவடிகளை அடைக்கலமாக அருள்வாயே முருகா!!!

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய அனேக இசைபாடி வருமொரு காலவயிரவர் ஆட வடிசுடர்வேலை விடுவோனே

நிறைய போர்ப்பாடல்களை வீரத்தோடு போர்க்களத்தில் பாடிக் கொண்டு காலபயிரவர் ஆடுவது போல் படையெடுத்து வருகின்ற கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை (பதாதி) மடியும் படி அழகிய கூர்மையான சுடர் போன்ற வேலை விடுகின்றவனே !!!

உட்பொருள்: அடக்கமுடியாத அசுரர்களை வென்றவன் நீ .. ஆகையால் உன் வேலுக்கு முன் என் நோய்கள் எம்மாத்திரம் .. அவையும் அழிந்து போகும்

தருநிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திருமாதின் மணவாளா
கற்பக மரத்தின்(தரு) நிழலில் அமர்ந்து அரசு புரியும் மேகங்களை ஊர்தியாகக் கொண்ட தேவர்களின் தலைவன் இந்திரனின் மகளாகிய தெய்வயானையின் மணவாளனே முருகா!
உட்பொருள்: தெய்வானை - க்ரியா சக்தியின் அடையாளம் (Power of action). தெய்வானையின் மணாளனே முருகா நீ இனியும் தாமதிக்காமல் உடனை என் நோய்களை தீர்த்து அருளவேண்டும்

சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவு(ம்) பெருமாளே!

நீரால் சூழப்பட்ட பூவுலகத்தின் நடுவில் சிறப்போடு விளங்கும் திருத்தணி மலையில் விளங்கி நிற்கின்ற பெருமாளே முருகா!

Комментарии

Информация по комментариям в разработке