மஹாபெரியவா ஜெயந்தியில் கேளுங்கள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரபாமாலை Mahaperriyava Pamalai

Описание к видео மஹாபெரியவா ஜெயந்தியில் கேளுங்கள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரபாமாலை Mahaperriyava Pamalai

#mahaperiyava #mahaperiyavajayanti #periyava #anusham #chandrasekarendra_sadhguru_akshara_pamalai #ஸ்ரீசந்திரசேகரேந்திர_சத்குரு_அட்க்ஷரபாமாலை

இந்தப் பாடல்களை 1983-ல் ஸ்ரீ மஹாபெரியவா முன் ஸ்ரீ.வெங்கடேசன் ஸ்ரீ பெரியவா ஆசிர்வாத ஒப்புதலுடன் பாடினார்.
பாடியபின் அவர் ஸ்ரீ பெரியவாளிடம் இதை யார் எப்பொழுது பாடினாலும் நீங்கள் அங்கு வந்தருள வேண்டும் என்று பணிவுடன் கேட்க ஸ்ரீ மகாபெரியவாளும் “ வருவேன்” என்று ஆசி வழங்கினார்.

In 1983, Shri Venkatesan sang this poem in front of Mahaperiyava. After completing this poem, he requested that any devotee whenever sings this poem, Periyava should come there. Periyava simply said “I will come“. What a great and selfless devotee Shri Venkatesan, who was so kind enough to share his same experience and his blessings to all devotees in the world. Mahaperiyava’s anugraham is completely limitless! This incident was narrated by Brahmasri Vedapuri mama in this book.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை


அன்பின் வடிவமான சங்கரன்
அத்வைத பேரொளி ஞான சங்கரன்
அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்
ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்
இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்
ஈசனோடு ஆடும் இணையடி சங்கரன்
உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்
ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்
எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்
ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்

ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்
ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்
ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்
கண்னின் இமைபோல் காக்கும் சங்கரன்
காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்
கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்
கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்
குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்
கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்

கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்
கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்
கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்
கோபுர கலசமாய் திகழும் சங்கரன்
கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்
சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்
சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்
சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்
சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்
சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்

சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்
செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்
சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்
சைவத்திருமுறை போற்றும் சங்கரன்
சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்
சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்
சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்
ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்
ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்
தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்

தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்
திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்
தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்
துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்
தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்
தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்

நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
நூலறிவில் மெய்ஞான சங்கரன்
நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்

பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
பிள்ளையினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்

மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்

மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன் 5.58
ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்

ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
வானவர் போற்றும் தேவ சங்கரன்
வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்

வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்

அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
உரைத்திட வகை செய்த சங்கரன்

Комментарии

Информация по комментариям в разработке