Greatness of Holy Ramadan | ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Описание к видео Greatness of Holy Ramadan | ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்
பெரும் ஆனந்தம் கொண்டான் ரமலான் மாதம் வந்ததும்
தன் தாயைக் கட்டித் தழுவிக்கொண்டு கெஞ்சினான் ஜனம்
மறவாது ஸஹர் நேரமதில் எழுப்ப வேண்டுமாய்
மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டுமென்றவன்
--------------------------------------------------------------------------------------------------------------------
புலவர் ஆபிதீன் காக்கா அவர்கள் எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய, ரமலான் மாதத்தின் சிறப்பினை குறிப்பிடும் "ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் "என்ற பாடல்.
--------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் வரிகள்

உபவாச நன்மை சொல்லுவேன் கேட்பீரே மாந்தரே
உயர் நோன்பு மாத பெருமையே இதுவாகும் மாந்தரே

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்
பெரும் ஆனந்தம் கொண்டான் ரமலான் மாதம் வந்ததும்
தன் தாயைக் கட்டித் தழுவிக்கொண்டு கெஞ்சினான் ஜனம்
மறவாது ஸஹர் நேரமதில் எழுப்ப வேண்டுமாய்
மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டுமென்றவன்

மாதா மதிக்கவில்லை அருமை மைந்தன் சொன்னதை
மறுநாளில் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான்
ஆதாரமின்றி வருந்துவதை கண்ட தாயவள்
அன்போடணைத்து ஆறுதலாய் சாற்றினால் இதை
போதாத வயதில் நோன்புனக்கு கடமையல்லவே
பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள்

வல்லோனுரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை
வையம் சிறக்க நமக்களித்த மாதமல்லவோ
சொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம் மீதிலே
சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ
கல்லோ உன் நெஞ்சம் கூறு தாயே கருணையில்லையா
கண்ணாலே எந்தன் ஆண்டவனை காண வேண்டுமே

அந்நாள் இரவு முழுதும் அவன் தூங்கவில்லையே
ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
எண்ணம் போல் ஸஹர் நேரமது வந்த போதிலே
எழுந்தோடி நோன்பு வைத்து மனம் பூரிப்பெய்ததே
ஆனாலும் அன்னை தந்தை கூடி அதட்டினார்களே
ஆகாது என்று சாதனையாய் வம்பு பேசினான்

பொன்போல வானில் சூரியனும் ஜோதி வீசவே
பசியாற கூவி தாயழைக்க பாலன் கூறினான்
அன்னையே நோன்பு முறிந்து விட்டால் பாவமாகுமே
அநியாயமிதே ஆண்டவனே தண்டிப்பானம்மா
அன்போடிறைவன் சன்னதியில் உன் பொருட்டடா
அஞ்சாதே நானே பதிலுரைப்பேன் என்று கூறினாள்

திருவான அஸர் என்னும் தொழுகை நேரம் நெருங்கவே
தண்ணீரின் தாகம் அதிகமாகி நா வறண்டதால்
பரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே
பரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சை ஆகினான்
பிரியம் மிகுந்த செல்வன் உயிர் பிரிந்து சென்றதால்
போனாயோ என்று கூடி அழுது புலம்பி வாடினார்

இனிமை நிறைந்த பாங்கின் ஓசை செவியில் கேட்கவே
இறையோனை தொழுது வேண்டினார்கள் ஒன்று கூடியே
தனிமையில் அன்னை ஆண்டவன்பால் கைகள் ஏந்தியே
தகுமோ இறைவா என்று துவா கேட்டு புலம்பினாள்
இனி யாது செய்வேன் என்று அன்னை நாவு நோகவே
இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள்

தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும் போதிலே
தலை வாசலில் ஓர் சாது மஹான் வந்துமே நின்றார்
எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழையாதலால்
ஏதேனும் உணவு தந்துதவ இயலுமோ என்றார்
சிந்தை இறங்கி வீட்டிலன்று சமைத்திருந்ததை
சந்தோசமாக தந்த போது சாது வினவினார்

கவலை மிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
கடவுள் கருணை உங்கள் மீது உண்டாகுக என்றார்
சவமாகினானே எங்கள் ஒரே செல்வப் பாலகன்
சாகா வரமே தருக உம்மால் ஆகுமோ என்றார்
தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால்
தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழச் செய்குவீர்

ஆயாசமாக வீணில் யாரும் வருந்திட வேண்டாம்
அடியேனுக்கந்த பையனை நீர் காட்டுவீர் என்றார்
வாயார வாழ்த்தி வாரும் என்று உள்ளே அழைத்தார்
வந்தார் உடனே சாது பையன் பக்தியைக் கண்டார்
நீயே எழுவாய் என்று சாது கூறினார் அதே
நிமிசத்திலே எழுந்து சிறுவன் இறையை வணங்கினான்

ஆனந்த காட்சி இதனை கண்ட அன்னை தந்தையும்
அன்போடு சாதை தழுவிக்கொண்டு இறையை போற்றினார்

தீனோர்களே ரமலான் மாதம் மேன்மையானதே
துன்பங்கள் தீரும் இறைவனுக்கே நன்றி நவிழுவீர்
என்றும் பெறுவார் நோன்பிருந்தால் இறைவன் ஆசியை
எனக்கூறி மறைந்தாரே சாது உலக மாந்தரே
உலக மாந்தரே .... உலக மாந்தரே
*************************************************************************

Комментарии

Информация по комментариям в разработке