கர்பக்ரஹத்தில் ஒரு கர்பரக்ஷை | Garbagrahathil Oru Garbarakshai | Sudha Ragunathan | Amutham Music

Описание к видео கர்பக்ரஹத்தில் ஒரு கர்பரக்ஷை | Garbagrahathil Oru Garbarakshai | Sudha Ragunathan | Amutham Music

Garbagrahathil Oru Garbarakshai | Album : Sri Garbarakshambigai | Signer : Smt. Sudha Ragunathan | Lyrics : Varasree | Music : Veeramani Kannan | Amutham Music

கர்பக்ரஹத்தில் ஒரு கர்பரக்ஷை | இசைத்தொகுப்பு : ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்

பாடல்வரிகள் :

கர்பக்ரஹத்தில் ஒரு கர்பரக்ஷை
அதன் கருணை நிலை நமக்கு நாளும் துணை
கருவைக் காத்தருளும் யோக நிலை
அங்கு கமலம் பூக்கும் அன்னை பாத நிலை
கருவில் கருவாகும் கனிவு நிலை
அந்த கருவில் உருவான ஜீவ மலை
இருளில் உடன் நடக்கும் சந்த்ர கலை
நம் இன்மை தோஷமெல்லாம் நீக்கும் சிலை
பிறவிப் பேரளிக்கும் பேரருளை
சிவ பெருமான் உடன் உறையும் பெரியவளை
உறவாய் வாழ்பவளை நாளும் நினை
நம் உள்ளில் தினம் தருவாள் ஆறுதலை
நாளும் துணை . . . நாளும் துணை . . .
நாளும் துணை . . . நமக்கு நாளும் துணை

திருக்கருக்காவூர்
திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.

தல வரலாறு
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

அமைவிடம்
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

To Download (itunes) : https://itunes.apple.com/in/album/sri...
Amazon : http://www.amazon.com/Sri-Garbaraksha...
Google Play Store: https://play.google.com/store/music/a...

Music App : https://play.google.com/store/apps/de...,
:https://play.google.com/store/apps/de...,
:https://play.google.com/store/apps/de...
:https://play.google.com/store/apps/de...

#Sudharagunathan #SriGarbarakshambigai #amuthammusic

Комментарии

Информация по комментариям в разработке