ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? கொதிக்கும் அமித் ஷா - யார் இந்த விகே பாண்டியன்? | VK Pandian History

Описание к видео ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? கொதிக்கும் அமித் ஷா - யார் இந்த விகே பாண்டியன்? | VK Pandian History

பொக்கிஷ அறை; தமிழரின் ஆதிக்கம்; Odisha-ல் அமித் ஷா, PM மோதி குறி வைக்கும் VK Pandian யார்?

ஒடிஷா தேர்தல் களத்தில் பிரதமர் மோதியும் அமித் ஷாவும் பரப்புரையின் போது பேசிய சில விஷயங்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த மே 20-ஆம் தேதி ஒடிஷாவில் உள்ள கட்டாக் நகரத்தில் பேசிய பிரதமர் மோதி, பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பேசினார். அதே போல, மே 21-ஆம் தேதி ஒடிஷாவில் கெந்துஜார் மாவட்டத்தில் பேசிய அமித் ஷா, ஒரு தமிழர் ஒடிஷாவை ஆளலாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரும் உள்துறை அமைச்சரும் தமிழ்நாடு பற்றி பேசியதற்கு காரணம் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேயன் பாண்டியன் எனும் தமிழர். யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்?

#VKPandian #Odisha #TamilNadu

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке