ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை || Abhirami || Sri Durga Lakshmi Saraswathi || Vijay Musicals

Описание к видео ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை || Abhirami || Sri Durga Lakshmi Saraswathi || Vijay Musicals

பாடல் : ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை || ஆல்பம் : ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி || பாடியவர் : பிரபாகர் || இயற்றியவர் : இரவிரங்கசுவாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல் || Song : Aathaalai Engal Abhiramavalliyai || Album : Sri Durga Lakshmi Saraswathi || Singer : Prabhakar || Lyrics : Ravirangaswamy || Music : Sivapuranam D V Ramani || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song

ஒன்பது நாட்கள் நவராத்ரி பாடல்கள், NINE DAYS NAVARATHRI SONGS, 9 DAYS 9 SONGS FOR NAVARATHI, DURGA POOJA, SARASWATHI POOJA, VIJAYADASAMI POOJA, AYUDHA POOJA, AYUDA POOJA, NAVARATHRI SPECIAL, NAVARATHRI PADALGAL, NAVARATHRI SONGS, NAVARATHRI NAYAGI, NALAM THARUM NAVARATHRI, DURGA, LAKSHMI, SARASWATHI

பாடல்வரிகள் || LYRICS :

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை

அங்கையிற் பாசாங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

தனம் தரும் கல்விதரும் அபிராமியே தளர்விலா மனம்தரும் அபிராமியே
வஞ்சமிலா இனம்தரும் அபிராமியே நல்லதையெல்லாம் தரும் அபிராமியே

மூவா முகுந்தற்கு இளையவளே நீலகண்டனுக்கு மூத்தவளே
தானாய் உலகில் பூத்தவளே ஈரேழு புவனம் காத்தவளே

திருக்கடவூரின் அபிராமியே கடைக்கண்ணால் காத்தருளே
பட்டர்க்கு நிலவாய் வந்தாயே பக்தர்க்கு நலமெலாம் அருள்வாயே

அந்தாதி பாடியுனை வழிபட்டோம் அபிராமவல்லி நீ வழி காட்டு
பட்டரின் பாடலை பரிகாரமாய் பக்தியோடு சொல்கிறோம் நாள்தோறும்

ஐந்து மலரம்பு கரும்பு வில்லும் பாசம் அங்குசம் கை கொண்டவளே
மார்பில் தவழும் முத்துமாலையே மேனியில் மின்னும் பட்டாடையே

தலமரம் வில்வத்தை பூஜித்தாலே நலம்பல விளையும் வாழ்வினிலே
அமிர்த தீர்த்தம் நீராடியே ஆரோக்ய வாழ்வைப் பெறலாமே

அகஸ்தியர் குலஸ்தியர் வாசுகிதுர்கை ஆகியோர் வழிபட்ட அபிராமியே
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற அபிராமியே

பட்டவீரட்ட தலங்களிலே திருக்கடவூரும் ஒன்றாகுமே
அபிராமி உன்னை தரிசித்தாலே அடையும் பலன்கள் பலவாகுமே

மார்க்கண்டேயன் ஆயுள் வேண்டியே லிங்கத்தை கட்டிப்பிடித்தாரே
மகேசன் அன்பினில் கட்டுப்பட்டே காலனை காலால் உதைத்தாரே

வீரட்டம் கடபுரி திருக்கடவூர் பாவ விமோக்ஷண புண்ணியவர் தம்
நிறமந்திரத்தலம் வில்வாரண்யம் பலவிதமாக ஊர் பெயரே

குங்கிலியத்தலையரும் காரி நாயனார் வாழ்ந்த தலமே திருக்கடவூர்
பிராமனுகுபதேசம் செய்த தலமாம் விதியை மதியால் வெல்லும் தலமாம்

கடம்ப மாலை சூட்டுகிறோம் கருணை புரிந்திட வேண்டுகிறோம்
ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலம் நீக்கி அருளிடுவாய்

உதயசூரியன் உச்சித்திலகமே நெற்றிக்கண்ணும் செந்நிறமே
படைக்கலமாய் பஞ்சபானங்களே அடைக்கலம் அடைக்கலம் அபிராமியே

அந்தாதி தினமும் பாடுகிறோம் அபிராமி உன்னருள் வேண்டுகிறோம்
எமபயம் நீக்கி காத்திடுவாய் எங்கும் எப்பவும் அருளிடுவாய்

சிவனின் தவத்தைக் களைத்திடவே மன்மதன் மலரம்பு எய்தானே
கடுந்தவம் களைந்த சிவன் உடனே நெற்றிக்கண்ணால் எரித்தாரே

சிவனை இரண்டற கலந்திடவே சிவைனி மலரம்பு எய்தாளே
சினமின்றிக் கண்ணைத்திறப்பாரே கருத்தறிந்துன்னை கலப்பாரே

ம்ருத்ஞ்ய ஹோமம் செய்கின்றோம் உக்ரகசாந்தி செய்கின்றோம்
பீமரதசாந்தி செய்கின்றோம் ஆயுஷ் ஹோமம் செய்கின்றோம்

பட்டரின் அபிராமி அந்தாதியே பாடாத நாவேது நாள்தொறுமே
தொட்டது துலங்கிட அபிராமியே நினைப்பது நிகழ்ந்திட அருள்வாயே

கார்த்திகை மாதம் திங்கள்தோறும் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம்
மிக மிக சிறப்புடன் நடக்குதம்மா மேலான நன்மைகள் வழங்கிடம்மா

அபிராமி அம்மை பதிகமோதி அனுதினம் உம்மை பாடுகிறோம்
கதியாக உன் அடியடைந்தோம் பதினாறு பேறுகள் அருள்வாயே

நான்கு கரங்கள் கொண்டவளே வேண்டும் வரங்கள் கொடுப்பவளே
எங்கும் மரங்கள் வளர்ப்பவளே எமக்கென்றென்றும் அருள்பவளே

சிவகங்கையெனும் தீர்த்தத்திலே நீராட நோய்நொடி போய்விடுமே
பிறையைத் தலையில் சூடியவள் குறைகள் தீர்க்கும் புண்ணியவள்

விஷமுண்ட அமிர்தகடேஸ்வரரை ஆலிங்கனம் செய்யும் அபிராமியே
பயபத்தியுடன் போற்றுகிறோம் ஜெயசக்தியருளிட வேண்டுகிறோம்

பல்லாண்டு பல்லாண்டு வாழ்வளிப்பாய் பாக்யத்தோடெம்மை வாழவைப்பாய்
பொக்கியசம் போலே உன்வடிவை பூட்டிவைத்தேன் என் மனதினிலே

பூமாதேவி பூஜித்தாளே தேவரும் மூவரும் போற்றினரே
பட்டரும் யாவரும் வணங்கினரே அட்டமாசித்திகள் வழங்கிடம்மா

ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு வடிவம் வெவேறு நாமம் கொண்டவளே
எங்கெங்கும் பக்தியை செலுத்துகிறோம் பலவகை பரிகாரம் செய்கின்றோம்

நோய்கள் யாவும் நீக்கிடம்மா பேய்கள் பிசாசை விரட்டிடம்மா
பழிபாவம் போக்கி அருளிடம்மா அழியாத செல்வம் வழங்கிடம்மா

ஆலயசேவை புரிகின்றோம் ஆத்தாள் உன்னை புகழ்கின்றோம்
பரிகாம் பலப்பல செய்கின்றோம் காத்துரக்ஷிக்க வேண்டுகிறோம்

பாலா அபிராமி பாதுகாப்பாய் தேவி அபிராமி தேற்றிடுவாய்
சக்தி அபிராமி சக்தி தருவாய் அன்னை அபிராமி அருளிடுவாய்

அறுபதாம் கல்யாணம் நடக்குதம்மா எண்பதாம் கல்யாணம் நடக்குதம்மா
மங்கள ஓசைகள் முழங்குதம்மா மாங்கல்யம் கழுத்தில் ஏறுதம்மா

திருமண நாளினில் தரிசிக்கவே இருமனம் ஒன்றி வந்தாரே
ஈருடல் ஓருயிராய் தொழுகின்றார் திருமண வாழ்த்து பெறுகின்றார்

அலங்கார அபிஷேகம் நடக்கிறதே அழகில் மனமும் லயக்கிறதே
நாவும் நாமம் ஜெபிக்கிறதே மூலஸ்தானம் ஜொலிக்கிறதே

தோடு முழுநிலவு ஆனதம்மா பட்டரின் உயிரைக் காத்ததம்மா
அந்தாதி உன் ஆபரணம் ஆனதம்மா அந்தாதி உன் அந்தாதி சொல்லுதம்மா

திருக்கடவூரின் வானத்திலே அமாவாசை பௌர்ணமியாய்
ஒளிர்ந்தது உனது லீலையம்மா உனை வணங்குவதென் வேலையம்மா

ஆபத்தை அடியோடு ஒழித்திடம்மா விபத்து தற்கொலைத் தடுத்திடம்மா
சகலசம்பத்தும் தந்திடம்மா சந்தோச வாழ்வை வழங்கிடம்மா

சிந்தை முழுதும் அந்தாதியே எந்த நேரமும் ஒலித்திடுதே
தெரிந்தும் தெரியாது செய்த பிழைக்கு மன்னித்துக்கொள்வாய் அபிராமியே

Комментарии

Информация по комментариям в разработке