அதோ தெரியுது ஏழுமலை Adho Theriyudhu Elumalai Perumal Song | Srinivasa Govinda Namam | VIJAY MUSICAL

Описание к видео அதோ தெரியுது ஏழுமலை Adho Theriyudhu Elumalai Perumal Song | Srinivasa Govinda Namam | VIJAY MUSICAL

கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா
Song : Adho Theriyudhu Elumalai
Album : Kadavul Bakthi
Singer : Ramu
Lyrics : Ulundurpettai Shanmugam
Music : Sivapuranam DV Ramani
Video : Kathiravan Krishnan
Produced By Vijay Musicals
#perumalsongs#govindagovindasong#VijayMusicals

பாடல்வரிகள் | LYRICS

சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

அதோ தெரியுது ஏழுமலை எங்கள் பெருமாள் வாழும் மலை
இதோ இதோ என வேகம் வரும் என்றும் தணியாத தாகம் வரும்
கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா
மலையென்று சொன்னால் திருமலையே மனதில் நிற்பது திருமலையே
பதியென்று சொன்னால் திருப்பதியே திருமகள் வாழ்வது திருப்பதியே
பூலோக வைகுந்தம் திருப்பதியே பொன்மழைபொழிவது திருப்பதியே
வேதங்கள் போற்றிடும் திருப்பதியே விதியையும் மாற்றிடும் திருப்பதியே
கருடன் கொணர்ந்தது கருடகிரி ருஷபாசுரனால் ருஷபாத்ரி
நாராயணன் தரும் நாரணகிரி நரசிம்மன் பெயரால் சிம்மகிரி
அஞ்சனை தவத்தால் அஞ்சனாத்ரி ஆதிசேஷனின் ஷேசாத்ரி
ரிடபாசுரனால் ரிஷபகிரி ஏழுமலையானின் வேங்கடகிரி
காண்பது ஒருகணம் என்றாலும் கடவுளை நேரில் காண்போமே
மீண்டும் எப்போதும் இந்த பாக்யம் வேண்டும் வேண்டுமென வேண்டிடுவோம்
எண்ணிலாத்தலங்கள் இருந்தாலும் அப்போதைக்கப்போது கூட்டம் வரும்
ஏழுமலையானை பார்ப்பதற்கோ என்றும் எப்போதும் கூட்டம் வரும்
மலைமேல் கடல் வந்து புகுந்ததுவோ அலைமேல் அலையாய் தலைதெரியும்
திருநாள் எந்நாளும் திருநாள் தான் ஸ்ரீநிவாசன் புகழ் உலகெங்கும்
நின்றத் திருக்கோலம் காண்கையிலே நேரம் போவது தெரியாது
கண்டு கண்டு கண்ணில் நீர்பெருகும் திருப்ப மனமின்றி ஏங்கிடுமே
மலையடிவாரம் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருப்பார்
கபில தீர்த்தத்தில் குளித்திடுவோம் கலிகோபுரத்தைக் கண்டிடுவோம்
மாலவன் மேனியை அலங்கரித்த மாலைகள் மலையெங்கும் கமகமக்கும்
கோவிந்தன் நாமம் எதிரொலிக்கும் பக்தர்கள் வரிசை காத்திருக்கும்
ஒரே வரிசையில் ஒழுங்காக நவகிரஹநாயகர் நிற்கின்ற
அதிசயம் இங்கே நிகழ்ந்திடுமே ஆழ்வார் பாசுரம் இனித்திருக்கும்
எட்டுதிக்கு பாலகரும் எம்பெருமானை எதிர்பார்ப்பார்
அஷ்டலக்ஷ்மிகள் கூடிடுவார் கங்கை நீராட்ட வந்திருப்பார்
அர்த்ததீர்த்தம் பஞ்சாயுதம் நாரத தீர்த்தம் கிருஷ்ண தீர்த்தம்
பாண்டவர் தீர்த்தம் கோகற்பம் குமார தீர்த்தம் சுத்த தீர்த்தம்
பார்கவ புராண திதிர் தீர்த்தம் பாபவிநாசம் பைரவம்
கணேஷ தீர்த்தம் முதலாக கணக்கில் எண்ணி முடிந்திடுமோ
வராக பெருமான் புஷ்கரணி நீராடியபின் வேங்கடவன்
சந்நிதி காண சென்றிடலாம் சகலசௌபாக்யமும் பெற்றிடலாம்
பறவைகள் பாடும் சங்கீதம் தேவர்கள் ஓதும் நால்வேதம்
பள்ளியெழவே சுப்ரபாதம் கண்ணன் எழுந்தான் வேணுகானம்
தங்கவாசல் தாண்டியபின் நவரத்ன குவியலோ நெடுமாலொ
பச்சை கற்பூர வாசம் வரும் பார்க்க பார்க் மெய்சிலிர்க்கும்
வைகுந்தம் இங்கே வந்ததுவோ சொர்க்கபோகம் தந்ததுவோ
கருமாமணியைக் காண்பதற்கு கண்கள் கொடுத்து வைத்ததம்மா
நெஞ்சில் ஒருபுறம் மஹாலக்ஷ்மி மறுபுறம் அமர்ந்தாள் பத்மாவதி
இங்கே வந்தபின் வேறெதற்கும் அஞ்சேல் என்பான் திருமாலே
ஆயிரம் நிலவுகள் சேர்ந்தனவோ தாயினும் இனியவன் கருணைமுகம்
நம்விழி கூசும் என்றெண்ணி நாம் சற்றே மறைத்ததுவோ
என்னை நானே இழந்துவிட்டேன் ஏகாந்த சேவையில் கரைந்துவிட்டேன்
என்ன அதிசயம் இவன் தோற்றம் எங்கும் காணாத விந்தையம்மா
பாலினில் விழுந்த கருவண்டாய் பார்வை வீசி சிரிக்கின்றான்
வா என புன்னகை முகம் காட்டி ஸ்ரீநிவாசன் அழைக்கின்றான்
விஸ்வரூப தரிசனமே துலங்கி சேவை அற்புதமே
தோமாலை சேவை கண்டதுமே மாலை தொடுக்கச் சொல்லிடுமே
நீலமணிபோல் நெடுமேனி கோலாகுழல்மேல் மணிமகுடம்
வில்போல் புருவங்கள் நடுவினிலே ஸ்ரீபாதரேணு திருநாமம்
சூரிய சந்திரர் விழிகளிலே மகர குண்டலம் செவிகளிலே
வீணை நிமிர்ந்தது நாசியிலே முத்துக்கள் கொட்டின இதழ்களிலே
வானவில்லோ கன்னங்கள் சங்கு கழுத்தில் பதக்கங்கள்
பரந்த தோளில் ஆரங்கள் சங்கு சக்கர வண்ணங்கள்
விரிந்த மார்பில் கௌஸ்துபமும் சஹஸ்ரநாம சங்கிலியும்
மணமகள் பத்மாவதியோடு மஹாலக்ஷ்மியும் கொஞ்சிடுமே
சுந்தர சூழலோ உன்மேலே காஞ்சி மேகலை இடையினிலே
தசாவதார கச்சையிலே சூர்யகட்டாரித் தொங்கிடுமே
உதரபந்தனம் அணிவயிற்றில் வீரக்கழலணி சாரதியோ
வலக்கரம் பாதம் காட்டிடுமே இடக்கரம் அவனிடம் சேர்த்திடுமே
காலைப்பிடித்தால் மேல்வரலாம் காலகாலம் அருகிருந்து
கூடிக்கலந்து குலவிடலாம் குறிப்பை அறிந்துகொள் என்பானோ
தோளைப்பார்த்தவர் தோளே கண்டார் தாழைக் கண்டவர் தாழே கண்டார்
அங்கம் முழுதும் ரசிப்பதற்கு கண்களிரண்டு போதாதே
வானும் மண்ணும் அளந்த அடி பூமாதேவி வருடும் அடி
பெரிய சிறியத் திருவடிகள் இருவரின் சேவைகள் ஏற்றிடுவாய்
ஞாயிறு திங்கள் மங்கள நாள் செவ்வாய் தோறும் தெப்ப உலா
புதனன்று போக ஸ்ரீநிவாசன் கலசாபிஷேகம் ஏற்றிடுவான்
குருநாள் பாவாடை சேவை உண்டு வெள்ளியில் பூரா அபிஷேகம்
சனிநாள் விளக்குகள் ஏற்றிவைத்தால் வினைகள் விலகும் வெற்றிவரும்
அலர்மேல்மங்கை அன்புக்கரம் பற்றியத் திருக்கரம் ஆனந்தம்
ஊஞ்சல் கண்ணாடி சேவைகளே யாவும் அவனின் லீலைகளே
ஆவணி கார்த்திகை தை திங்களில் அழகனுக்கு ப்ரம்மோக்ஷபம்
சித்திரை கோயில் கணக்கர் விழா நரசிங்க யாதவர் பங்குனி விழா
ஸ்ரீஜெயந்தி உரியடி தீபாவளி யுகாதி ஏகாதசி ஸ்ரீராமநவமி
மோஹினி பவனி வைகாசியில் கோயிலையும் ஆழ்வாராய் கொண்டாடுவார்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் அதன்மேலும்
ஸ்ரீநிவாசன் புகழ் செழிக்கட்டும் கோவிந்தராஜன் அருள் கொழிக்கட்டும்

Комментарии

Информация по комментариям в разработке