வள்ளற்பெருமான் பார்வையில் தத்துவராயர் - திரயோதசாந்த நிலை விளக்கம். குருதுரியத்திற்கு மேற்பட்ட நிலை.

Описание к видео வள்ளற்பெருமான் பார்வையில் தத்துவராயர் - திரயோதசாந்த நிலை விளக்கம். குருதுரியத்திற்கு மேற்பட்ட நிலை.

வள்ளற்பெருமான் பார்வையில் தத்துவராயர்

திரியோதசாந்த நிலையில்தான் மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவார்: இதைப்பற்றி வள்ளலார் தனது திருவருட்பாவில் கூறுவதை சற்று விளக்கமாகக் காண்போம் வாருங்கள்.

திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம், குருதுரியாதீதம் ஆக 5. ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் - இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.

என்று வள்ளற்பெருமான் தனது திருவருட்பா உரைநடை நூலில் தெரிவித்திருப்பார். முதலில் நாம் சாக்கிரம் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

நமது ஆன்மாவானது ஆதிதொட்டு ஆணவ மலத்துடன் கூடியிருந்ததால், அது தானே சுயமாக எதையும் அறியமுடியாத நிலையில் உள்ளது. எனவே ஆன்மாவானது அது எடுத்த உடம்பின் வழியே, அவ்வுடம்பில் உள்ள கருவிகள் வழியே ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறியத்தொடங்குகின்றது அல்லது செயலாற்றுகின்றது. இவ்வைந்து உணர்வு நிலைகளை காரிய அவத்தைகள் என்கிறோம். இந்த காரிய அவத்தைகள் ஐந்தில் முதலில் வருவது சாக்கிரமாகும். சாக்கிரம் என்றால் நனவு நிலை எனப்பொருள். மீதமுள்ள நான்கு, சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பதாகும்.

1.சாக்கிரம் என்பது ஆத்மாவின் நனவு நிலை. புருவ நடுவிலிருந்து ஆன்மா செயல்படும். இங்கு 35 தத்துவங்கள் செயல்படும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, பரிவாரங்கள் பத்து, தச வாயுக்கள் பத்து, அந்தக்கரணங்கள் நான்கு மற்றும் புருடன் என 35 தத்துவங்களாகும்.

அது என்ன ஐந்து பிரிவுகள்? என்றால்,

1. ஜீவ சாக்கிரம்

2. ஜீவ சொப்பனம்

3. ஜீவ சுழுத்தி

4. நிர்மல சாக்கிரம்

5. நிர்மல சொப்பனம்

6. நிர்மல சுழுத்தி

7. பர சாக்கிரம்

8. பர சொப்பனம்

9. பர சுழுத்தி

10. குரு சாக்கிரம்

11. குரு சொப்பனம்

12. குரு சுழுத்தி

13. குரு துரியம்

14. குரு துரியாதீதம்

15. சுத்தசிவ சாக்கிரம்

16. சுத்தசிவ சொப்பனம்

17. சுத்தசிவ சுழுத்தி

18. சுத்தசிவ துரியம்

19. சுத்தசிவ துரியாதீதம்

ஆக, சைவ சமயத்தில் வெறும் ஐந்து அவத்தைகள் இருப்பதை, சுத்த சன்மார்க்கத்தில் 19 அவத்தைகள் என அறிவிக்கின்றார். மேலும் சைவ சமய மகான்கள் இந்த 19 நிலைகளில் எதுவரை அனுபவத்தை பெற்றிருக்கின்றார்கள் என வள்ளலார் கூறும்போது, இந்த 19 பிரிவுகளில் 13-ஆம் நிலையில் உள்ள குரு துரியம் வரை அனுபவத்தை பெற்றுவிட்டார்கள் என ஒருவாறு கூறுகின்றார். அதாவது அதனையும் முழுமையாக பெறாமல் அந்த 13-ஆவது குருதுரிய நிலையை எட்டித் தொட்டுவிட்டார்கள் எனக்கொள்ளலாம் என வள்ளலார் உரைக்கின்றார். அந்த 13-ஆவது நிலையான குருதுரியத்தை அடைந்த மகானாக வள்ளலார் குறிப்பிடுபவர் நமது ”தத்துவராயர்” என்கின்ற மகானை அறிவிக்கின்றார். இந்த 13-ஆவது நிலையை ”திரயோதசாந்த” நிலை என்கின்றார் வள்ளலார். திரி என்றால் மூன்று, சதம் என்றால் பத்து ஆக பதிமூன்றாவது நிலையான குருதுரிய நிலையில் ஆன்மா சாந்தமடைவதை / அமைதியடைவதை அல்லது அனுபவிப்பதை ”திரயோதசாந்தம்” என்கின்றார் வள்ளலார்.

திரயோ தசநிலை சிவவெளி நடுவே

வரையோ தருசுக வாழ்க்கை மெய்ப் பொருளே

என திரு அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் இந்த திரையோதசநிலைப் பற்றி வள்ளலார் குறிப்பிட்டிருப்பதை காணலாம்.

நாம் பெரிதும் போற்றக்கூடிய வேத ஆகமங்களில்கூட இந்த 13 நிலை மட்டுமே கூறப்பட்டுள்ளதாக வள்ளலார் குறிப்பிடுகின்றார். அதற்கு மேல் அதாவது 14-ஆம் நிலையிலிருந்து 19-ஆம் நிலைவரை சுத்த சன்மார்க்கிகளுக்கே சாத்தியமாகும் என்று தான் அடைந்த அனுபவ உண்மையை இங்கே எடுத்துரைக்கின்றார். இந்த 19- நிலையும் அடைந்த ஆத்மாதான் ஜீவ சாக்கிரத்தை விட்டு அதாவது அவத்தைகளை விட்டு முழுமையாக விடைபெறும் என்று கூறுகின்றார் வள்ளலார்.

சைவ சமயத்தை பின்பற்றும் மகான்கள் யாரும் இதுவரை துரியாதீதம் என்பதை அறவே அடையவில்லை என்பதை வள்ளலார் எடுத்தியம்புகின்றார். எனினும் குரு துரியம் வரை ஒருவாறு அடைந்துவிட்ட தத்துவராயர் அவர்களை வள்ளலார் ”மகான்” என்று போற்றுகின்றார். மேலும் பல மகான்கள் இந்த நிலையை அடைந்திருப்பதாகவும் “தத்துவராயர் முதலிய மகான்கள்” என்று குறிப்பிடுவதால் நாம் அறிகின்றோம். நமக்குத் தெரிந்தவர் இந்த தத்துவராயர் மட்டுமே. தெரியாத எத்தனை ராயர்கள் இருக்கின்றார்களோ என நமக்குத்தெரியாது.

எனவே நமக்குத் தெரிந்த தத்துவராயரைப் பற்றி நாம் சற்றே இந்தப் பதிவில் காண்போம்.



தமிழ்நாட்டில் அத்வைதத்தை வளர்ப்பதில் தனிப்பெருமை கொண்டவர் தத்துவராயர். தமிழ்நாட்டில் வெகுசன வேதாந்தம் பரப்பியவரில் முதண்மை பங்கு தத்துவராயரைச் சாரும். ஏனெனில் அத்வைதத்தினை வடமொழியின் துணை கொண்டு ஓதியுணர வேண்டுமேயொழிய நாட்டு மொழிகளின் துணை கொண்டு உணரலாகாது என்ற கொள்கை இருந்தது. தத்துவராயர் வருகைக்குப் பின்பு தமிழ்நாட்டில் ஒரு உயர்குடி வர்க்கத்தில் மட்டுமே இருந்த அத்வைதத்தினை பெரும்பாலான சாதாரண மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததால் வெகுசன வேதாந்தத்தின் கர்த்தா தத்துவராயர் எனப்பட்டார்.

பொதிகைச் சித்தர் மரபு நாராயண தேசிகர் கூட, தத்துவராயர் கொள்கை வேதாந்த நெறி வழியில் வந்தவர். யார் இந்த தத்துவராயர். வாருங்கள் 15 ம் நூற்றாண்டுக்குச் செல்வோம்.

தாய் மாமன், மருமகன் என்கிற உறவைக் கொண்டவர்கள் சொருபானந்தர் மற்றும் தத்துவராயர். அவ்விருவரும் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்கள்.

https://www.blogger.com/blog/post/edi...

T.M.RAMALINGAM
Whatsapp No.9445545475
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке