யாருக்கும் தெரியாத தமிழர்களின் கண்டுபிடிப்பு..! கண்ணு முன்னாடியே இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சுருக்கா?

Описание к видео யாருக்கும் தெரியாத தமிழர்களின் கண்டுபிடிப்பு..! கண்ணு முன்னாடியே இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சுருக்கா?

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohan.  .
Instagram................   / praveenmoha.  .
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

0:00 - அறிமுகம்
0:32 - சூரிய பகவானின் இரண்டு சிற்பங்கள்
1:56 - காலை சூரியன், மாலை சூரியன்
2:46 - ரகசியமான கால பைரவர்
4:26 - தமிழர்களின் பழங்காலத்து சூரிய கடிகாரம்
8:04 - இதெல்லாம் மூடநம்பிக்கை இல்ல!
9:20 - தேர் ஓட்டும் குட்டி மனிதர்
10:36 - யாருக்கும் தெரியாத புத்த சிற்பம்
11:20 - கால சக்கரம்
12:27 - முடிவுரை

Hey guys, வாங்க இந்த video-ல எப்படி பழங்கால சிற்பங்கள decode பண்ணாலாங்கறத பத்தி பாக்கலாம். இந்த கடவுள்கள புரிஞ்சுக்க புரிஞ்சுக்க அது நமக்கு தெரியாம மறஞ்சுருக்கற புது கண்டுபிடிப்பு-ங்களுக்கு நம்மள கூப்டுட்டு போகும். நீங்களே இந்த வீடியோவோட கடைசில அத புரிஞ்சிப்பீங்க. இது கும்பகோணத்துக்கு பக்கத்துல தாராசுரம்-ங்கற இடத்துல இருக்குற ஐராவதேஸ்வரர் கோவில். இத எண்ணூத்தி அம்பது (850) வருஷத்துக்கு முன்ன கட்டிருக்கலாம்னு historians சொல்றாங்க.

வாங்க, இந்த சாமிய(கடவுள) பாக்கலாம். அப்பறம் அவரு என்ன சொல்ல வர்றாருன்னு புரிஞ்சுக்க try பண்ணலாம். இத பாக்குறப்ப கையில ரெண்டு பூ வச்சிட்டு இருக்கற ஒரு ஆம்பள சாமி மாதிரி இருக்கு. ஒருவேள நீங்க நம்ம வேதங்கள எல்லாம் படிச்சுருந்தீங்கன்னா, இது சூரிய பகவான்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும்.

கிட்டத்தட்ட ஒரு பத்து அடி தூரத்துல கோயிலோட இன்னொரு side-ல மறுபடியும் இதே சூரிய பகவான செதுக்கியிருக்குறத நம்மளால பாக்க முடியும். இந்த மாதிரி ஒரே சாமிய ரெண்டு தடவ அதுவும் பக்கத்து பக்கத்துல பார்க்குறது-ங்கறது ரொம்ப rare- ஆன ஒரு விஷயம். ஒரு பத்து அடி தூரத்துக்குள்ளயே எதுக்காக ஒரே சாமிய ஸ்தபதிங்க ரெண்டு தடவ செதுக்கனும்?

நிச்சயமா நமக்கு எப்பவும் கிடைக்கற பதில் ரொம்ப simple தான்: இது ஒரு இந்து கோவில்-ங்கறதால சாமி கும்பிடுறதுக்காக ஆயிரக்கணக்கான கடவுள்கள செதுக்கியிருப்பாங்கன்னு சொல்லுவாங்க. இந்த பதில் கண்டிப்பா எனக்கு திருப்தியா இல்ல. ஏன்னா ஒவ்வொரு சிற்பத்தையும் ஒவ்வொரு குறிப்பிட்ட காரணத்துக்காக தான் செதுக்கியிருப்பாங்கனு argue பண்ற ஆளு நான். அதனால, இது ஒவ்வொன்னையும் நான் நல்லா கவனிச்சு(உத்து) பார்த்தேன். பக்கத்து பக்கத்துல இருக்குற ரெண்டு சிற்பத்தையும் பாருங்க, வேணும்னா pause button-அ அமுக்கி கூட ரெண்டுத்துக்கும் இருக்குற வித்தியாசத்த கண்டுபிடிக்க try பண்ணுங்க. நீங்க என்ன கண்டுபிடிச்சீங்க?

இடது பக்கத்துல(left side-ல) இருக்க சிற்பத்துல பூ இப்போ தான் பூக்குற மாதிரி காமிச்சிருக்காங்க, அதோட இதழ(petals) பாத்தா உங்களுக்கே அது புரியும். அதுவே, வலது பக்கத்துல இருக்குற பூவ ஏற்கனவே முழுசா பூத்துருக்குற மாதிரி காட்டிருக்காங்க. பாருங்க அதோட இதழ் எல்லாம் நல்லா விரிஞ்சிருக்கு.

பழங்கால புராணங்கள்ல சூரிய பகவான ரெண்டு தாமரை பூ வச்சிருக்கிற மாதிரி காட்டிருப்பாங்க. காலைல சூரியன் வந்ததும் தாமரை பூ பூக்க ஆரம்பிச்சு, சாயங்காலம் சூரியன் மறையுற வரைக்கும் அப்படியே விரிஞ்சே தான் இருக்கும். அப்படினா இந்த சிற்பம் காலைல சூரியனையும்(morning sun), இந்த சிற்பம் சாயங்கால சூரியனயும்(evening sun) குறிக்குது. So இப்போ நமக்கு இந்த ரெண்டு சிற்பத்தோட அர்த்தமும் புரிஞ்சிடுச்சு. ஆனா நாம இந்த மர்மத்த பத்தி சும்மா மேலோட்டமா தான் பாத்துருக்கோம்.

இந்த சூரிய பகவானோட சிற்பம், இந்த குதிரைக்கு மேல செதுக்கியிருக்குறத நம்மளால பாக்க முடியுது. ஆனா குதிரைக்கு அடில எதாச்சும் செதுக்கிருக்காங்களா?

சும்மா சுத்தி பாக்க வர்றவங்க(casual visitors) கண்ணுல படாத மாதிரி இந்த சாமிய இப்படி அடியில செதுக்கிருக்காங்க. இது யாரா இருக்கும்? அவரோட தலை முடிய வச்சும், கைல வச்சிருக்கிற ஆயுதங்கள வச்சுமே அவரு காலபைரவர்னு நம்மளால easy-ஆ கண்டுபிடிச்சு சொல்ல முடியும்.

இந்த சாமிய பத்தி ஒரு standard-ஆன explanation இருக்கு. அது என்னனா, இவரு பாக்குறதுக்கு எளிமையா(simple-ஆ) இருப்பாராம். அது மட்டுமில்லாம இவரு சிவபெருமானோட ஒரு உக்கிரமான அவதாரமாம். இப்படி தான் இதுவரைக்கும் நாம நினைச்சுட்டு இருக்கோம்ல? ஆனா இந்த கடவுள நல்லா ஆழமா பார்த்தா, வேற சில விஷயங்கள பத்தியும் நாம தெரிஞ்சுக்கலாம். அதாவது காலா-ங்கற வார்த்தைக்கு நேரம்னு அர்த்தம். பைரவா-ங்கற வார்த்தை மூணா பிரிஞ்சி, உருவாக்கம், வாழ்வாதாரம், அழிவு இப்படிலாம் meaning-அ கொடுக்குது. So காலபைரவரோட உண்மையான அர்த்தம் ‘கால நேரத்தை கண்ணிக்குறவர்’ (eternal time keeper) அப்படின்ற மாறி இருக்கு.

இப்போ நமக்கு இந்த மூணு சிற்பத்தோட அர்த்தமும் தெரியும். ஆனா எதுக்காக இதெல்லாம் செதுக்கிருக்காங்கனு நமக்கு இன்னும் தெரியாது.
இந்த மூணு சாமிய பத்தியும் யோசிச்சு பாருங்க:காலை சூரியன்(morning sun), கால நேரத்தை கண்ணிக்குறவர், அப்பறம் மாலை சூரியன்(evening sun). அவங்க அப்படி என்ன தான் சொல்ல வர்றாங்க? நடுவுல இந்த குதிரைங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கு?
நீங்க ஒரு அடி பின்னாடி போய் நின்னு, இந்த மொத்த சிற்பத்தயும் கொஞ்சம் பாருங்க, இந்த ரெண்டு சக்கரத்த வச்சு தேர் மாதிரி இருக்கற இந்த கோவில, ரெண்டு பக்கத்துல இருக்குற குதிரைங்களும் சேந்து இழுத்துட்டு போற மாதிரி இருக்கும்.

எதுக்காக இந்த சக்கரத்த செதுக்கனும்?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке