பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் - புலவர் நா. தியாகராசன் உரை

Описание к видео பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் - புலவர் நா. தியாகராசன் உரை

புலவர் நா. தியாகராசன் அவர்கள் பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் என்ற தலைப்பில் எனக்கு வழங்கிய நேர்காணல் உரையை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். புலவர் நா. தியாகராசன் அவர்கள் பூம்புகாரை அடுத்துள்ள மேலப் பெரும்பள்ளம் என்ற ஊரின் பெருநிலக்கிழார் ஆவார். சிலப்பதிகாரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவாறு மிக் சிறந்த புலமை உடையவர். அண்மையில் தமக்கு ஏற்பட்ட மாரடைப்பு நோயால் மனந்தளர்ந்த புலவர் பெருமகனார் தம் உள்ளக்கிடக்கையை எனக்குப் பேசித் தெரிவித்தார். அனைத்துப் பணிகளையும் புறந்தள்ளிவிட்டு, உடனடியாகப் பூம்புகாரை அடுத்த மேலப்பெரும்பள்ளம் சென்று அவர் உரையைப் பதிவு செய்தோம். எம் அரண்மனை ஒளி ஓவியர் அவர்கள் ஈடுபாட்டுடன் பதிவு செய்து உதவியதுடன் பொருத்தமான படங்களையும் இணைத்துக் காண்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். பல்வேறு கலைஞர்களின் படங்களைப் பின்புலத்தில் நன்றியுடன் பயன்படுத்தியுள்ளோம். அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி. உலகத் தமிழினம் தங்கள் இலக்கியப் பெருமையையும், வரலாற்றுப் பெருமையையும் நினைவுகூர எங்களின் முயற்சி உதவினால் அதுவே எங்களின் உழைப்புக்குக் கிடைத்த பயனாக எண்ணுவோம்.

Комментарии

Информация по комментариям в разработке