செம்மை இசைக் கோவை -1 : யானெதும் செய்வதில்லை

Описание к видео செம்மை இசைக் கோவை -1 : யானெதும் செய்வதில்லை

செம்மை இசைக் கோவை -1 : யானெதும் செய்வதில்லை

பாடல் - 1 : யானெதும் செய்வதில்லை

பாடல் வரிகள்:
யானெதும் செய்வதில்லை
யாவிலும் நீ இருக்க
யாவையும் நீ இயக்க
யானெதும் செய்வதில்லை
வானெதும் பெய்வதில்லை
நீரிலும் நீ இருக்க
வேரையும் நீ இயக்க
வானெதும் பெய்வதில்லை

இருந்தும் இல்லையானேன்
பறந்தும் எல்லை காணேன்
அருந்தும் பால் நிறைவில்
உறங்கும் பிள்ளை போல்
மருந்துன் கூழ் பருகி
உறைந்து கல்லாய் ஆனேன்.

பாடல் - 2 : வேயுறு தோளி பங்கன், கோளறு பதிகம்
திருஞானசம்பந்தர் தேவாரம்.

பாடல் வரிகள்:
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் - 3 : நங்கைமீர் எனை நோக்குமின்,
சென்னிப் பத்து, மாணிக்கவாசகர் திருவாசகம்.

பாடல் வரிகள்:
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.

பாடல் - 4 : கண்ணாய் ஏழுலகும், திருமழபாடி,
சுந்தரர் தேவாரம்.

பாடல் வரிகள்:
கண்ணாய் ஏழுலகுங் கருத் தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

பாடல் - 5 : பித்தா பிறைசூடி, திருவெண்ணெய்நல்லூர்,
சுந்தரர் தேவாரம்.

பாடல் வரிகள்:
பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.

பாடல் - 6 : மாதர்ப் பிறைக்கண்ணி, திருவையாறு,
அப்பர் தேவாரம்.

பாடல் வரிகள்:
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

பாடல் - 7 : பொன்னார் மேனியனே, திருமழபாடி,
சுந்தரர் தேவாரம்.

பாடல் வரிகள்:
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பாடல் - 8 : மாசில் வீணையும், பொதுப்பதிகம்,
அப்பர் தேவாரம்.

பாடல் வரிகள்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

Chapters:

00:00 - 02:39 - பாடல் - 1 : யானெதும் செய்வதில்லை
02:40 - 06:11 - பாடல் - 2 : வேயுறு தோளி பங்கன்
06:12 - 08:35 - பாடல் - 3 : நங்கைமீர் எனை நோக்குமின்
08:36 - 10:21 - பாடல் - 4 : கண்ணாய் ஏழுலகும்
10:22 - 12:40 - பாடல் - 5 : பித்தா பிறைசூடி
12:41 - 16:17 - பாடல் - 6 : மாதர்ப் பிறைக்கண்ணி
16:18 - 18:43 - பாடல் - 7 : பொன்னார் மேனியனே
18:44 - 20:56 - பாடல் - 8 : மாசில் வீணையும்

பாடல்களை பதிவிறக்கம் செய்ய :
https://drive.google.com/drive/folder...

செம்மை இசைகளை செம்மை செவி செயலியிலும் கேட்கலாம்.
Android : https://play.google.com/store/apps/de...
IOS : https://apps.apple.com/in/app/semmai-...

Комментарии

Информация по комментариям в разработке