வாழை மதிப்புக்கூட்டலில் இத்தனை பொருள்களா... வியக்க வைக்கும் வாழை ஆராய்ச்சி நிலையம்!

Описание к видео வாழை மதிப்புக்கூட்டலில் இத்தனை பொருள்களா... வியக்க வைக்கும் வாழை ஆராய்ச்சி நிலையம்!

#banana #amazingfacts #beginners #trichy

தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படும் வாழையில் மதிப்புக் கூட்டுவதன் மூலம் அதிக லாபம் பார்க்கலாம். அதற்கு வழிகாட்டுகிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வாழை மதிப்புக்கூட்டுக் குழு. வாழை மரத்திலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றி வருகிறார்கள் இந்தக் குழுவினர். குறிப்பாக, வாழைப்பழ மாவு, சிப்ஸ், குளிர்பானங்கள், பிஸ்கட், கேக், சூப், ஆரோக்கியப் பானங்கள் எனப் பலவற்றையும் தயாரிக்கக் கற்றுத்தருகின்றனர். வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி ஊறுகாய், வாழைத் தண்டு நாரில் சேலை, செருப்பு, வீட்டு அலங்காரப் பொருள்கள் எனப் பலவற்றையும் தயாரித்து வருகிறார்கள். புதுப் புது உணவுகள், புதிய பொருள்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்த காணொலி அதுகுறித்து விளக்குகிறது....

தொடர்புக்கு,

இயக்குநர்,
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தாயனூர், திருச்சி.
தொலைபேசி: 0431 2618125

மதிப்புக்கூட்டல் சம்பந்தமான தகவல்களுக்கு
செல்போன்: 96262 57154

Reporter & Host : V.Kausalya | Camera: D.Dixith | Edit: J.Melwin Roshan |
Producer: M.Punniyamoorthy

------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

Комментарии

Информация по комментариям в разработке