குற்றாலம் : குற்றால நாதர் - குழல்வாய் மொழியம்மை திருக்கோவில் | TEMPLE RUN DEVOTIONAL |

Описание к видео குற்றாலம் : குற்றால நாதர் - குழல்வாய் மொழியம்மை திருக்கோவில் | TEMPLE RUN DEVOTIONAL |

குற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தென்காசி மாவட்டம் , குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலம்சிவன் கோயிலாகும்.இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.

இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.

இறைவன் - குற்றாலநாதர் - திரிகூடநாதர்
இறைவி - குழல்வாய் மொழியம்மை
இக்கோயிலில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி சன்னதிகளும், செண்பக விநாயகர், அம்பல விநாயகர். ஆறுமுக நயினார். தட்சணாமூர்த்தி, கன்னி விநாயகர். சந்திரன். வான்மீகிநாதர். சம்புகேஸ்வரர், அண்ணாமலைநாதர். திருமூலநாதர், ராமலிங்கர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கைலாசநாதர், துர்க்கை, பராசக்தி, சைலப்பர், வல்லப விநாயகர், நன்னகர பெருமாள், பாபநாசர்-உலகம்மாள், நெல்லையப்பர்-காந்திமதியம்மாள், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், சகஸ்ரலிங்கம், பால்வண்ணநாதர், சொக்கலிங்கர்-மீனாட்சி, சாஸ்தா, மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, சோமலிங்கர், அகஸ்தியர், வாசுகி, மகாலிங்கம், சங்கரலிங்கம், காசிவிஸ்வநாதர், பெரிய ஆண்டவர் சாஸ்தா, சிவாலய முனிவர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன.

திருமால் சிவன் ஆனது திருவிளையாடல் புராணம்

கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார்.
அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது.

கோவிலுக்கு செல்லும் வழி

திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் தென்காசியில் இருந்து 5கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.

Комментарии

Информация по комментариям в разработке