லூர்து மலைக் கெபியினிலே... /தனம் செபாஸ்டின் - யூஜின் / Lourdhu matha

Описание к видео லூர்து மலைக் கெபியினிலே... /தனம் செபாஸ்டின் - யூஜின் / Lourdhu matha

லூர்து மலைக் கெபியினிலே
காட்சி தந்த நாயகியே
ஜெபமாலை வல்லமையை
உணரச் செய்தாயே உமை
நாடி வந்தோம் தேடி வந்தோம் காத்தருள்வாயே

1. பாவிகளின் அடைக்கலமே
துயருற்றோரின் ஆறுதலே - 2
நலம் வேண்டி வருவோர்க்கு ஆரோக்யம் தருபவளே - 2
நீரூற்றைப் பிறப்பித்து புதுமை நல்கும் பதுமையே
பாவிகளை நெறிப்படுத்தி புண்ணியத்தை வளர்ப்பவளே
நாங்கள் உம்மைச் சரணடைந்தோம்
எங்களின் அடைக்கலமே

2. சிறு பிள்ளை பெர்னதத்தை காட்சி காண தேர்ந்தெடுத்தீர்.
ஜெபம் தபம் இரண்டையும் ஆயுதமாய் ஏந்தச் சொன்னீர்
குருடர்க்குப் பார்வையும்
செவிடர்க்குத் திறனையும்
முடவர்க்கு நடையும் தந்து
மறு வாழ்வு தந்தவளே!
எங்களின் குறைதீரும்
இறைவனின் தாய் மரியே/
இறை மகன் தாய் மரியே!

பாடல்: திரு. யூஜின், தூத்துக்குடி

இசை: தனம் செபாஸ்டின், மதுரை.

இசை அமைப்பு: திரு டினோஜின், தூத்துக்குடி.

பாடகர்கள்: திரு ஹென்றி ஸ்டீஃபன்சன் & திரு யூஜின் தூத்துக்குடி.

கோரஸ்: அபிஷா & அரோமா, தூத்துக்குடி.

Recorded , Mixed and mastered by chandran @Ashis Haven, Tuticorin.

Editing : MWC Blessing River, madurai

Produced by: Sandhana Creations.

Комментарии

Информация по комментариям в разработке