வேட்டை நாய் காதலன் | குட்டி ரூ.5,000 | Vettai Naai | Hello Madurai | App | TV | FM |

Описание к видео வேட்டை நாய் காதலன் | குட்டி ரூ.5,000 | Vettai Naai | Hello Madurai | App | TV | FM |

நாட்டு இன நாய்கள் எல்லாமே வேட்டை நாய்கள்தான். அன்றைய காலத்தில் விவசாய நிலங்களும், வேட்டை நாய்களும் பிரிக்க முடியாத ஒன்று. அப்படி வேட்டை நாய் வளர்ப்பவர்கள் பலரும் இருந்துள்ளனர். இதில் சிலர் வேட்டை நாய்களுக்காக கல்யாணம் முடிக்காமல் அதற்காகவே வாழ்ந்துள்ளனர். அப்படி ஒருவர்தான் ஐயா முனியாண்டி அவர்கள்.


அருப்புக்கோட்டை அருகில் உள்ள பாப்பாக்குடி எனும் கிராமத்தில் வசித்து வருகின்றார். கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றார். இதுவரை 300க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். (குட்டிகளை சேர்க்காமல்)


நாமும் ஆர்வமாக மதுரையில் இருந்து கிளம்பிேனாம். பாப்பாக்குடிக்குச் செல்வதற்குள் ஒரு வழி ஆகிவிட்டோம். வேறு ஒன்றும் இல்லை அனல் பொசுக்கும் வெயில். வழி நெடுக சீமைக் கருவேலம் மரம், இடை இடையே பருத்தி சாகுபடி, காய்கறி சாகுபடி என்று கண்ணில் கொஞ்சம் பச்சை தென்பட்டது.

ஒரு வழியாக கேட்டு கேட்டு பாப்பாக்குடியை அடைந்தோம். அந்த கிராமத்தில் மொத்தம் 50 வீடுகள் இருந்தால் ஆச்சர்யம். ஊரின் நுழைவு இடத்திற்கு பின்புறமாக ஐயா முனியாண்டி தற்போது வசிக்கும் தோப்பு இருந்தது.

பைக்கை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே செல்ல முயற்சிகையில், 4 நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிட்டன, நமது ேகமராமேன் தம்பிக்கு நாய் என்றாலே பெரும் பயம். பிறகு ஐயா எங்களை கூட்டிச் சென்றார்.

கையில் கொண்டு வந்திருந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எல்லா நாய்களுக்கும் கொஞ்சம் கொடுத்தோம். கூடுதலாக பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அந்த வேட்டை நாய்களை பார்த்தாலே ஒரு தனி சுகம்தான்.

உடல் முழுக்க வேட்டை ஆடியதற்கான தழும்புகள் நிறைய காணப்பட்டது. பிஸ்கட் போட்டு ஒரு வழியாக தாஜா செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தேன். நன்றாக பழகியதுபோல் உடனே ஒட்டிக் கொண்டது.

ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. ஐயாவிடம் இது என்ன ? ஏன் இப்படி ? என்ன காரணம் ? என்று பல கேள்விகளை கேட்டுக் கொண்டே பேசினோம். ஒரு கைலி, பனியன், தோளில் ஒரு துண்டு இதுதான் ஐயாவின் இயல்பான தோற்றம். கொஞ்ச நேரத்தில் ஐயாவுடனும் நெருங்கிவிட்டோம்.

நல்ல குட்டிகள் நிறையா இருந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமான விளையாடிக் கொண்டிருந்தது. தாய்பாலை குடித்துக் கொண்டு துள்ளிக் குதித்தது. சற்று நேரம் அதை ரசித்துவிட்டு இருந்த நேரத்தில், ஐயா ஒரு விசில் அடித்தார். அவ்வளவுதான் இன்னும் சில நாய்கள் ஓடி வந்தன.

கேமரா தம்பிக்கு கருப்பு கலர் நாய் மேலத்தான் ஒரே கண்ணு. அண்ணே இந்த நாய் அழகா இருக்குல என்று கேட்டுக் கொண்டே சில வீடியோக்ளை எடுத்துக் கொண்டு பேட்டிக்குள் நுழைந்தோம். அதில் என்னென்ன பேசியுள்ளார் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பேட்டி முடிந்ததும், மறுபடியும் நாய் குட்டிகளை வீடியோ எடுக்கும் பணி ஆரம்பமானது. நான் ஐயாவிடம் பல கேள்விகளை கேட்டு கொஞ்சம் நாட்டு நாய்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டேன்.


வீடியோ பணிகள் முடிந்ததும், புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார் கேமரா தம்பி. அத்தோடு நின்றாரா ? என்னை அசுரன் போல கையில் கம்பு, தலையில் தலைப்பாகை, ஒரு போர்வை என என் கெட்டப்பை மாற்றினார். அதுவரை என்னிடம் கொஞ்சிய நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிட்டன. அடையாளம் தெரியல குடு குடுப்பை காரனு நெனச்சுருச்சுனு நினைக்கிறேன்.

தம்பி பல்வேறு கோணங்களில் எடுத்து என்னை மகிழ்வித்தார். இதுவரை நாய்க்கு பயந்த தம்பி முதல் முறையாக கறுப்பு கன்னி நாயை படிச்சாப்புல ஒரு போட்டோ என்று, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போஸ் கொடுத்தார்.


அந்த பணி முடிந்தவுடன் ஐயா விடம் நன்றியை தெரிிவித்துக் கொண்டு, கூகுள் மேப் சொல்லும் பாதையில் சென்று ஒரு தேனீர் கடையில் பிஸ்கட், தேனீர் இடைவெளிக்குப் பிறகு, மதுரை நோக்கி புறப்பட்டோம். திருமங்கலம் வரை நிற்காமல் ஓட்டி வர, தண்ணீர் குடிக்க ஒரு மர நிழலில் பைக்கை நிறுத்த, தம்பி கீழே இறங்கினார்.

அவரிடம் கேட்டேன் தம்பி கேமரா ஸ்டாண்ட் எங்க என்று, தம்பி அண்ணே தேனீர் கடையில் வச்சுட்டேனு பவ்யமா ஒரு குண்ட போட்டாரு. இது என்னடா சோதனைனு மறுபடியும் பாப்பாக்குடிக்கு பயணம். சும்மா வெயில் ஒரு பதம் பார்த்துவிட்டது.


மறுபடியும் அந்த கோனார் மெஸ் தேனீர்கடைக்கு வந்து சேர்ந்தோம். அங்கு எங்களுக்ககாக காத்திருந்த கடை ஓனர், தம்பி வச்சுட்டு போய்டீங்களே பா... னு கையில் எடுத்துக் கொடுத்தார். மறுபடியும் ஒரு தேனீர் குடித்துவிட்டு, எங்களது நன்றிைய தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் மறுபடியும் மதுரைக்கு பறந்தோம்.

கிட்டதட்ட 300 கி.மீ பயணம் முதுகு, மூட்டு வலி ஒரு பக்கம், பைக்கில் நிரப்பிய பெட்ரோல் ரூ.500 குடிச்சுருச்சு. எப்டியோ ஸ்டென்ட் கிடைச்சுருச்சுடா சாமி னு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த பயணம் கன்னி நாய்களுக்காக கடையநல்லூர் வரை செல்ல திட்டமிட்டுள்ளோம். அந்த வீடியோவுடன், அந்த பயண அனுபத்தையும் தெரிந்து கொள்ள காத்திருங்கள்.


நன்றிகள்


ஐயா முனியாண்டி தொலைபேசி எண்: 80981 83226, 91590 24817

_________________________________________________________
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/de...

💓 Facebook :  / maduraivideo  

💓web site : https://hellomaduraitv.com/

💓web site : https://hellomadurai.in/

💓web site : https://tamilvivasayam.com/

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

Комментарии

Информация по комментариям в разработке