மலைமாடு பால் கறக்க பாடும் பாடல் | கிடை மாடு கீதாரி வாழ்க்கை பயணம் 09 | Hello Madurai | Tv | Fm | Web

Описание к видео மலைமாடு பால் கறக்க பாடும் பாடல் | கிடை மாடு கீதாரி வாழ்க்கை பயணம் 09 | Hello Madurai | Tv | Fm | Web

சிலப்பதிகாரத்தின் சிறந்த குணமாகிய மாதிரி வம்சத்தினர் இன்றைக்கும் தங்களது பாரம்பரிய முறைப்படி நாட்டு மாடு மேய்த்து வருவது குறித்து நேர்காணலுக்கு சென்றிருந்தோம். அழகர்கோவில் அருகில் உள்ள வெள்ளிமலைப்பட்டியை அடைந்தது பெரும் தேடலாகும். கிட்டதட்ட ஒரு மணி நேரமாக வழி தெரியாமல் தேடி அலைந்தோம். அதற்கு காரணம் அப்பகுதியில் புதிதாகப் போடப்படும் சாலையே.

நம்மை பெருமாள் எனும் கீதாரி காத்திருந்து அழைத்துச் சென்றார். மலை அடிவாரத்திற்கு கீழ் பகுதியில் 20 குடும்பத்தார்களின் 300க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தன. அவர், மாடுகளை காண்பித்தவுடன், திரு.அழகர்சாமியிடம் எங்களை அழைத்துச் சென்றார்.

அவரிடன் முதல் வீடியோ லிங்க்

அழகர்சாமி வீடியோவிற்கு அடுத்ததாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு நபர்தான் திரு. சண்முகம் அவர்கள. இவரது வீடியோ லிங்க்

   • மலைமாடு பால் கறக்க பாடும் பாடல் | கிட...  

திரு.சண்முகம் வீடியோவிற்கு அடுத்ததாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு நபர்தான் திரு. பெருமாள் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாடு மேய்ப்பவர்கள் ஒரு தவ வாழ்க்கை வாழ்வதுபோல், அவர்கள் மண்பானையில் சமைக்கும் உணவை அவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்றும், அப்படி சாப்பிடும் சோற்றினை வலது கையால் இடது கையில் வைத்து, இடது கையில் இருந்தே சாப்பிடுவார்கள் என்று கூறிய செய்தி புதிதாக இருந்தது. அதற்கான காரணம் குறித்து வேறு ஒரு வீடியோவில் நிச்சயம் பதிவு செய்கின்றோம்.

அதேபோல் அவர்கள் வளர்க்கும் மாடுகளை அடிமாடுகளுக்கு அனுப்புவதில்லை என்றும், அவற்றை புதைத்துவிடுவோம் என்றும் கூறினார். அந்த பதிவுகளை இங்கு நாங்கள் வீடியோவாக கொடுத்துள்ளோம். முக்கியமாக இதில் சோகமான விசயம் என்னவென்றால் இவரது முந்தைய தலைமுறையினர் 1000 மாடுகள் வைத்திருந்தனர். இன்றைக்கு அது சுருங்கி 300 மாடுகள் மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் பற்றாகுறை என்பதும் கடந்த ஆண்டில் மட்டும், போதிய தண்ணீர் இல்லாமல் 200க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் இறந்துள்ளது என்பதும்தான்.

வெள்ளிமலைப்பட்டி மலையில் இரண்டு அருவிகள் உள்ளது. அதிலிருந்து தண்ணீர் இல்லாத காலங்களில் குட்டைகளில் அந்த தண்ணீரை நிரப்பினால் மாடுகளை நாங்கள் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறும்போது, மாதரி பெண்மணியாள் எங்கள் கண்முன்னே வந்தே நின்றாள்.

கோவலன் கள்வன் என்று பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கி கொலை செய்யப்பட்டதை அறிந்த மாதரி, தன்னிடம் அடைக்கலம் வந்தவர்களை காக்க தவறி விட்டுவிட்டோமே என்று அழுது தீயில் விழுந்து உயிர் துறந்தாள் என்கிறது சிலப்பதிகாரம். அப்படி வாக்கு தவறாதவர்களின் தலைமுறையினர் அவர்களது வழி வழியான தொழில் செய்து வரும் நாட்டுமாடுகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து இறப்பது எத்தனை கொடுமையாகும்.

அய்யாவிற்கும் அவர்கள் தலைமுறையாக வளர்த்து வரும் மாடுகளுக்கும் அரசு நிச்சயமாக வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் மலைகளில் மாடுகள் மேய அனுமதி வழங்க வேண்டும்.

சிலப்பதிகாரம் கூறுவது

” தாதெரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கலம் இழந்தேன் இடைக்குலமாக்காள்
குடையும் கோலும் பிழைத்தவோ என
இடையிருள் யாமத்து எரியகம் புக்கதும்! ”

திரு.பெருமாள் அய்யா அலைபேசி எண் | 95859 54160 | 99439 23672

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/de…

💓 Facebook :  / maduraivideo  

💓web site : https://hellomaduraitv.com/

💓web site : https://hellomadurai.in/

💓web site : https://tamilvivasayam.com/

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

#கீதாரி #கிடைமாடு #மலைமாடு #ஜல்லிக்கட்டு #நாட்டுமாடு #கீதாரி #கிடைமாடுவாழ்க்கை #கிடைமாடுபயணம் #மாடு #கிடைமாடு #புலிக்குளம்மாடு #காங்கேயம்காளை #நாட்டுஇனம் #நாட்டுஇனமாடுகள் #கிடைமாடு #நாட்டுமாடு #ஜல்லிக்கட்டு #முல்லைநிலம் #ஆயர் #இடையர் #கண்ணகி #சிலப்பதிகாரம் #மாதரி #இடையர்மாதரி #மாதரிஇலக்கியம் #மாதரிவாக்கு #தீயில்புகுந்தமாதரி #வாக்குதவறாதமாதரி #கண்ணகிக்குஅடைக்கலம்கொடுத்தமாதிரி #மாதரிமகள்ஐயை #புலிக்குளம்காளை #கீதாரி #ஏறுதழுவுதல் #erudhu_vidum_vizhaa #எருது_விடும்_விழா #jallikattu_kaalai_challenge

Комментарии

Информация по комментариям в разработке