Yedhukkadi Kudhambai I Kudhambai siddhar I குதம்பை சித்தர் | Siddhar padalgal I Shravan Kalai

Описание к видео Yedhukkadi Kudhambai I Kudhambai siddhar I குதம்பை சித்தர் | Siddhar padalgal I Shravan Kalai

பாடல் எழுதி அருளியது - குதம்பைச் சித்தர்
பாடல் இசை, வடிவமைப்பு மற்றும் பாடியது - ஷ்ரவன் கலை


Song written by - Kudhambai siddhar
Music Composed, Arranged & Sung by - Shravan Kalai


Recorded, Mixed & Mastered @ N5musicstudios, Chennai.

🎧Kindly use headphones for a better experience

யேதுக்கடி குதம்பாய்,

பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம்.

இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண் குழந்தை இல்லாததால் இவரது தாய் இவரை பெண்ணாக அலங்கரித்து மகிழ்வாராம். பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் குதம்பை என்ற காதணி இவருக்கு அணிவிக்கப்பட்டதால், இவர் குதம்பை என அழைக்கப்பட்டு இவரது இயற்பெயர் மறைந்தே போனது.

குதம்பைச்சித்தர் பெண்களை முன்னிலைப் படுத்தி மகடூஉ இலக்கணப் முறைப்படிபாடியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து சேர்த்து 246 ஆகும். இவரது பாடல் உலக வாழ்வைப் போற்றியும் வெறுத்தும் பாடப்பட்டவை. இறுதியில் மயிலாடு துறையில் இறையொளி எய்தினார்.

பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), – போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.


1. வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?

2. மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?

3. காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ?

4. வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ?

5. ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ?

6. நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ?

7. தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ?

8. சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ?

9. நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ?

10. முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?

11. உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ?

12. வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ?

13. சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ?

14. அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ?

15. ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ?

16. சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ?

17. பூரணங் கண்டோர்இப் பூமியிலே வரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.

18. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய் பார்ப்பாயடி.

19. உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றதுகாண் குதம்பாய்
திருவாகி நின்றதுகாண்.

20. ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.

21. கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோள் இவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி.

22. வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ?

23. மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ?

24. செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ?

25. தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி.

26. சான்றோர் எனச்சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான்தோல் ஏதுக்கடி?

27. நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
தாடிசடை ஏனோ குதம்பாய்
தாடிசடை ஏனோ?

28. மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

29. தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?

30. தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?

31. தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?

32. வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே
நாதனைக் காணுவர் காண் - குதம்பாய்
நாதனைக் காணுவர் காண்.





Looking forward for all your love and support😀😀


Check out my social media handles:

Youtube:    / shravankalai  
Instagram:   / shravan_kalai  
Facebook:   / shravan.kalai  
Twitter:   / shravankalai  

Комментарии

Информация по комментариям в разработке