மார்கழி 21 திருப்பாவை & திருப்பள்ளியெழுச்சி | MARGAZHI 21 THIRUPPAVAI & THIRUPALLIYEZHUCHI

Описание к видео மார்கழி 21 திருப்பாவை & திருப்பள்ளியெழுச்சி | MARGAZHI 21 THIRUPPAVAI & THIRUPALLIYEZHUCHI

#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை #திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி - 1
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !


திருப்பாவை - 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке