முள்ளங்கி சாம்பார் மிக சுவையாக செய்வது எப்படி😌//Mullangi Sambar//Tamil recipe /

Описание к видео முள்ளங்கி சாம்பார் மிக சுவையாக செய்வது எப்படி😌//Mullangi Sambar//Tamil recipe /

தேவையான பொருட்கள்
25 நிமிடங்கள்
6 பரிமாறுவது


1\4கி முள்ளங்கி

10சின்ன வெங்காயம்

2தக்காளி

150கி துவரம் பருப்பு

1ஸ்பூன்தலா கடுகு, சீரகம்

2-3வர மிளகாய்

1கொத்து கறிவேப்பிலை

1\4ஸ்பூன் பெருங்காயத்தூள்

2குழிக்கரண்டி சாம்பார் பொடி

1நெல்லிக்காய் அளவு புளி

1\4ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையானஅளவு உப்பு

2டேபிள்ஸ்பூன் எண்ணெய்



சமையல் குறிப்புகள் (ALLINONENAD)


1.குக்கரில் துவரம்பருப்பை சேர்த்து நன்கு கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்


2.பிறகு பொடியாக அரிந்த தக்காளி, வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி விடவும். பிறகு தோல் சீவி வட்ட வடிவத்தில் நைசாக நறுக்கிய முள்ளங்கி துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்


3.இப்போது 2 குழிக்கரண்டி அளவு சாம்பார் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வரை பச்சை வாடை போக வதக்கி விடவும்


4.இப்போது வெந்த பருப்பினை அடுப்பில் வைத்து அதில் வதக்கிய காய்களை சேர்த்து வேகவிடவும்

5.ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை அதிக தணலில் வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து காய் வேக விடவும்

6.காய் முக்கால் பதம் அளவு வெந்ததும், புளியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்து புளிக்கரைசல் ஆக குழம்பில் ஊற்றி மீண்டும் ஒரு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.


Thankyou 😁 Subscribe my channel 🥰🥰









#mullangisambar
#howtocook #millionviews #tamil
#cookingvideo
#sambarrecipe #kongustyle
#sambar #mullangisambar #foodvlog
#tamilcooking #trending

Комментарии

Информация по комментариям в разработке