MADHUBA MADHUBA DHOOTHAM – THARANGAM 10 – GITAM 100 : மதுப மதுப தூதம் - தரங்கம் 10 - கீதம் 100

Описание к видео MADHUBA MADHUBA DHOOTHAM – THARANGAM 10 – GITAM 100 : மதுப மதுப தூதம் - தரங்கம் 10 - கீதம் 100

This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.

If we know to the best of our knowledge that there is no ups and downs among human beings based on our cycle of time, the truth will be seen. We realize that God is the power beyond our power and worship Him. We do not realize that the Supreme Being is also a slave to His devotees. Lord Sri Krishna Paramatma is always showering blessings on his devotees. As an example of this, when Priya left Gokulam and came to Mathura city, realizing that the devotee gopikais were saddened, after the death of Kamsa, Sri Krishna called his other devotee Uttava who was living in Mathura city and went to Gokula and informed the gopikais there that they were sorry for his separation. As soon as possible Gokulam came and sent them to appease them saying that he would see them. Sri Sri Sri Narayana Theertha Swami has mentioned in this Tharanga Gita that Utdha also considered this as normal and when he went to Gokulam and saw the gopis, he was surprised to see that they had sky-high devotion to Sri Krishna and felt that his devotion to Sri Krishna was nothing compared to their devotion.

From this song we should learn how to relate to our society and how to treat our near and dear ones. Although it is not necessary to send a messenger for the gopikas, to prove their true devotion, Sri Krishna Paramatma sent Sri Utdhava to Gokula to pacify the truly pious gopikas.

Let us sincerely worship Sri Krishna Paramatva who has shown us such good habits and follow the way shown by him!

Sarvam Sri Krishnarpanamastu

நமது கால சக்ரத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு என்பது கிடையாது என்பதை நமது அறிவிற்கு எட்டியவாறு அறிந்துகொண்டால் உண்மை புலப்படும். நமது சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியே பகவான் என நாம் உணர்ந்து அவரை வணங்கி வழிபடுகிறோம். அவ்வாறு உயர்ந்த நிலையில் விளங்கும் பகவானும் தனது பக்தர்களுக்கு அடிமை என்பதை நாம் உணர்வதில்லை. பகவான் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா எப்போதும் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருப்பார். இதற்கு எடுத்துக்காட்டாக தான் கோகுலத்தை விட்டு மதுரா நகரம் வரும்போது பிரியா விடை கொடுத்து வழியனுப்பிய பரம பக்தர்களான கோபிகைகள் மனம் வருத்தத்துடன் இருப்பதை உணர்ந்து கம்சன் வதம் ஆன பின் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா மதுரா நகரத்தில் வசித்து வரும் தனது மற்றொரு பரம பக்தரான உத்தவரை அழைத்து கோகுலம் சென்று அங்குள்ள கோபிகைகள் தனது பிரிவினால் மனம் வருந்துகிறார்கள் என்றும் அவர்களை பற்றிய விவரங்களை தெரிவித்து தான் கூடிய விரைவில் கோகுலம் வந்து அவர்களை பார்ப்பதாக கூறி சமாதானப்படுத்துமாறு அறிவித்து அனுப்பி வைத்தார். உத்தவரும் இதைச் சாதாரணமாக கருதி கோகுலம் சென்று கோபிகைகளை பார்த்தபோது அவர்களுக்கு ஶ்ரீ கிருஷ்ணனிடம் வானளாவிய பக்தி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு தனது ஶ்ரீ கிருஷ்ண பக்தி அவர்களது பக்தியின் முன் ஏதுமில்லை என்று உணர்ந்து அவரும் சில காலங்கள் கோபிகைகளுடன் சேர்ந்து காலம் கழித்த பிறகு மதுரா நகரம் திரும்பினார் என்பதையே ஸ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் இந்த தரங்க கீதத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

இந்த பாடலிலிருந்து நாம் நமது சமூகத்துடன் எவ்வாறு உறவைப் பேண வேண்டும் என்பதையும், நம் நெருங்கியவர்களையும் அன்பானவர்களையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். கோபிகைகளுக்காக தூதுவரை அனுப்புவது அவசியமில்லை என்றாலும் அவர்களின் உண்மையான பக்தியை நிரூபிக்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உண்மையான பக்தியுள்ள கோபிகைகளை சமாதானப்படுத்தவே ஸ்ரீ உத்தவரை கோகுலத்திற்கு அனுப்பியது இயல்பான மனித குணத்திற்கு களங்கம் விளைவிக்காத முறையாக நடந்துகொண்டது இந்த தரங்க கீதம் என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறான நல்ல பழக்க வழங்கங்களை நமக்கு காட்டிய ஶ்ரீ கிருஷ்ண பரமாத்வாவை மனதார வணங்கி அவர் காட்டிய வழியை பின்பற்றுவோமாக!

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Комментарии

Информация по комментариям в разработке