பனையபுரம் சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோயில்| மூன்று சத்ரு சம்ஹார முருகன் உள்ள ஒரே தலம்

Описание к видео பனையபுரம் சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோயில்| மூன்று சத்ரு சம்ஹார முருகன் உள்ள ஒரே தலம்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள்

20. புறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் )

மூலவர் – பனங்காட்டீஸ்வரர்
அம்பாள் – சத்யாம்பிகை ( புறவம்மை )
தலமரம் – பனைமரம்
தீர்த்தம் – பத்மதீர்த்தம்
புராண பெயர் – திருப்புறவார் பனங்காட்டூர்
ஊர் – பனையபுரம்
மாவட்டம் – விழுப்புரம்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – சம்பந்தர்

• தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் 2௦ வது தலம் இது
• பனையைத் தலமரமாக கொண்டு விளங்கும் பஞ்ச தலங்களில் இத்தலமும் ஒன்று. அவை :
o 1. வன்பார்த்தான் பனங்காட்டூர் ( திருப்பனங்காடு )
o 2. திருப்பனையூர்
o 3. திருப்பனந்தாள்
o 4. திருவோத்தூர் ( செய்யாறு )
o 5. புறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் )
• சூரியன் வழிபட்ட தலம்
• சிறிய ராஜகோபுரம்
• வெளிப்பிரகாரத்தில் விநாயகர் , ஆறுமுகர் , நவக்கிரகங்கள் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன
• வெளிப்பிரகாரத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அவற்றினடியில் சிவலிங்கத்திருமேனி உள்ளது
• அம்பாள் சந்நிதி தனிச்சன்னிதியாக வெளிப்பிரகாரத்தில் சிவனாரின் இடப்புறமாக அமைந்துள்ளது. அம்பாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்
• சிவனார் கருவறை முன்பு ஒருபுறம் விநாயகரும் , மறுபுறம் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர்
• உள்பிரகாரத்தில் விநாயகர் , 63வர் , சப்தமாதர்கள் , பைரவர் , தேவியருடன் மகாவிஷ்ணு , நால்வர் , சண்டிகேஸ்வரர் , சோமாஸ்கந்தர் , சூரியன் , கஜலட்சுமி முதலானோரின் சந்நிதிகள் உள்ளன
• 63வரகளில் நீலகண்டர் மனைவியுடன் இருவரும் தடியைப் பிடித்தவாறு காட்சி தருவது அபூர்வமான ஒன்று
• நடராஜர் சபை மற்றும் உற்சவமூர்த்தங்கள் சந்நிதி
• சிவனார் அழகிய சிவலிங்கத்திருமேனியராக கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்.
• கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , பிட்சாடனர் , தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர் , பிரம்மா , துர்க்கை முதலியோர் திருக்காட்சி
• சனைச்சரன் ஆறுமுகனாருடன் காட்சி தருகிறார்
• ஆலயத்தின் முன்பு புடைச்சிற்பமாக உள்ள விநாயகர் வடிவம் மிகப்பழமையானது
• ஆண்டுதோறும் சித்திரைத்திங்கள் முதல் ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சிவனாருக்கும் , பின்பு அம்மைக்கும் சூரிய வழிபாடு நடைபெறுகின்றது
• சிபிச்சக்கரவர்த்திக்கு சிவனார் இழந்த கண்களை மீ்ண்டும் கொடுத்து பார்வையளித்த தலம்
• மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன
• திருமணத்தடை நீங்கவும் , மழலை பாக்கியம் பெறவும் ,கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கவும் வழிபடவேண்டிய தலம்

தரிசன நேரம்

காலை 06:30 am – 11:00 pm &
மாலை 05:00 pm – 08:30 pm

கோயில் Google map link

https://maps.app.goo.gl/pkoePxxd8aZXH...

அமைவிடம்

திண்டிவனம் – விழுப்புரம் சாலையில் விக்கிரவாண்டியைத் தாண்டி வரும் தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
விழுப்புரம் – பாண்டி ( வழி : திருக்கனூர் ) செல்லும் சாலையில் சென்றாலும் இத்தலத்தை அடையலாம். முண்டியம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள தலம்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.

if you want to support us via UPI id

k.navaneethan83@ybl

Join this channel to get access to perks:

   / @mathina  

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке