திருப்புகழ் - சிவமாதுடனே - திருவருணை

Описание к видео திருப்புகழ் - சிவமாதுடனே - திருவருணை

சொல் விளக்கம்

சிவமா துடனே
-சிவம் என்கின்ற தலைவியுடன்
அநுபோ கமதாய்
-இன்ப நுகர்ச்சி கொண்டவனாக,
சிவஞா னமுதே
-சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு
பசியாறி
-அதனால் அறிவுப் பசி தீர்ந்து,
திகழ்வோ டிருவோர்
-விளங்கும் `தலைவன் - தலைவி`
என்ற ஈருருவமும்
ஒருரூபமதாய்
-ஒரே உருவமாய்
திசைலோ கமெலாம் அநுபோகி
-எட்டுத் திசையிலுள்ளவர்
சுகித்து உணர்பவன்
இவனே யெனமா லயனோ டமரோர்
-இவன்தான் என்று
திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி,
இளையோ னெனவே
-இவன் இளையவன் (முருகன்) என
வியந்து கூற,
மறையோத
-வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற,
இறையோ னிடமாய்
-சிவபிரானிடத்தில் வேண்டி,
விளையா டுகவே
-யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக
இயல்வே லுடன்மா அருள்வாயே
-அழகிய வேலும் மயிலும்
தந்தருள்வாயாக.
தவலோ கமெலாம்
-மிகவும் உலகங்கள் யாவும்
முறையோ வெனவே
-இது முறையாகுமா என்று ஓலமிட,
தழல்வேல் கொடுபோய்
-நெருப்பை வீசும் வேலுடன் சென்று
அசுராரைத் தலைதூள் பட
-அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி,
ஏழ் கடல்தூள் பட
-ஏழு கடல்களும் தூள்படும்படி,
மாதவம்வாழ் வுறவே
-சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு
விடுவோனே
-அந்த வேலைச் செலுத்தியவனே,
கவர்பூ வடிவாள்
-மனம் கவரும் மலரின் அழகுடையவளும்,
குறமா துடன்
-குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம்
மால் கடனா மெனவே
-ஆசை கொள்வது உன் கடமை என்று
அணைமார்பா
-அவளை அணைந்த மார்பனே,
கடையேன் மிடிதூள் பட
-கடைப்பட்டவனாகிய என் துன்பம்
தூள்படவும்,
நோய் விடவே
-என் நோய் தொலையவும் (அருளி),
கனல்மால் வரைசேர் பெருமாளே.
-அக்கினிப் பெருமலையாம்
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
🦚🦚🦚

Комментарии

Информация по комментариям в разработке