கதை 40 # குழந்தைக்கு ஜுரம் || தி. ஜானகிராமன்

Описание к видео கதை 40 # குழந்தைக்கு ஜுரம் || தி. ஜானகிராமன்

"அறம்" என்ற ஜெயமோகனின் சிறுகதையில், எழுத்தாளர் ஒருவரை, ஒரு பதிப்பாளர் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற முயற்சிப்பதோடு அல்லாமல் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் அவமானப் படுத்தி விடுவார்.

அதே போல இந்தக் கதையிலும் சரவண வாத்தியார் என்னும் ஆசிரியர் தான் எழுதிக்கொடுத்த புத்தகங்களுக்கான மீதிப் பணத்தை கேட்கும்பொழுது 400 ரூபாய்க்குப்பதில் 300 ரூபாய்கள் தான் பாக்கி என்று அவரை பொய் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறான் பஞ்சு என்ற பதிப்பக உரிமையாளர்.

அவன் பொய்யைத் தாங்க முடியாத சரவண வாத்தியார் தனக்குப் பணமே வேண்டாம் என்றும் இனி அவன் வீட்டு வாசல் குத்து செங்கல்லைக்கூட மிதிக்க மாட்டேன் என்றும் சபதமிட்டு விட்டு அங்கிருந்து நகர்கிறார்.

வறுமையும் அவரது குழந்தையின் உடல் நலக் குறைவும் அவரை மிகப் பெரியதொரு மனப் போராட்டத்திற்கு உள்ளாக்குகின்றன. மீண்டும் பஞ்சுவைப் பார்த்து தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்பதா வேண்டாமா என்பதே அவருக்கு ஏற்பட்ட உளைச்சல்.

"அறம் " சிறுகதையில் செட்டியார் வீட்டம்மா எழுத்தாளருக்கு உதவுவது போல் இந்தக்கதையிலும் பஞ்சுவின் மனைவியின் ரூபத்தில் சரவண வாத்தியாரின் மனச்சுமை நீங்குகிறது. ஆனால் முற்றிலும் வேறு விதத்தில்.

வறுமைக்கும் சுயமரியாதைக்கு இடையே நடக்கும் போராட்டத்தில் மனிதநேயமும், கருணையும், பிரதியுபகாரம் கருதா சேவையும் பொங்கிப் பிரவாகமெடுத்து அனைத்துக் கசப்புகளையும் கழுவிச்செல்வது மிகவும் நெகிழ்வான தருணம்.

Комментарии

Информация по комментариям в разработке