ஆரோக்கியமான பச்சைப்பயறு ரெசிப்பீஸ் | Green Gram Recipes In Tamil |

Описание к видео ஆரோக்கியமான பச்சைப்பயறு ரெசிப்பீஸ் | Green Gram Recipes In Tamil |

ஆரோக்கியமான பச்சைப்பயறு ரெசிப்பீஸ் | Green Gram Recipes In Tamil | ‪@HomeCookingTamil‬

#greengramrecipes #greengramidli #greengramdosa #greengramcurry

Chapters:
Promo - 00:00
Green Gram Dosa - 00:24
Green Gram Curry - 03:57
Green Gram Paratha - 07:28
Green Gram Idli- 12:30

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை
தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு - 1 கப்
பச்சரிசி - 50 கிராம் (1 மணிநேரம் ஊறவைத்தது)
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
கல் உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர்
நெய்

செய்முறை:
1. முதலில் பச்சைப்பயிரில் தண்ணீர் ஊற்றி 12 மணிநேரம் ஊறவிட்டு பின்பு தண்ணீரை வடிகட்டி
பயிரை துணியில் கட்டி 12 மணிநேரம் வைக்கவும்.
2. அடுத்து அரிசியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
3. பின்பு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் ஊறவைத்த பச்சை பயறு சேர்த்து தண்ணீர் இன்றி
அரைக்கவும்.
4. பின்பு மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
கரைக்கவும்.
5. பிறகு தோசைக்கல்லை சூடு செய்து அதில் மாவை ஊற்றி தேய்க்கவும். பின்பு சுற்றிலும் நெய்
ஊற்றி தோசை வெந்ததும் சூடாக பரிமாறவும்.
6. பச்சைப்பயறு தோசை தயார்!

பச்சைப்பயறு கறி
தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 1/2 கப்
தண்ணீர்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு - 1 தேக்கரண்டி இடித்தது
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. பச்சைப்பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. ஊறவைத்த பச்சைப்பயிரை பிரஷர் குக்கரில் போட்டு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் சீரகம், பெருங்காயதூள் சேர்த்து கிளறவும்.
4. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. பின்பு இடித்த இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கிளறி பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
6. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
7. அடுத்து வேகவைத்த பச்சைப்பயிரை கடாய்க்கு மாற்றி தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
8. எல்லாவற்றையும் கலந்து சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
9. இறுதியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து விடவும்.
10. ஆரோக்கியமான மற்றும் சுவையான பச்சைப்பயறு கறியை மேலே ஒரு துளி நெய்யுடன் சூடாகப் பரிமாறவும்!

பச்சை பயிறு பராத்தா
தேவையான பொருட்கள்

பச்சை பயிறு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பற்கள்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்

பச்சைப்பயறு இட்லி
தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர்
உப்பு

செய்முறை
1. பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. இரண்டு பருப்பையும், தண்ணீரை வடிகட்டி மையாக அரைத்து கொள்ளவும்.
4. அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் வைக்கவும்.
5. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவு ஊற்றி வேக வைக்கவும்.
6. வெந்த இட்லியை இரண்டு நிமிடங்கள் கழித்து எடுக்கவும்
7. பச்சைப்பயறு இட்லி தயார்.

Green gram is good for health. It is important that we include green gram to our regular diet. So today, I am going to show you all 4 easy and tasty tiffin recipes with green gram. You can have these for breakfast as well as early dinners. So watch the video till the end, try the recipes and let me know how they turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке