ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 6. அசோகவனம்

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 6. அசோகவனம்

ஸ்ரீ ராமஜயம்! ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

எழுத்து & இயக்கம் : வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் : அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.

6. அசோகவனம்

ராகம் : காம்போஜி

பல்லவி

அசோக வனத்தைக் கண்டாரே அனுமன்
மனம் புத்தி சித்த மரங்களடர்ந்த (அ)

அனுபல்லவி

சிம்சுபா விருக்ஷம் சிந்தையின் வடிவம்
அம்மரத்திலே அமர்ந்தாரே (அ)

சரணம்

அதர்மமேன்னும் அரக்கர்கள் சூழ்ந்த இடம்
தர்மமென்னும் திரிசடை திரியும் இடம்
இராம நாமம் நன்றாய் நிலவும் இடம்
இராமனின் துணையவள் அமரும் இடம் (அ)

#aitechnology

Комментарии

Информация по комментариям в разработке