ஓசூரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

Описание к видео ஓசூரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

*ஓசூர் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவிலில் மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா.
பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் சமத்துவபுரம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில்.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயான பூஜை திருவிழா வெகு விமர்சியாக நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடுகள் நடத்தினார்கள்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள தேர்ப்பேட்டை பச்சை குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடம் மற்றும் மஞ்சள் குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் உடல்களிலும் வாய் முதுகு உள்ளிட்ட பகுதிகளிலும் அழகுகள் குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியவாறு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

இதனை ஒட்டி இன்று காலை தேர்ட் பேட்டை தெப்பக்குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பால் மற்றும் மஞ்சள் குடத்தை எடுத்துக்கொண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாகலூர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் மஞ்சள் நீரை மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Комментарии

Информация по комментариям в разработке