என்னது! சூரபத்மன் ஒரு ஏலியனா? குகை முருகன் கோவிலில் மறைக்கப்படும் ரகசிய பாதாள நகரம்! | பிரவீன் மோகன்

Описание к видео என்னது! சூரபத்மன் ஒரு ஏலியனா? குகை முருகன் கோவிலில் மறைக்கப்படும் ரகசிய பாதாள நகரம்! | பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - யாரும் பயப்படாதீங்க
00:18 - அறிமுகம்
01.48 - குகையைத் தேடி ஒரு பயணம்
02:13 - முருகன் கோவில்
02:38 - ரகசிய சுரங்கப்பாதை
03:53 - நிறைய குகைகள்
06:05 - பூமிக்கடியில் ரகசிய நகரம்
08:31 - பாதாள உலகத்தின் வாசலா?
09:20 - இது ஏலியன்களால் கட்டப்பட்டதா?
11:08 - இதை ஏன் கட்டினார்கள்?
11:50 - முடிவுரை

Hey Guys! எனக்கு தெரியும்! என்னடா இவரு இந்த லைட்ட வச்சிகிட்டு இந்த நட்டநடு காட்டுல என்ன பண்ணிட்டு இருக்காருன்னு தான நினைக்கிறீங்க? நான் ஒரு பழங்காலத்து குகைய தேடி போறேன். அது ரகசியமா இருக்கற ஒரு பாதாள நகரம்! அது சூரபத்மன் அப்படிங்குற ஒரு reptilian பயன்படுத்துன இடமா கூட இருக்கலாம். இத பத்தி பழங்காலத்து indian books-ல சொல்லிருக்காங்க. அது மட்டுமில்லாம இங்க இருக்குற ஜனங்க கூட, அந்த மாதிரி சூர பத்மன் பயன்படுத்துன ஒரு குகை இங்க இருக்கறதாவும், சூரபத்மன முருகப் பெருமான் சம்ஹாரம் பண்ணதோட நியாபாகார்த்தமா அந்த குகைய சுத்தி கோயில் கட்டுனதாவும் சொல்றாங்க.

இந்த பழங்காலத்து பாதைய தான் சூரபத்மன் அந்த குகைக்கு போறதுக்கு பயன்படுத்துனதா சொல்றாங்க. இந்த மாதிரி பழங்கால books-ல சொல்லிருக்கறத வச்சும், கதைங்கள்ல சொல்றத கேட்டும், அந்த குகைய தேடி போறது எல்லாம் பைத்தியக்காரத்தனம்னு எனக்கு நல்லாவே புரியுது!

ஆனா சில நேரத்துல நம்மளோட எதிர்பார்ப்புகளையும், கற்பனையையும் மீறி ஒரு சில உண்மைகளும் இருக்கும். அதனால நாம நேருல போய் பாத்து உண்மை என்னனு தெரிஞ்சிக்கலாம், சரியா?

இதுல ஒரு நல்ல விஷயமும் இருக்குது. அது என்னன்னா, சூரபத்மன கொன்ன முருகன் கோவில கண்டுபிடிச்சாச்சு. ஆனா கெட்ட சேதி என்னன்னா, அந்த கோவில புதுபிச்சு paint அடிச்சு வச்சிருக்காங்க. அது மட்டுமில்லாம, பக்கத்துல குகை இருக்கறதுக்கான எந்த ஒரு அறிகுறியுமே இங்க இல்ல. அதனால நான் ரொம்பவே ஏமாந்துட்டேன். ஆனாலும் இங்க ஏதோ கிடைக்கும்னு எனக்கு தோணுது. Wow! ஒரு interesting ஆன விஷயம்!

என்னால ஒரு சுரங்கப்பாதைய பாக்க முடியுது! அது இங்க underground-க்கு போகுது! இது தான் சூரபத்மனோட பாதாள நகரமா? இது நமக்கு என்ன ரகசியத்தை ஒளிச்சு வச்சிருக்குனு போய் பாக்கலாம், வாங்க. (own words) இதெல்லாம் laterite, அதாவது செம்மண்ணுல கட்டிருக்கறத பாக்குறதுக்கே ரொம்ப interesting-ஆ இருக்குது. இங்க இருக்குற இந்த concrete patch எல்லாம் இப்போ இந்த குகைய புதுபிக்கிற (renovate பண்ற) அப்போ போட்டிருக்காங்க. இந்த குகைல இருக்குற செம்மண் material எல்லாம் கம்போடியா கோவில்ல பயன்படுத்துன அதே material தான்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா, angkor wat கோவில்ல outer சுவர்ல, இதே material-ல பயன்படுத்திருப்பாங்க.

இப்போ சில pillars இருக்குறத நீங்க பாக்கலாம். அப்படீன்னா, ஒருகாலத்துல, இந்த படிகட்டுங்க மூடியிருந்திருக்கும். அதுக்கு மேல ஒரு roof-ம் இருந்திருக்கும். அது மட்டுமில்லாம யாரும் உள்ள போகாம இருக்கறதுக்காக இந்த இடத்துல ஒரு கதவ போட்டு பூட்டி வச்சிருந்திருக்கலாம்.

இதுக்கு என்ன அர்த்தம்னா, ஏதோ முக்கியமான விஷயம் இதுக்குள்ள இருக்குது! வாங்க, உள்ள அப்படி என்ன தான் இருக்குன்னு போய் பாக்கலாம். Okay, இது ரொம்ப வித்தியாசமா இருக்குது. இது சாதாரண தண்ணி இருக்கற ஒரு கிணறாவோ, இல்லன்னா முட்டுசந்து மாதிரி ஒரு சின்ன குகையாவோ இருக்கும்னு நான் நினைச்சேன். ஆனா நான் நினைச்சதுக்கு மாறா, அங்க நிறைய குகைங்க இருக்குது. ஒண்ணொண்ணயும் நெறய விதமான directions-ல போற மாறி தோண்டிருக்காங்க. இத பாக்கறதுக்கே வினோதமா இருக்குது.

இங்க விளக்கேத்தி வச்சிருக்குறத நீங்க எல்லாரும் பாக்கலாம். இங்க பூஜையெல்லாம் கூட பண்ணிருக்காங்க.
இதெல்லாம் விளக்கேத்தி வக்கிறதுக்கான இடம். பாருங்க, இதெல்லாம் தான் விளக்கு வக்கிற இடம். இத மாதிரி தான் நிறைய குகைங்கள்ல விளக்கு வச்சி, ரொம்ப நேரமா, கிட்டத்தட்ட மணிக்கணக்கா கூட தியானம் பண்ணுவாங்க. So, இது இயற்கையான குகை இல்ல.

இப்போ கூட இவங்க எல்லாம் பூஜை பண்ணிருக்கறத நீங்க பாக்கலாம். இங்க விளக்கெல்லாம் கூட பாக்கலாம். இப்பவும் ஜனங்க இங்க வந்து போய்கிட்டு, சில பூஜைகள பண்ணிகிட்டு தான் இருக்காங்க.

இத பாருங்க, நான் இதை ON பண்றேன். அப்போ தான் இங்க என்ன இருக்குன்னு நமக்கு இன்னும் தெளிவா தெரியும்! இதையெல்லாம் ரொம்ப கவனமா குடைஞ்சி பண்ணிருக்காங்க(செதுக்கிருக்காங்க). ஆனா ஏன் இப்படி பண்ணிருக்காங்கன்னு தெரியல. பாருங்க, இங்க இதுல இருந்து தண்ணி கசியுது! வெளவாலு-ங்களுக்கு தான் இது சரியான இடம், மனுஷங்களுக்கு இல்ல. அப்படி இருக்கறதுக்கான எந்த ஒரு அடையாளமும் இங்க இல்ல. நான் இன்னும் உள்ள போகலாம். எனக்கும் அங்க உள்ள போகணும்னு ரொம்ப ஆசையா இருக்குது.

உங்களால அங்க தெளிவா பாக்க முடியுதான்னு எனக்கு தெரியல. ஆனா இந்த சுரங்கம் உள்ள இன்னும் நீண்டுகிட்டே போது. அதுல turning இருக்குறதையும் நீங்க பாக்கலாம். இன்னொன்ணும் இருக்குது, இப்படி நிறைய நிறைய சுரங்கம் உள்ள போறத நீங்க பாக்கலாம். ஆனா உள்ள full-ஆ வெளவாலுங்க தான் இருக்குது.

நான் சொன்னது ஞாபகம் இருக்கா ஒரு ரகசிய பாதாள நகரத்துக்குள்ள போறதுக்கு, இது ஒரு Entrance-ஆ கூட இருக்கலாம்னு சொன்னேன். அதுமட்டுமில்லாம, பழங்காலத்துல aliens இத பயன்படுத்திருப்பாங்க. நம்ம பழங்காலத்து books படி, சூரபத்மன முருகன் சம்ஹாரம் பண்ணினாரு. சூரபத்மன் மனுஷன் இல்ல guys, அவன் பாதி reptilian இல்லன்னா நாகம்! ஏன்னா அவனோட அப்பா ஒரு alien!


#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке