ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
வீடியோல சொன்ன links - அ நான் இங்க கீழே குடுத்துருக்கேன்.
https://tinyurl.com/uxdtpvcw
https://tinyurl.com/yfnykazr
https://tinyurl.com/yduch3wb
https://tinyurl.com/4e9rxtuc
Hey guys, இந்த video-ல, நான் ராஜராஜ சோழனோட கல்லறைய தேடி போனத பாக்கப் போறீங்க. அவரோட கல்லறை உடையாளூர் அப்படின்ற ஒரு சின்ன கிராமத்துல இருக்கறதா சொன்னாங்க. இந்த இடத்துல தான், அவர பொதச்சு இருப்பாங்க, இல்லனா எரிச்சு இருப்பாங்கனு கூட ஒரு வதந்தி இருக்கு. அங்க ரெண்டு அடி உயரத்துக்கு ஒரு லிங்கம் இருக்குறத பாத்து எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இந்த லிங்கத்தோட மீதி structure பதினாலு அடி ஆழத்துக்கு தரைக்கு அடில புதைஞ்சுருச்சுன்னு இந்த பெரியவர் சொன்னாரு.
இது வெறும் ஒன்ற அடி diameter இருக்க சாதாரண லிங்கம் தான். இது ராஜராஜ சோழனோட கல்லறைனு இந்த பெரியவர் சொல்றாரு. ராஜராஜ சோழன் எப்படி இறந்தார், அத பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு நான் இவர்கிட்ட கேட்டேன். அதுக்கு இவரு, ராஜ ராஜ சோழன் வயசாகி இயற்கையா தான் இறந்தாருனும், அப்பறம் இங்க தான் அவர பொதச்சாங்கனும் சொன்னாரு.
உலகமே கொண்டாட வேண்டிய ஒரு தலை சிறந்த மன்னனோட கல்லறை, இப்படி ஊரு பேரே தெரியாத அளவுக்கு இவ்ளோ மட்டமாவா இருக்கணும்? Guys, இங்க எந்த ஒரு கல்வெட்டும் இல்ல. அவ்ளோ ஏன், லிங்கத்துலயும், இந்த இடத்த சுத்தியும் கூட எந்த சிற்பமும் இல்லங்கறத உங்களால நல்லா தெளிவா பாக்க முடியும்.
நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க, ராஜராஜ சோழன் இந்தியாலயே ரொம்ப பெரிய கோயில கட்டுன ஒரு தமிழ் மன்னன். அந்தக் கோவில இப்போ world heritage site-ஆ மாத்திட்டாங்க, அதாவது உலத்தோட பாரம்பரிய இடமா அறிவிச்சிருக்காங்க. அது மட்டுமில்ல, அவரோட சாதனைகள பத்தியும், அவரை பத்தியும் இன்னும் நெறய விஷயங்கள நெறய கோவில் செவுருல செதுக்கி வச்சிருகாங்க.
அதனால தான், இந்த பெரியவர்கிட்ட இது தான் ராஜராஜ சோழனோட கல்லறைனு நீங்க சொல்றதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கானு கேட்டேன். அதுக்கு இவரு, இங்க ஒரு தூண் இருந்ததாவும், அத பக்கத்துல இருக்க பால்குளத்து அம்மன் கோவிலுக்கு தானம் பண்ணிட்டாங்கனும் சொன்னாரு. அந்த தூண்ல கல்வெட்டு இருக்குதாம். அந்த கல்வெட்டுல ராஜராஜ சோழன் இங்க தான் இறந்தாரு அப்படின்றத்துக்கான ஆதாரம் இருக்குனு இந்த பெரியவர் சொன்னாரு. நான் அந்த கோவிலுக்கு போனதுமே நேரா அந்த தூண்கிட்ட தான் போனேன்.
அந்த தூண்ல ‘ராஜராஜ’-ன்ற வார்த்தை இருக்குது, அப்டினா கண்டிப்பா அது ராஜராஜ சோழன் சம்பந்தபட்டதா தான் இருக்கனும். ஆனா கல்வெட்டுல என்ன இருக்குனு என்னால முழுசா புரிஞ்சுக்க முடியல. அதனால அத photo எடுத்து, அத அப்டியே scratchpad-ல copy பண்ணிட்டேன். அப்றம் நான் epigraphist-அ contact பண்ணேன். Epigraphist அப்படினா கல்வெட்டு நிபுணர்னு சொல்லுவாங்க. அவங்களால தான், இதுல என்ன எழுதி இருக்குனு exact-ஆ எனக்கு சொல்ல முடியும்.
என்னோட phenomenalplace.com website-ல இந்த கல்வெட்டையும் அதோட translation-யும் post பண்ணி இருக்கேன்,உங்களுக்கு interest இருந்த, நீங்க கூட அத பாக்கலாம் (old video content)
இந்த information-அ இன்னொரு expert-கிட்ட கேட்டு ஒண்ணுக்கு ரெண்டு தடவ நான் check பண்ணிட்டேன். இந்த கல்வெட்டு என்ன சொல்லுதுன்னா "ராஜராஜ சோழனோட மாளிகைய நாலு பேர் புதுப்பிச்சாங்கனு" சொல்லுது. அந்த நாலு பேர் யாரு, அப்பறம் அவங்க பெயர் என்னன்றத எல்லாம், இந்த தூண்ல இருக்க கல்வெட்ட பாத்து நாம தெரிஞ்சுக்கலாம். இந்த கல்வெட்டுல ராஜராஜ சோழனோட இறப்ப பத்தியோ இல்ல அவரோட கல்லறை பத்தியோ எந்த தகவலும் இல்ல. அப்போ அநேகமா, லிங்கம் இருந்த அந்த இடம், ராஜராஜ சோழனோட கல்லறை இல்ல.
ஏன்னா, அப்டி சொல்றதுக்கு எந்த ஒரு ஆதாரமும் அங்க இல்ல. இத பாக்குறப்ப, ராஜராஜ சோழனுக்கு உண்மையாவே என்னாச்சு? எப்படி இறந்து போனாரு? அப்றம் அவரோட இறுதி மரியாதை எங்க நடந்து இருக்கும்? இந்த மாறி எனக்கு நெறய கேள்வி வருது.
நீங்களே ஒரு நிமிஷம் நல்லா யோசிச்சு பாருங்க, ராஜராஜ சோழனோட சாதனைகள பத்தி நூத்துக்கணக்கான கல்வெட்டுகள் இருக்கு. அவரு எப்படி நெறய நாடுகள ஜெயிச்சாரு? எப்படி தஞ்சை பெரிய கோவில கட்டுனாரு? அவரு எப்ப பொறந்தாரு? இப்படி எல்லாமே கல்வெட்டா இருக்கு. ஆனா, அவர் எப்படி இறந்தாரு? எப்போ இறந்தாரு? அவர எங்க அடக்கம் பண்ணாங்க, இல்ல எரிச்சாங்க அப்படினு எந்த ஒரு தகவலும் இல்ல.
அதனால திரும்பவும் நான் தஞ்சாவூருக்கு போய், அவரோட இறப்ப பத்தி தெரிஞ்சுக்க முடிவு பண்ணேன். சில archeologists-அ நான் contact பண்ணேன். அவங்க என்ன சொன்னாங்கனா, ஒரு ராஜா எப்படி இறந்தாருனு எந்த record-ம் இல்லனா, அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அந்த ராஜாவோட மரணம் இயற்கையா இல்லாம இருந்திருக்கணும். ஒருவேள ராஜா தற்கொலை பண்ணிகிட்டாலோ, இல்ல கொலை செய்யபட்டு இருந்தாலோ, பழங்கால தமிழர்கள் அத record பண்ணிருக்க மாட்டாங்க.
யாருக்காது ராஜராஜ சோழன் எப்டி இறந்தார்னு தெரியுமான்னு கேக்கறதுக்காக நான் தஞ்சாவூருல இருக்க உள்ளூர் ஆளுங்க-கிட்ட பேசி பாத்தேன். எல்லா ஜனங்களும் கிட்டதட்ட சொல்லி வச்ச மாறி ஒரே கதைய தான் சொன்னாங்க. அது என்னனா இலங்கைய சேந்த ஒரு பொண்ணு ராஜராஜ சோழன கொலை பண்ணிட்டதா சொல்றாங்க. இத கேக்கறப்பவே வித்தியாசமா தான் இருக்கு.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Информация по комментариям в разработке