ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
02:13 - ரத்தக் கல்
06:23 - பாறை ஓவியத்தில் UFO
11:14 - வினோதமான குறியீடுகள்
17:07 - நாகர்களை பற்றிய ஆதாரம்
20:12 - ஏலியன்களை நம்பாத ஆராய்ச்சியாளர்கள்
22:04 - ஏலியன்களை பற்றிய குறிப்புகள்
23:42 - முடிவுரை
Hey guys, இதுக்கு முந்தன episode-ல, இந்த காட்டுல வாழுற பழங்குடி மக்கள் என்கிட்ட, ஒருவேள என்னால இந்த நூறு(100) மைல் சுத்தளவுல, ஒரு பெரிய பிளவுபட்ட பாறைய அதாவது spilt rocks-அ கண்டுபிடிக்க முடிஞ்சுதுனா, என்னால இந்த நாகர்கள் இல்ல வாலியர்கள் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க முடியும்-னு சொன்னாங்க. அவங்க அவங்களோட முன்னோர்கள்,அப்பறம் மூத்த தலைமுறைகிட்ட இருந்து, இந்த split rocks-அ பத்தி கேள்விப்பட்டிருக்காங்க. ஆனா அது உண்மையிலேயே எங்க இருக்குதுனு அவங்களுக்கு தெரியல. நான் google-ல தேடுனப்போ, உலகத்துல இருக்குற நிறைய பெரிய பெரிய split rocks-அ கண்டுபிடிக்க முடிஞ்சுது. ஆனா இந்த javvadhu மலையிலிருந்து நூறு(100) மைல் சுத்தளவுல, என்னால online-ல அப்படி ஒரு பாறையை கண்டுபிடிக்க முடியல. அதனால நானே இந்த நூறு(100) மைல் சுத்தளவ ஆராயலாம்-னு முடிவு பண்ணி, தேட ஆரம்பிச்சேன்.
இந்த தேடல் என்ன ரொம்ப தூரம் கூட்டிட்டு போகுது, நான் இப்போ உலத்துல இருக்குற சில ரொம்பவே ரிமோட் areasல சுத்திக்கிட்டு இருக்கேன் . இந்த இடத்துல ஒன்னுமே இல்ல, ஒரு மரம் ,ஒரு கட்டிடம் இவ்ளோ ஏன் ஒரு மனுஷ நடமாட்டம் கூட இல்ல. இங்க எங்கயாவது அந்த பெரிய split rock-அ கண்டுபிடிக்க முடியுமா? பக்கத்துல எந்த ஒரு பாறை இருக்குற மாறியும் எனக்கு தெரியல. நான் பல நாளா தேடிட்டு இருக்கேன், அப்போ தான் இந்த சுவாரஸ்யமான விஷயத்த பாத்து ஸ்தம்பிச்சு போனேன். பழங்குடி மக்கள் ,குள்ளர்கள வாலியர்கள்-னு சொன்னாங்கலே ஞயாபகம் இருக்கா?
வாலியர்கள்-ங்கற பேருல Kilvaalai அப்பறம் Melvaalai னு ரெண்டு கிராமம் இங்க இருக்குது, அதுமட்டுமில்ல, இங்க இருக்க மக்கள் வாலியர்களை கடவுள்-னு சொல்றாங்க. வாலியர்கள், அவங்களுக்கும் மனுஷங்களுக்கும் உள்ள தொடர்ப, இங்க இருந்து தான் தொடங்குனாங்கனும், அவங்க தான் இந்த ரெண்டு கிராமங்களையும் உருவாக்குனாங்கனும் சொல்றாங்க.
இது Kilvaalai-ங்கற கிராமம். இங்க எங்கேயோ தான் அந்த split rock இருக்கிறதா இந்த ஊர் மக்கள் சொல்றாங்க. அவங்க இந்த spilt rock-அ தமிழ்-ல இரத்தக்கல்-னு சொல்றாங்க. அப்படினா blood stone-னு அர்த்தம். அதுக்கான ஒரு விசித்திரமான கதையையும் என்கிட்ட சொன்னாங்க. அத கொஞ்ச நேரத்துல உங்களுக்கு சொல்றேன். அப்போ தான் திடீர்னு, தூரத்துல ,ஒரு பெரிய பாறை ஒன்னு, ஏதோ தெய்வீக சக்தி மூலமா, பாதியா ரெண்டு துண்டா வெட்டுன மாறி பிரிஞ்சிருக்கிறத நான் பார்த்தேன். பழங்குடி மக்கள் நம்மகிட்ட சொன்ன பாறை இதுதான்-ங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. இந்த பாறையோட அடில metal fence-அ வெச்சு இருக்குறதயும் நம்மளால பாக்க முடியுது. இது ஒரு நல்ல அறிகுறி தான். ஏன்னா கண்டிப்பா முக்கியமா ஏதோ ஒன்னு அங்க இருக்கனும், அதனாலதான் அவங்க அத சுத்தி ஒரு பெரிய வேலிய போட்டிருக்காங்க. Geologists, இயற்கையாவே இந்த பாறைங்க split ஆகி இருக்குனு சொல்றாங்க. ஆனா இது உண்மையிலேயே இயற்கையா நடந்ததா? இல்ல இது மனுஷங்க பண்றது கஷ்டம்-ங்கறதால இது இயற்கையா நடந்திருக்கும்னு நம்மள நாமே சமாதானப்படுத்திட்டு/ஏமாத்திட்டு இருக்கோமா?
இல்ல ஒருவேள வாலியர்கள் இல்ல நாகர்கள் ஏதோ ஒரு வகையான advanced technology use பண்ணி, இந்த பாறைய ரெண்டா split பண்ணியிருப்பாங்களா? இத நம்ம மேல இருந்து பாக்கும்போது, கச்சிதமா வெட்டுன மாறி தெரியுது, அதாவது ரொட்டிய எப்படி easy-ஆ ரெண்டு துண்டா வெட்டுவமோ, அந்த மாறி யாரோ இந்த பாறைங்கள வெட்டுன மாறி இருக்கு. இந்த வெட்ட பாக்க ரொம்ப smooth-ஆ இருக்கு, இந்த split இயற்கையா நடந்திருக்க வாய்ப்பே இல்ல. உண்மையிலேயே இந்த பெரிய split rock-க்கு நடுவுல நடக்குறது ரொம்ப unique-ஆனா experience-ஆ இருக்கு, என்னால அத வார்த்தையால சொல்ல முடியல. தரையில இருந்து பாக்குறப்போ இந்த பாறை நெஜமாவே ரொம்ப பெருசா இருக்கு, இத ஒரு தங்குற இடமா இல்ல, ஓய்வெடுக்குற இடமா, இல்ல தூங்குற இடமா கூட use பண்ணலாம். நான் இப்போ ரெண்டு ரொட்டி தூண்டுக்கு நடுவுல மாட்டுன எறும்பு மாறி இருக்கேன். இது மத்தவங்க கிட்ட இருந்து பாதுக்கப்பா மறஞ்சுக்க, இல்லனா ரகசிய விஷயங்கள செயுற இடமா இருக்குமா? இந்த மொத்த பாறையும் சுமார் 50 அடி உயரமும் அப்பறம் 60 அடி அகலமும் இருக்கும். அப்பறம் அந்த ரெண்டு துண்டும் பாக்க ஏதோ ஒரு பெரிய பறவையோட இறக்கை மாதிரியும் இருக்கு.
இந்த கிராமத்துல வாழுறவங்க இத பத்தி ஒரு விசித்திரமான கதைய சொல்றாங்க. அவங்க இத இரத்த கல்னு சொல்றாங்க, ஏன்னா அவங்க இந்த பாறை மேல ஒரு இரகசிய வழி இருக்குனும், அது ஒரு மூடியால மூடி இருக்குறதாவும், அப்பப்போ அது வழியா இரத்தம் கசியிறதாவும் சொல்றாங்க. இந்த பாறைய நல்லா உத்து கவனிச்சா, அதுல சிவப்பு கலர்ல தடயம் இருக்குறத நம்மளால பாக்க முடியும். அத பாக்க கிட்டத்தட்ட engine oil மாதிரி இருக்கு. பொதுவா பாறைங்க தண்ணிய உறிஞ்சி வச்சிக்கும். அப்பரோம் சில நேரத்துல மத்த particles-ஓட தண்ணியயும் சேர்த்து வெளிய விடும், இத தான் அநேகமா உள்ளூர் ஜனங்க இரத்தம்-னு நினைச்சுட்டாங்க. அதனால தான் இத இரத்த கல்-னு சொல்றாங்களோ என்னமோ. ஆனா ஆச்சரியம் என்னன்னா, மேல உண்மையிலேயே ஏதோ ஒன்னு மூடி போட்டு மூடுன மாதிரியே இருக்கு.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Информация по комментариям в разработке