சிகாகோ மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சுவாமி விவேகானந்தர் சந்தித்த இன்னல்கள்

Описание к видео சிகாகோ மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சுவாமி விவேகானந்தர் சந்தித்த இன்னல்கள்

சிகாகோவிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வாரம் சுவாமிஜி துரித கதியில் இயங்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 27 ஞாயிறன்று அவர் அன்னிஸ்க்வாமிலுள்ள ஒரு சர்ச்சில் சொற்பொழிவு ஆற்றினார். இந்தியர்களின் உடனடித்தேவை தொழிற்கல்வியே தவிர மதம் அல்ல” என்பதை அதில் வற்புறுத்தினார். வேகமும் செயல் துடிப்பும் நிறைந்ததாக இருந்தது அந்தச்சொற்பொழிவு. அதைக்கேட்டவர்களும் அந்த வேகத்தில் கட்டுண்டு, அத்தகைய கல்வியை உடனடியாக அமல்படுத்துவதற்கான கல்லூரியை இந்தியாவில் உருவாக்க பணம் திரட்டத் தொடங்கி விட்டார்களாம்! சுவாமிஜியைப் பற்றியும் அன்னிஸ்க்வாமில் அவரது நாட்களைப் பற்றியும் மிசஸ்ரைட் ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்துள்ளார்.
அவர் பொதுவாக நீண்ட காவி அங்கி அணிந்திருந்தார். முழங்காலுக்குக் கீழே அது நீண்டிருந்தது. பாதிரிகள் அணிவது போன்றதாக இருந்தது. நீண்ட , தடித்த காவித் துணி ஒன்றினால் அங்கியை இடுப்பில் இறுக்கிக் கட்டியிருந்தார். கால்களைச் சற்று இழுத்து நடப்பது போல் இருந்தாலும் அவரது நடையில் ஒரு தனி கம்பீரம் இருந்தது. நிமிர்ந்த தலையும் நேரான கழுத்தும் நெடிய பார்வையும் அவருக்கு ஓர் அதிகாரத்தோரணையைக் கொத்ததுடன், கடந்து செல்கின்ற யாரையும் ஒரு கணம் நின்று அவரைப் பார்க்கச் செய்தன. அவர் மெதுவாகவே நடந்தார். அவரிடம் விரைவோ அவசரமோ காணப்படவில்லை. அகன்று நீண்ட அவரது பெரிய கரு விழிகள் சிலவேளைகளில் கனல் கக்குவதும் உண்டு.

அமைதியாக அமர்ந்திருக்கின்ற அவர் சில வேளைகளில் தலையை உயர்த்தி, பார்வையைக்கூரைப் பக்கமாகத் திருப்பி, மென்மையாக ”சிவ, சிவ“ என்று கூறுகிறார். அவரது உணர்ச்சி எரிமலைக் குழம்பு போல் பரந்து அங்கிருக்கின்ற அனைவரையும் பற்றிக் கொள்வது போல் உள்ளது.
ஒரு முறை அவரிடம் ஒருவர், ”கிறிஸ்தவ மதம் தான் எல்லோரையும் ரட்சிக்கும்” என்று கூறியபோது சுவாமிஜி தமது பெரிய விழிகளைச்சுழற்றி அவரை நோக்கி, அப்படியானால் அது ஏன் எத்தியோப்பியர்களையும் அபிசீனியர்களையும் ரட்சிக்கவில்லை? ” என்று கேட்டார். அது மட்டுமல்ல, அதே வேகத்துடன் , அப்படி ரட்சிப்பதாகக் கூறுகின்ற மேலை நாடுகளின் போக்கை வன்மையாகக் கண்டித்தார். அந்த நாடுகளில் நடைபெறும் குற்றங்கள், பெண்களின் நிலைமை, சமுதாயத்தில் நிலவும் ஒழுக்கக் கேடுகள், மதுவின் ஆதிக்கம், திருட்டுக்கொடுமைகள், அரசியல் கயமை, கொலைகள் என்று பட்டியல் இட்டார். அவரது பேச்சில் அனைவரும் மயங்கினர். பெண்களின் கண்கள் மின்னின. கன்னங்கள் உணர்ச்சி வேகத்தில் சிவந்தன. குழந்தைகள் கூட அவர் தங்களிடம் கூறியதை நினைவில் வைத்து அதையே பேசினர். ஓவியர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர், அவரது ஓவியத்தை வரைய முற்பட்டனர்.

இந்த உலகில் உண்மை என்ற ஏதாவது உண்டானால் அது ஆன்மீக வாழ்க்கை மட்டுமே என்று வாழ்வதற்கு அவர் பயிற்சி பெற்றது போல் தோன்றியது. கடவுளிடம் அன்பு, மனிதனிடம் அன்பு- இவையே உண்மை என்று அவர் நம்பினார்.
இவ்வாறு நீள்கிறது மிசஸ் ரைட்டின் நினைவுக்குறிப்பு. பணத்தில் சுவாமிஜி சிறிதும் பற்றற்றிருந்ததை அவர் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். யாராவது சுவாமிஜிக்குப் பணம் அளிக்க முற்பட்டபோது, தமக்கு அவர்கள் ஏதோ தீங்கு செய்வது போல் விலகினார் அவர். ” ஓ! வேண்டுமட்டும் நான் துயரங்களை அனுபவித்துவிட்டேன். அவற்றில் மிகவும் என்னைச் சோதித்தது எது தெரியுமா? பணத்தைப் பாதுகாப்பது தான்” என்று குழந்தைபோல் கூறினார் அவர். பணம் என்ற ஒன்று இல்லாமல் எதுவுமே செய்ய இயலாது என்று இருந்த அந்த நிலையில் கூட அவர் பணத்தை ஒதுக்கியதை எங்களால் நம்பவே இயலவில்லை. பணத்தின் மீது ஒருவர் இவ்வளவு நாட்டமில்லாமல் இருக்க முடியுமா என்ற எண்ணம் அவர் சென்ற பிறகும் நீண்ட நாள் எங்களைச் சிந்தனையில் ஆழ்த்தியிருந்தது.
பல இடங்களிலிருந்தும் சுவாமிஜிக்கு அழைப்புகள் வந்தன. சுவாமிஜியும் சேலம், மாசசூசெட்ஸ் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று சொற்பொழிவுகள் செய்தார். மாசசூசெட்ஸில் அவர் மிசஸ் உட்ஸ் என்பவரின் வீட்டில் ஒரு வாரம் தங்கினார். இந்த நாட்களில் இரண்டு சர்ச்சுகளில் அவர் இரண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். மிசஸ் உட்ஸின் தோட்டத்தில் குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவும் ஒரு நாள் பேசினார். அங்கிருந்து புறப்படும்போது தமது கைத்தடி, போர்வை, பெட்டி ஆகியவற்றை தமது நினைவாக அங்கே விட்டுச்சென்றார் அவர்.
சேலத்தில் அவர் பேசிய முதல் சொற்பொழிவு, அங்கே இருந்தவர்களுக்கு இந்தியாவைப்பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. இந்தியாவின் உடனடித்தேவை மதம் அல்ல, தொழிற்கல்வியே” என்பதை அவர் எடுத்துக் கூறிய போது இரண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் அதனை ஆவேசமாக எதிர்த்தனர்.பல கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டனர். சுவாமிஜி சற்றும் நிலைகுலையாமல் நிதானமாகப் பதில் கூறினார். இந்த நிகழ்ச்சி சிறியதாக இருந்தாலும் வரப்போகின்ற நாட்களின் தன்மையை சுவாமிஜிக்கு ஒரு முன்னறிவிப்பு செய்தது என்பது நிச்சயம்.

செப்டம்பர் 4-ஆம் நாள் சாரட்டோகா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் பேசினார் சுவாமிஜி. தலைப்பு ” இந்தியாவில் முகமதியர் ஆட்சி” இந்தியாவில் வெள்ளியின் புழக்கம்” என்பவையாக இருந்தன.
இப்படி சிகாகோவிற்குப் போவதற்கு முன்னால் மூன்று வாரங்களில் சுவாமிஜி 11 சொற்பொழிவுகளும் உரையாடல்களும் நிகழ்த்தினார். இதற்குள் அமெரிக்காவின் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்தார். ரமாபாய் வட்டத்தில் பேசினார். நட்புடன் பழகிய பாதிரிகள், வெறுப்புடன் பழகிய பாதிரிகள், என்று இரண்டு பிரிவினரையும் சந்தித்தார். சிறைக்கைதிகளிடம் பேசினார்...... பெண்கள் கிளப்பில் பேசினார். குழந்தைகளிடம் பேசினார். நாட்டின் அறிவு ஜீவிகள் சிலரைக் கவர்ந்தார். இவை அனைத்தும் அவரது சிகாகோ விஜயத்திற்கு ஒரு முன்னுரையாக அமைந்தன.

Комментарии

Информация по комментариям в разработке