சுவாமி விவேகானந்தர் உலகப்புகழ்பெற காரணமாக அமைந்த நிகழ்வு இதுதான்//சிகாகோ சர்வமத மகாசபை

Описание к видео சுவாமி விவேகானந்தர் உலகப்புகழ்பெற காரணமாக அமைந்த நிகழ்வு இதுதான்//சிகாகோ சர்வமத மகாசபை

அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அங்கே ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. திடீரென்று பியானோ இசைக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஹாலில் அமர்ந்திருந்த சுமார் 4,000 பேரும் எழுந்து ”கடவுளைத்துதியுங்கள்”........ என்ற கிறிஸ்தவத் துதிப்பாடலைப் பாடினர். பின்னர் ”பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே”.......... என்ற பிரார்த்தனையை அனைவரும் கூறினர். அதன்பிறகு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதல் நாளில் வரவேற்புரைகளும் அதற்குப் பிரதிநிதிகள் அளித்த பதில்களும் இடம் பெற்றன. எல்லோரும் சொற்பொழிவுகளைத் தயார் செய்து வந்திருந்தனர். பொதுவாக அனைவரின் உரையும் நல்ல வரவேற்பு பெற்றது. சில உரைகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்கப் பட்டன.
பிரதிநிதிகளில் முதலில் பேசியவர் கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப்பான ஜாந்தே. தமது உரையின் முடிவில் கைகளைத் தூக்கி, உயரத் தூக்கிய கைகளும் இதயத்தில் பொங்கும் அன்புமாக இந்த மாபெரும் நாட்டை ஆசீர்வதிக்கிறேன், மகிழ்ச்சியான, பேறு பெற்ற இந்த அமெரிக்க மக்களை வாழ்த்துகிறேன், என்று அவர் கூறியபோது பார்வையாளர்கள் நீண்ட நேரம் கைதட்டி ஆரவாரித்தனர்.....

நிகழ்ச்சிகளை நடத்துபவர் பலமுறை அழைத்தும் சுவாமிஜி எழுந்து போகவில்லை. இப்போது இல்லை, பிறகு, என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார். நண்பகல் கடந்து மாலையையும் நெருங்கியது. ஒரு வேளை இவர் பேசவே மாட்டாரோ என்று மற்றவர்களுக்குச் சந்தேகமே வந்துவிட்டது. இனி தாமதிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது சுவாமிஜி எழுந்தார். ஒரு கணம் கலைமகளை மனத்தில் நினைத்தார். அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே ” என்று அழைத்தார்! அவ்வளவு தான் அவரால் அடுத்த வார்த்தையைப்பேச முடியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஏதோவோர் ஆர்வப்பேரலை ஆட்கொண்டது போல் தோன்றியது. தூற்றுக்கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் எழுந்து விட்டனர். காதுகளையே பிளப்பது போல் அங்கே கரவொலி எழுந்தது. என்று எழுதுகிறார் அங்கிருந்த ஒருவர். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் சுவாமிஜி பேச முயற்சி செய்தார். ஆனால் அந்தக் கைதட்டல் ஒலியில் அவரால் பேச முடியவில்லை. இப்படியோர் வரவேற்பா என்று அவர் சற்று ஆடித்தான் போனார்! எழுதுகிறார் அவர்,

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச்சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன், ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் உஞ்சி நின்றவர்களை மனமாரத்தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க ஜொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக்காத்து வருகின்ற மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று இந்தியாவின் பெருமையை எடுத்துக்கூறினார்.

இசை , விழா, உரைகள் என்று விமரிசையாகப் பேரவை தொடங்கியது. பிறகு பிரதிநிதிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப் பட்டனர். அவர்கள் வந்து பேசினர். என் இதயம் படபடத்தது, நாக்கு அனேகமாக வறண்டே போயிற்று, நடுக்கத்தின் காரணமாக , காலையில் பேச எனக்குத் தைரியம் வரவில்லை. மஜும்தார் அழகாகப்பேசினார்சக்கரவர்த்தியின் பேச்சு அதைவிட நன்றாக இருந்தது. அவர்களை எல்லோரும் நன்றாகக் கைதட்டிப் பாராட்டினர். முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளுடன்அவர்கள் ஆயத்தமாக வந்திருந்தனர். நான் ஒரு முட்டாள், அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால் கலைமகளை வணங்கி விட்டு மேடையில் வந்தேன். டாக்டர் பரோஸ் என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் சுருக்கமாகப்பேசினேன். ஆரம்பத்தில், அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! என்று அழைத்தேன். அவ்வளவு தான், இரண்டு நிமிட நேரம் காது செவிடுபடும்படியான கரகோஷம், அதன் பிறகு தான் உரையைத்தொடர முடிந்தது.
சுவாமிஜி என்ன பேசினார்?

வரலாற்று ஏட்டின் பக்கங்களாக ஆகிவிட்ட அந்தச் சொற்பொழிவின் சில பகுதிகள் இதோ.......
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்குப் பதிலளிக்க இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை, உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப்பெரு மக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்” என்று தமது உரையை ஆரம்பித்தார் சுவாமிஜி.
பிற மதக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன், என்று இந்து மதத்தின் பெருமையை எடுத்துக் கூறினார்.


ஆயிரம் உள்ளங்களைக்கொள்ளை கொள்கின்ற அந்தத் தெய்வீக ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது என்ன ஆற்றல்?

Комментарии

Информация по комментариям в разработке