விவேகானந்தரை சிகாகோ சர்சமத மகாசபைக்கு அனுப்பிவைத்த தமிழர் யார்?

Описание к видео விவேகானந்தரை சிகாகோ சர்சமத மகாசபைக்கு அனுப்பிவைத்த தமிழர் யார்?

அடுத்த பிரச்சனை பணம்! நான் அமெரிக்கா செல்வது தேவியின திருவுளமானால் பணத்தையும் அவளே தருவாள் என்று கூறினார் சுவாமிஜி. சாதாரண மனிதர்களிடமிருந்து ம் ஏழைகளிடமிருந்தும் பணம் வசூலிக்கவேண்டும் என்பது சுவாமிஜியின் ஆவலாக இருந்தது. பெரிய மனிதர்கள். பணக்காரர்கள், ஆகியோரிடமிருந்து பணம் பெறவேண்டாம் என்று சுவாமிஜி கூறிவிட்டார். ராமநாதபுர மன்னர் மற்றும் ஓரிரு பணக்காரர்களிடம் பெற்ற அனுபவமே இதற்கு க் காரணமாக இருந்தது. சுவாமிஜி அமெரிக்கா செல்வதானால் முழுப்பொறுப்பையும் தாமே ஏற்றுக் கொள்வதாக ஒரு பணக்காரரும் வாக்களித்திருந்தார். பின்னர் தொடர்பு கொண்டபோது மிகவும் குறைவான தொகை மட்டுமே அளித்தார். இதை அளசிங்கர் சுவாமிஜியிடம் தெரிவித்தபோது சுவாமிஜி சற்று மனம் வருந்தவே செய்தார். இதனால் தான் இனி பணக்காரர்களிடம் போக வேண்டாம் என்று கூறிவிட்டார்.
மார்ச்- ஏப்ரலில் சென்னை அன்பர்கள் சுவாமிஜியின் மேலை நாட்டுப் பயணத்திற்காகப் பணம் வசூலிக்க ஆரம்பித்தனர். அளசிங்க பெருமாளின் தலைமையில் சிலர் ஒன்று சேர்ந்து , ஒரு குழுவாக அமைத்து செயல்பட்டனர். சுவாமிஜியின் சீடர்கள், அன்பர்கள், நண்பர்கள் என்று பலரையும் சந்தித்துப் பணம் கேட்க முடிவு செய்தனர். சுவாமிஜியின் மேலைப் பயணத்திற்கு இளைஞர்களே அதிகம் பணம் திரட்டினர். அதுவம் நடுத்தர மக்களிடையே தான் அதிகமாக அவர்கள் சென்றனர். தேவியின் திருவுளம் அதுவானால் நான் மேலைநாட்டிற்குச்செல்வேன். அதற்கான பணம் சாதாரண மக்களிடமிருந்து வரவேண்டும் ஏனெனில் நான் மேலை நாடுகளுக்குப்போவது சாதாரண மக்களுக்காக, ஏழைகளுக்காக” என்றல்லவா அவர் இளைஞர்களிடம் கூறியிருந்தார்.

அளசிங்கரும் மற்றவர்களும், இரவுபகலாகப் பாடு பட்டனர். வீடு வீடாகச்சென்றனர். சிலர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் பல அவமதிப்புகளுக்கும் ஏச்சுகளுக்கும் பிறகு கொடுத்தனர். அளசிங்கரும் நண்பர்களும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாபெரும் பணி ஒன்றில் தாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை மட்டும் மனத்தில் கொண்டு அவர்கள் பணி செய்தனர். சென்னையில் பணம் வசூலிக்கின்ற பொறுப்பை நண்பர்களிடம் விட்டுவிட்டு அளசிங்கர் பெங்களூர், ராமநாத புரம், ஐதராபாத் போன்ற இடங்களுக்குச்சென்று பணம் வசூலித்து வந்தார்.

சுவாமிஜியும் சிலரைச் சந்தித்து இது விஷயமாக முயற்சி செய்தார். நீதிபதி சர். சுப்பிரமணிய ஐயரை அவர் சென்று சந்தித்தது பற்றி ராமானுஜாச்சாரி எழுதிகிறார். ஒரு நாள் காலையில் சுவாமிஜி கையில் கைத்தடியுடன் கம்பீரமாக மயிலாப்பூர் லஸ் சர்ச்ரோடு வழியாக நிமிர்ந்த பார்வையுடன் சென்று கொண்டிருந்தார்.
அவருக்குப் பின்னால் சுமார் பதினைந்து இருபது இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். ஓர் ஊர்வலம்போல் அவர்கள் சென்றது நீதிபதியைச் சந்தித்து உதவி கோருவதற்காக சுவாமிஜியின் தோற்றமும் ஆளுமையும் ரோட்டில் நின்றிருந்த அனைவரையும் கவர்ந்தன. பலரும் அவருக்குப் பின்னால் நடக்கத்தொடங்கினர். நானும் தான். நீதிபதியின் வீட்டை அடையும்போது ஒரு பெரும் கூட்டமே சுவாமிஜியின் பின்னால் திரண்டிருந்தது. நான் சுவாமிஜியை முதலும் கடைசியுமாகக் கண்டது அந்த ஒரு முறை மட்டுமே.

ஏழைகளையும் பாமரர்களையும் புறக்கணத்ததால் தான் நமது நாடு வீழ்ச்சி கண்டது என்ற உண்மையை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் சுவாமிஜி. நாட்டு முன்னேற்றத்திற்காகச் செய்யப்படுகின்ற எந்தப் பணியும் அவர்களை முன்னேற்றுவதில் தான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அதைக் கருத்தில் கொண்டே பணிகளையும் திட்டமிட்டார். ஏழைகளின் முன்னேற்றத்திற்குப் பணம் திரட்டுவதற்காக வெளிநாடு செல்கிறேன். அதற்குரிய பணத்தை அவர்களிடமிருந்தே பெறுவேன்.என்று அவர்களிடம் பணம் வசூலிக்க விரும்பியவர் அவர். பணம் வசூலித்து முதலில் பெற்ற ரூ.200 –ஐ சுவாமிஜியிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக கடைத்தெருவிற்குச் சென்றார். குழந்தைகளுக்கு மிட்டாய்களும் விளையாட்டுப்பொருட்களும் வாங்கினார். அவற்றைக் கொண்டுபோய் அவர் வாழ்ந்த இடத்திற்கு அருகில் வாழ்ந்த குழந்தைகளுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார்.
குழந்தைகள் எப்போதுமே சுவாமிஜிக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்தனர். அவர்களுக்காக அவர் கதை சொல்வார். வேடிக்கை வினோதங்கள் காட்டுவார். பாலாஜி ராவின் வீட்டில் சிறுவயது மகனுக்காகச் சில மாயாஜாலங்களையும் காட்டினாராம்! கத்தியால் தமது கையை ஓங்கி வெட்டுவார் சுவாமிஜி. ஆனால் அதிலிருந்து ரத்தம் கசியக்கூட செய்யாதாம்! இதைப் பார்த்து குழந்தைகள் சிரித்து மகிழ்வது கண்டு அவரும் களிப்படைவார்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ந்தது. முதலில் மறுத்த ராமநாதபுரம் மன்னர், மற்ற மன்னர்களும் வேறு பலரும் நிதியுதவி செய்வதைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு தாமும் ரூ.500 கொடுத்தார். இவ்வாறு சென்னை அன்பர்கள் ரூ.4, 000 திரட்டினர்.
பெனின்சுலார் என்ற கப்பலில் மே-31, ஆம் நாள் சவாமிஜிக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. 179 பவுண்ட் (ரூ.2685) சுவாமிஜியின் கையில் பணமாகக் கொடுக்கப் பட்டது.
சுவாமிஜியும் மனத்தளவில் தாம் அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத்தொடங்கினார்.

Комментарии

Информация по комментариям в разработке