உருளைக்கிழங்கு ரெசிப்பீஸ் | Potato Recipes | Urulaikilangu Recipes In Tamil |

Описание к видео உருளைக்கிழங்கு ரெசிப்பீஸ் | Potato Recipes | Urulaikilangu Recipes In Tamil |

உருளைக்கிழங்கு ரெசிப்பீஸ் | Potato Recipes | Urulaikilangu Recipes In Tamil | ‪@HomeCookingTamil‬

#potatorecipeintamil #potatofryintamil #potatocurryrecipe #potatoricerecipe

Chapters:
Promo - 00:00
Potato Fingers - 00:24
Potato Rice - 04:55
Masala Fried Potatoes - 07:34
Potato Curry- 12:17

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

உருளைக்கிழங்கு பிங்கர்ஸ்
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 4
தண்ணீர்
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு
பூண்டு தூள் - 1/4 தேக்கரண்டி
வெங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகு சிதறலகள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
பிரட் தூள்
சோள மாவு - 2 தேக்கரண்டி
மைதா மாவு
எண்ணெய்

உருளைகிழங்கு சாதம்
தேவையான பொருட்கள்

நல்லலெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் -2
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உருளைகிழங்கு - 2
தேவையான அளவு உப்பு
கறிவேப்பிலை
அரிசி

மசாலா தூள் தயாரிக்க

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் -7
மல்லி விதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
புளி

செய்முறை
1. முதலில் மசாலா தூள் தயாரிக்க வேண்டும்
2. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட்டு அரைக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்
4. இந்த வதக்கியவற்றில் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பொன்னிற்றமாகவும் வரை வறுக்கவும் பின்னர் அரைத்துவைத்துள்ள மசாலா தூளை சேர்த்து கலக்கவும்
5. இந்தக்கலவையில் வேகவைத்த அரிசியை சேர்த்து கலக்கவும்
6. சுவையான உருளைகிழங்கு சாதம் தயார்
7. இந்த உருளைகிழங்கு சாதத்துடன் அப்பளம் அல்லது வத்தல் சேர்த்து பரிமாறவும்

மசாலா உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 5
தண்ணீர்
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
கறிவேப்பில்லை
மசாலா கலவை

மசாலா கலவை செய்ய

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர்

செய்முறை
1.உருளைக்கிழங்கின் தோல் சீவி, வட்டமாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. கடாயில் தண்ணீர் கொதிக்கவைத்து, வெட்டிய உருளைக்கிழங்கை போட்டு 15 நிமிடம் வேகவைக்கவும்.
3. பாத்திரத்தில், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை பழச்சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கடலை மாவு, அரிசி மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
4. வேகவைத்த கிழங்கு துண்டை, மசாலா கலவையில் முக்கி எடுத்து வைக்கவும்.
5. இதை 5 நிமிடம் வைக்கவும்.
6. அடுத்து பேன்'னில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள்

பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
முழு மிளகு - சிறிதளவு
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
தட்டிய இஞ்சி பூண்டு - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. பிரஷர் குக்கர்'ரில் சுத்தம் செய்த பேபி உருளைக்கிழங்கு, தண்ணீர், உப்பு போட்டு, மீதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. குக்கர்'ரின் பிரஷர் போனதும், கிழங்கை ஆறவிட்டு, தோல் உரித்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம். பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்.
4. பூண்டு மற்றும் இஞ்சி துண்டுகளை தட்டி சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு மசிந்ததும், இதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
7. இதில் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் கிளறவும்.
8. அடுத்து இதில் தண்ணீர் ஊற்றி, கிளறவும்.
9. கடாயை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
11. சுவையான உருளைக்கிழங்கு கறி தயார்.

Potatoes are a favorite for many of us. So that's why today, I have put together four potato recipes which you can try easily at home and enjoy. These are potato fingers, potato rice, masala fried potatoes and potato curry. All these are great for lunchboxes too. So try these recipes and let me know how they turned out for you.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке