Ulagamunda | Thiruvaaimozhi [6.10] | Divya Prabandham | Nammazhwar

Описание к видео Ulagamunda | Thiruvaaimozhi [6.10] | Divya Prabandham | Nammazhwar

Nammazhwar, one of the twelve Azhwars of Sri Vaishnava Sampradayam, born in 3059 BCE in Alwarthirunagari, near Tirunelveli district, has composed Thiruvaaimozhi (1,102 verses) being part of Nalayira Divya Prabandham in the praise of Lord Vishnu in Archa-avathara form (108 Divya Desams).

A small composition of Nammazhwar from Thiruvaaimozhi (6.10.1 to 6.10.11) in the praise of Lord Srinivasa of Tirumalai is presented in the musical form (viruttham).

The Acharya thaniyans are sung in the following ragas:
1. Nattai
2. Hamsadwani
3. Panthuvarali
4. Kanada

The lyrics of the pasurams are given below :

Ragam: Bilahari
6.10.1) உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி !நெடியாய் !அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே .

Ragam: Saveri
6.10.2) கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல்லசுரர் குலமெல்லாம் ,
சீறா எரியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே !
சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங்கடத்தானே !
ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

Ragam: Kamas
6.10.3) வண்ண மருள்கொள் அணிமேகவண்ணா !மாய அம்மானே !
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே !இமையோர் அதிபதியே !
தெண்ணல் அருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே !
அண்ணலே !உன்னடி சேர அடியர்காவா என்னாயே.

Ragam: Bhairavi
6.10.4) ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திரு ma மகள் கேள்வா !
தேவா !சுரர்கள் முனிகணங்ள் விரும்பும் திருவேங்கடத்தானே !
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே .

Ragam: Nattaikurunji
6.10.5) புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒருவில் வலவாவோ !
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ !
திணரார் மேகமெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே !
திணரார் சாரங்கத் துனபாதம் சேர்வதடியேன் எந்நாளே.

Ragam: Hindolam
6.10.6) எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற் கென்று
எந்நாளும் நின்றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே !
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கன் அடியேன் மேவுவதே ?

Ragam: Desh
6.10.7) அடியேன் மேவி அமர்கின்ற அமுதே !இமையோர் அதிபதியே !
கொடியா அடுபுள்ளுடையனே !கோலக் கனிவாய் பெருமானே !
செடியார் வினைகள் தீர் மருந்தே !திருவேங்கடத்தெம் பெருமானே !
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே .

Ragam: Dhanyasi
6.10.8) நோலா தாற்றேன் உனபாதம் காண என்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங்கடத்தானே !
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராதாய் .

Ragam: Dwijavanti
6.10.9) வந்தாய் போலe வாராதாய் !வாராதாய் போல் வருவானே !
செந்தாமரைக் கன் செங்கனி வாய் நால்தோல் அமுதே எனதுயிரே !
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங்கடத்தானே !
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே.

Ragam: Hamsanandi
6.10.10) அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா !
நிகரில் புகழாய் !உலகமூன்றுடையாய் !என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

Ragam: Bridavanasaranga
6.10.11) அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக்கேழில்லாப் பெருமானை பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக் கிவைபத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே .

Like, share and subscribe to our channel. Thanks in advance :')

Комментарии

Информация по комментариям в разработке