சுவையான பிரேக் பாஸ்ட் ரெசிப்பீஸ் | Breakfast Recipes In Tamil | @HomeCookingTamil
#breakfastrecipesintamil #mysoremasaladosa #milletupma #ravaidlirecipe
Chapters:
Promo - 00:00
Mysore Masala Dosa - 00:24
Wheat Rava Idli - 05:42
Liquid Masala Paratha - 09:15
Millet Upma - 12:46
மைசூர் மசாலா தோசை
தேவையான பொருட்கள்
மிளகாய் பூண்டு சட்னி செய்ய
ப்யாத்கே மிளகாய் - 25
பூண்டு - 4 பற்கள்
முழு தனியா - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பில்லை
உப்பு - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு மசாலா செய்ய
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - பெரிய துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 5 வேகவைத்தது
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
மைசூர் மசாலா தோசை செய்ய
தோசை மாவு
மிளகாய் பூண்டு சட்னி
உருளைக்கிழங்கு மசாலா
எண்ணெய்
பெரிய வெங்காயம் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
மிளகாய் பூண்டு சட்னி செய்ய
1. மிக்ஸியில் ப்யாத்கே மிளகாய், பூண்டு, முழு தனியா, சீரகம்,
கறிவேப்பில்லை, உப்பு சேர்த்து அரைக்கவும்.
2. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
உருளைக்கிழங்கு மசாலா செய்ய
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்க்கவும்.
2. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் பெருங்காயம் தூள், கறிவேப்பில்லை சேர்க்கவும்.
3. இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
6. இதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கிழங்கை மசிக்கவும்.
7. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி கிண்டவும்.
மைசூர் மசாலா தோசை செய்ய
1. தவாவை சூடு செய்து, தோசை மாவு ஊற்றவும்.
2. இதை கரண்டியால் தட்டை ஆக்கவும். இதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
3. இதில் மிளகாய் பூண்டு சட்னி தடவி, எண்ணெய் ஊற்றவும்.
4. தோசையின் ஒரு பக்கத்தில், உருளைக்கிழங்கு மசாலா வைக்கவும்.
5. மசாலா மீது, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, தோசையை மடிக்கவும்.
6. மைசூர் மசாலா தோசை தயார்.
கோதுமை ரவா இட்லி செய்ய
தேவையான பொருட்கள்
கோதுமை ரவா - 1 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து 5 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
2. ரவை ஆறிய உடன் உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. ஒரு பானில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
4. கடுகு பொறிய ஆரம்பித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு தாளித்த பொருட்களை ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
6. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, வறுத்த முந்திரியை வைத்து, ரவை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
7. சுவையான கோதுமை ரவா இட்லி தயார்.
லிக்யுட் மசாலா பராத்தா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது
நெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
திணை உப்புமா
தேவையான பொருட்கள்
திணை - 1/2 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/ 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை
செய்முறை
1. திணையை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
2. கடாயில் நெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் போடவும்.
3. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
5. 5 நிமிடம் கழித்து, இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. இதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
7. இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 5 நிமிடம் காய்கறிகளை வேகவைக்கவும்.
8. அடுத்து இதில் தண்ணீரை வடித்த திணையை சேர்க்கவும்.
9. கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
10. திணை உப்புமா தயார்.
Breakfast is an important part of our food wherein we break our fasting after a long gap from the previous day's food intake. South Indian tiffins are the best recipes for breakfast because they are wholesome with carbs, proteins, fibre and other essential nutrients. So in this video we have put together 4 tasty recipes you can enjoy everyday. These recipes are very easy to make and everybody is surely going to love the same. Do try these recipes and enjoy with any chutney of your choice or with sambar.
Информация по комментариям в разработке