ஜாடியில் அறிவியலை அடைத்த பழங்கால தமிழர்கள்! இன்றைய அறிவியலை மிஞ்சும் அந்த காலத்து கண்டுபிடிப்பு!

Описание к видео ஜாடியில் அறிவியலை அடைத்த பழங்கால தமிழர்கள்! இன்றைய அறிவியலை மிஞ்சும் அந்த காலத்து கண்டுபிடிப்பு!

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
00:33 - Magic Jar
02:47 - Magic Jar- ன் மாடல்
05:00 - இதெல்லாம் தமிழனுக்கு தான் சாத்தியம்!
06:14 - நூற்றுக்கணக்கான Magic பொருட்கள்
06:56 - அட்சயப் பாத்திரம்
08:42 - அட்சயப் பாத்திரத்தின் மாடல்
10:12 - முடிவுரை

Hey guys, இன்னிக்கு நாம ரொம்ப வித்யாசமான பொருள் ஒன்னு பாக்க போறோம். magical தண்மைகளோட இருக்கற

ஒரு jar அது. இந்த anti-gravity jar, கொறஞ்சது முன்னூறு வருஷமாவது பழசா இருக்கும். இது இப்ப இந்தியால Kancheepuram Museumல இருக்கு.

இது பாக்கறதுக்கு மெழுகுல பண்ண மாதிரி இருக்கு, ஆனா இத மொத்தமா களிமண்ல பண்ணி இருக்காங்க. எந்த பக்கமும் மூடி இல்ல. So, இத எப்படி உபயோகிக்கறது. மேல பாத்தா ஓட்டைகள் இருக்கு. ஆனா அந்த ஓட்டைகள் வழியா தண்ணி ஊத்த முடியாது. இதுல தண்ணி ஊத்தறதுக்கு ஒரே வழி, தல கீழ திருப்பி புடிச்சிக்கணும் and இங்க கீழ அஞ்சு ஓட்டைகள் இருக்கு பாருங்க. இந்த வழியா தான் தண்ணி ஊத்தணும்.

இப்ப இதுல தண்ணி மறையுது பாருங்க. ஆனா jarஅ நேரா திருப்பி புடிச்சா அந்த தண்ணி கீழ கொட்டவே இல்ல. இதநாலத்தான் இது Anti-Gravity jar.
இப்ப jarஅ தல கீழ புடிச்சா கூட, தண்ணி மேல் ஓட்டைகள் வழியாகூட வெளியில வரல. எப்படி இந்த தண்ணி magic மாரி காணாம போச்சி

இந்த தண்ணி இப்ப எங்க? இப்ப இந்த spout தான் தண்ணிய எடுக்கறதுக்கு ஒரே வழி. நம்ப கீழ சேர்த்த எல்லா தண்ணியையும் இந்த spout வழியா மட்டும் தான் நம்ப மறுபடியும் collect பண்ணிக்க முடியும்.

இந்த jar முன்னூறு வருஷம் தான் பழசு ஆனா 2000 வருஷங்கள் முன்னாடி கூட இந்த மாதிரி jars இந்தியால உபயோகிச்சிக்கிட்டு இருந்தாங்க. இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாடி என்ன மாதிரி technologyய உபயோகிச்சு இந்த மாதிரி magical effects எல்லாம் உருவாக்கி இருப்பாங்க.

நியாபகம் வச்சிகங்க, இது களிமண்ல செஞ்ச jar, அதனால இதுக்குள்ள corkஓ, rubber stopperஓ எதுவும் போட முடியாது. ஏன்னா உலை அதாவது furnaceல வச்சி, இந்த jarஅ bake பண்ணும் போது, இந்த rubberஓ corkஓ ஏறிஞ்சி கரியா மாரி போய் இருக்கும். அப்பறம், இத ஆட்னா கூட, உள்ள எதுவும் அசையல, இதுக்குள்ள எந்த moving partsம் இல்ல. magic மாதிரியான விஷயங்களும், நம்ப இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் அந்த காலத்துல இருந்தது அன்றத இந்த jar நமக்கு காட்டுது. அதனால தான் இது law of Gravityய கூட மீறி இருக்குன்னு நினைக்கறேன் .

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யுது . நான் கூட உங்களுக்கு USல ஒரு supernatural (இயற்கைக்கு அப்பாற்பட்ட) road காட்னனே. அது கூட இதே மாதிரி gravity மீறித்தான் இருந்தது. அந்த anti gravity roadல ஒரு ball போட்டா, அது உருண்டு மல மேல ஏறித்தான் போய்கிட்டு இருந்தது. இதுவும் law of gravityய மீறின விஷயம் தான்.
இப்ப இந்த magic jarஅ எப்படி செஞ்சாங்க அன்றத போய் பாக்கலாம். நான் இங்க அதே மாரி model ஒன்னு பண்ணி இருக்கேன். ஆனா ஒரு transparentஆன (உள்ள என்ன இருக்குன்னு பாக்க முடியுது) பாத்திரத்துல பண்ணி இருக்கேன். So that, இது எப்படி

வேல பண்ணுதுன்னு பாக்கலாம். Jarக்கு அடியில ஒரு funnel கவுத்து வச்சி இருக்கேன் and அந்த funnel ஓட nozzleல்ல ஒரு 90 degree வளைவையும் வச்சி இருக்கேன். So, இப்ப நான் jarஅ கவுத்து, இந்த ஒட்டைகள் வழியா தண்ணி ஊத்துனா, அந்த தண்ணி funnel வழியா உள்ள போகும், ஆனா funnelல நிக்காது. Jarகுள்ள release ஆயிடும்.

மறுபடியும் jarஅ நேரா நிறுத்தும் போது, தண்ணி funnelகுள்ள போகாது. தண்ணி funnelஅ சுத்தி தான் இருக்கும் and spout வழியா மட்டும் தான் வெளியில வரும். Exactஆ இப்படி தான் அந்த முன்னூறு வருஷ jar கூட வேல பாக்குது. அப்படித்தானா?? இல்ல வசதியா நம்ப ஒரு விஷயத்த மறந்துட்டடோம் பாருங்க . அந்த anti-gravity Jarல மேலயும் ஓட்டைகள் இருந்துது இல்ல ??

So இந்த பாத்திரத்துல மேல ஓட்ட போட்டா, அந்த model முழுசா complete ஆயிடுமா?? இல்ல actualஆ அது எல்லாத்தையும் கெடுத்துடும், ஏன்னா கீழ இருக்கற ஓட்டைகள் வழியா தண்ணி ஊத்துனா அது மேல இருக்கற holes வழியா வெளிய வந்துடும். நியாபகம் இருக்கா, அந்த original jarல கீழ இருந்து தண்ணி ஊதும் போது மேல எதுவும் leak ஆகல.

So, இப்ப இந்த modelஅ முடிக்கறதுக்கு நான் அதே மாரி 90 degree வளைவோட இன்னொரு funnelஅ மேல சேர்க்க போறேன் போறேன். So, இப்ப நான் கீழ இருந்து தண்ணி ஊதும் போது, அது மேல இருக்கற ஓட்டைகள் வழியா வெளிய போகாது and அந்த தண்ணி main chamberலயே இருக்கும், அப்பறம் spout வழியா மட்டும் தான் வெளிய வரும். இது எவ்வளவு சிக்கலான ஆன designஆ இருக்குன்னு பாருங்க .

And magic jar மேல இருக்கற இந்த ஓட்டைகள எதுக்கு போட்டாங்க? சும்மா நம்பள கொழப்பறதுக்கா ? இல்ல, பாருங்க, இந்த jarல மூடியே இல்ல. இந்த ஓட்டைகள் இல்லன்னா, jarகுள்ள air circulationக்கு வழி இல்ல. யாராவது இத, உள்ள தண்ணியோட அப்படியே விட்டுடாங்கன்னா, அந்த தண்ணி evaporate ஆகி போறதுக்கு இதுக்கு மேல இந்த ஓட்டைகள் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். அத்தன நூற்றாண்டுகளுக்கு முன்னாடி ஜனங்க எவ்வளவு புத்திசாலிகளா இருந்தாங்க அண்றத இது காட்டுது.



#PraveenMohanTamil #காஞ்சிபுரம் #தமிழன்

Комментарии

Информация по комментариям в разработке