ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 3. லங்காபிரவேசம், லங்கினி பங்கம்

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 3. லங்காபிரவேசம், லங்கினி பங்கம்

ஸ்ரீ ராமஜயம்! ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

எழுத்து & இயக்கம் : வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் : அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.


3. லங்காபிரவேசம், லங்கினி பங்கம்

ராகம் : அடாணா

பல்லவி

குதித்தாரே மாருதி கடல் மீதிருந்து
புதிதாய்விளங்கும் லங்கா புரியில். (கு)

அனுபல்லவி

குபேரபட்டிணம் கொம்பு முளைத்த ராக்கதர்
அசாத்திய சூரர் அனுமத் ஆண்டவர் (கு)

சரணம்

லங்கினியும் வந்தாளே
லட்சியமில்லையே
ஓங்கி அறைந்தாரே
ஓடி விட்டாளே (கு)

பிரமனின் வாக்கு மெய்யாச்சே
அரங்கினில் அனுமன்
இறங்கி விட்டாரே (கு)

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம்
#aitechnology

Комментарии

Информация по комментариям в разработке