TNPSC Group 1 Exam Topper| K.Soundharya | Erode | Exclusive Interview | Exam Tips | Deputy Collector

Описание к видео TNPSC Group 1 Exam Topper| K.Soundharya | Erode | Exclusive Interview | Exam Tips | Deputy Collector

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தமிழக அளவில் 13ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள பெருமாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா அவர்கள்.

திருமதி சௌந்தர்யா தனது பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை பெருந்துறையில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தவர். தனது பொறியியல் பட்டப்படிப்பை கொங்கு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு படிப்பை படித்து முடித்தவர்

திருமதி சௌந்தர்யாவின் தந்தையார் குழந்தைவேலு அவர்கள் சொந்தமாக தறி வைத்திருந்து காலமாகி விட்டார். தாயார் திருமதி கோமதி அவர்கள் தற்போது தறித் தொழிலையும் விவசாயத்தையும் பார்த்து வருகிறார். இவரது கணவர் திரு பூபதி ராஜா ஒரு பொறியல் பட்டதாரி, பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இவருடைய மாமனார் திரு ரங்கசாமி மற்றும் மாமியார் திருமதி தனலட்சுமி இவர் இவருடைய வெற்றிக்கு மிகுந்த துணையாக இருந்தார்கள் என்று தெரிவிக்கிறார். மேலும் சௌந்தர்யாவின் சகோதரர் திரு ரமேஷ் குமார் நில அளவை துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

2015 ஆம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் திருமணம் ஆனவர். தனது போட்டி தேர்வுக்கான படிப்பை தொடர்ந்து உள்ளார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் மிகப்பெரிய உதாரணமாவர். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் இரண்டு தேர்விலும் வெற்றி பெற்று பதிவுத்துறையில் துணை பதிவாளராக பணி ஆணையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணமும் குழந்தைப் பேறும் பெரிய தடை அல்ல என்று நிரூபித்தது மட்டுமல்லாது இன்று துணை ஆட்சியராக பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.

துணை ஆட்சியராக பணி நியமனம் பெற்ற சௌந்தர்யா அவர்களுக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துகள்.

#tnpsc #tnpscexam #tnpscgroup1 #topper #competition #exam #tips #interview #exclusive #statetopper #group1 #soundharya #dc

Ms.K.Soundarya from Perumampalayam village in Perunthurai Taluk of Erode district has secured13th position in Tamil Nadu in the recently released TNPSC Group 1 examination and allotted Deputy Collector post.

Mrs. Soundarya did her schooling up to class 10 at Vivekananda Matriculation Higher Secondary School, Perundurai and her higher secondary school education at Kongu Velalar High School in the same town. She completed her engineering degree in Electronics and Telecommunication from Kongu College of Engineering.

Mrs. Soundarya's father, Kulandaivelu, owned a loom and passed away. Mother Mrs. Gomathi is currently engaged in weaving and agriculture. Her husband Mr Bhupathi Raja is an engineering graduate working in Bangalore. The couple has one son. She says that her father-in-law Mr. Rangaswamy and mother-in-law Mrs. Dhanalakshmi were very supportive of her success. Also Soundarya's brother Mr. Ramesh Kumar is working as Junior Assistant in Land Survey Department.

She completed her Engineering degree in 2015 and is married. She continues to prepare for her competitive exams. She is a great example of how hard work pays off. It is also worth mentioning that she cleared both the group exams held last year and got the appointment order as Deputy Registrar in the Registration Department.

Not only has she proved that marriage and child bearing is not a big obstacle, she has also got the appointment order as Deputy Collector now.

On behalf of our channel, we congratulate her for this grand success. All the Best.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке